my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

மறதி

 
மறதி ப்ரொபசர் ஜான் ஒரு நாள் வீடு மாற்றினார் ...காலேஜில் இருந்து திரும்பி வரும் போது 

ஞாபகம் இருக்கட்டும் என்று அவர் மனைவி புது முகவரியை நிறைய துண்டுச் சீட்டுகளில் எழுதி 

அவரின் எல்லா பாக்கெட்டுகளிலும் போட்டு வைத்தார்...காலேஜில் எல்லா துண்டு சீட்டையும் 

பயன்படுத்தி விட்டு அவர்சாயங்காலம் காரில் வீடு திரும்பினார்...பழைய வீட்டுக்கு வந்ததும் தான் 

அவர் வீடு மாற்றி விட்டது தெரிந்தது எங்கே போவது என்று தெரியாமல் வீதியில் விளையாடிக் 

கொண்டு இருந்த ஒரு சிறுமியைப் பார்த்து "ஏ பாப்பா ப்ரொபசர் ஜானோட புது வீடு தெரியுமா?" 

என்றார்...அதற்கு அந்த சிறுமி " அடுத்த தெருவில் முதல் வீடு அப்பா" என்றாள்...











செய்தி: மனிதன் தான் யார் என்பதையே மறந்து விட்டான்....

வியாழன், 25 ஜூலை, 2013

படைப்பு பற்றி ஓஷோவின் கருத்து



படைப்பு என்பது எப்பொழுதுமே உணர்ச்சிகரமானது; அக்கறையுடையது - ஏனெனில், படைப்பு என்பது - காதல் - உண்டாக்குதல். காதலுடையவனால் தான் ஆக்குதல் செய்ய முடியும். படைப்பினால் எதையுமே உதாசீனப் படுத்த முடியாது. ஒரு மனிதன் உணர்ச்சியற்றவனாக இருக்கும் பட்சத்தில் அவனிடமுள்ள ஆக்கும் திறமை மறைந்தொழிந்து போய்விடுகிறது. படைப்பாளிக்கு தேவை உயிர்ப்பு (aliveness), சக்தி (energy), பற்றுதல்(passion). உருகியொழுகி ஓடும் - ஒருமுகப்படுத்தப் பட்ட வாழ்வின் மீதான காதலுடன் - பாய்ந்து ஓடும் நதியைப் போல ஆற்றலுடன், ஒடுவது தான் படைப்பு.

உங்களின் பார்வை உதாசீனப் படுத்தும் நோக்கிலிருந்தால், அழகு உங்கள் கண்களுக்குத் தெரியாது. உதாசீனப் போக்கு, வாழ்வில் கிடைக்கும் அனைத்தையுமே சாதாரணமாக்கிவிடும். உ-ம் - உங்கள் வேலை; தொழில். இதென்ன பெரிய வேலை என்ற அலட்சியம் உங்கள் நோக்கில் இருக்கும் பொழுது, அந்த வேலை - தொழில் உங்களுக்கு எந்த ஈர்ப்பையும், ஆர்வத்தையும் தராது. வேலை என்ற இடத்தில், வாழ்க்கை என்ற வார்த்தையை இட்டுப் பாருங்கள். இப்பொழுது, புரியும், மனிதர்கள் எதனால், தங்களுக்குள் வாழ்வின் ஆதர்சனமான வெப்பத்தை இழந்து, குளிர்ந்து குறுகிப் போய்விடுகிறார்கள் என்று.

இந்த விபத்து கிழக்கே நிகழ்ந்தது. மதங்கள் ஆசாரம் என்ற பெயரில் தவறான பாதையில், தவறான வழிகாட்டுதலுடன் நடை போட ஆரம்பித்தது. பற்றுதலுடன் வாழ்வை நோக்குவது தவறு என்ற கருத்தில் மக்களின் மனதில் நிலை நிறுத்தப்பட்டது (conditioned); பயிற்றுவிக்கப் பட்டது (trained). 

ஒருமுறை ஓஷோவைப் பார்க்க ஒரு துறவி வருகை தந்தார். அப்பொழுது ஓஷோ, தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பல மலர்கள் தோட்டத்தில் மலர்ந்திருந்தன. துறவியின் பார்வையில் அசூயை. அவர் ஒஷோவிடம் கேட்டார் - "இந்த மலர்களை நீங்கள் விரும்புகிறீர்களா? தோட்ட வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" அவருடைய தொனியில் கண்டனம். துறவறத்தில் ஈடுபட்டவர்கள், வாழ்வை இரசிக்கும் காரியங்களில் பற்றுதல் செய்யக் கூடாது என்ற தொனி இருந்தது.

நான் புறக்கணிப்பவனில்லை. புறக்கணிப்பு என்பது எதிர்மறை நடை. தற்கொலை செய்து கொள்ளும் மனம் கொண்டவனின் செயல். உதாசீனம் செய்பவனை எதுவும் பாதிக்காது. அவன் தன் வாழ்க்கையை புறக்கணிப்பு என்ற பிரச்னைகளை தவிர்க்கும், தப்பித்து ஓடும் வழியில் நடத்திச் செல்கிறான். எதுவுமே - எந்த ஒரு நிகழ்வுமே - அவனை அதிரச் செய்யாது; கவனத்தைப் பிசகச் செய்யாது. எதற்குமே அசைந்து கொடுக்காத நிலை தேவையில்லை. மனம் இந்நிலையில் எப்பொழுதுமே மகிழ்ச்சியையும், பொங்கி வழியும் ஆற்றலையும் பெறாது.

புறக்கணிப்பை, மக்கள், மதங்கள் பரிந்துரைக்கும் வாழ்வுமுறையாக - பயணம் செல்லும் பாதையாகத் தேர்வு செய்து விட்டனர் - பயணிக்க முடிகிறதோ இல்லையோ! முடிந்தவர்கள் வாழ்வில் வெற்றி பெற்றவர்களாகவும், சாதித்தவர்களாகவும் கொண்டாடப் பட்டார்கள். அவர்கள் எதை சாதித்தார்கள்? வாழ்வின் நேசமான பகுதிகளை, பிற மனிதர்களைப் பற்றுதலோடு நோக்கும் பண்பை இழந்து, விதைத்தது முளைத்தது என்ற கணக்கில் வாழ்ந்து, பிரச்னைகளைச் சந்திக்கும் முயற்சியை விடுத்து ஓடிய வாழ்வா கொண்டாடப் பட வேண்டியது? 

சாதிப்பது, நிகழ்த்திக் காட்டுவது, பரிபூரணமாக உணர்வது இவையே இயற்கையுடன் ஒன்றிய நேர்முறை வழிமுறை (Positive attidue). கடவுள் இதற்கு ஒரு நல்ல முன்மாதிரி. அவன் துறவறம் பூண்டிருந்தால், இந்த பிரபஞ்சத்தையும், கோள்களையும், துணகளையும், விலங்குகளையும், பறவைகளையும், புழுக்களையும், பூச்சிகளையும், இன்னபிறவற்றையும் படைத்திருக்க முடியுமா? பச்சைக்கிளியின் வண்ணம் தான் எத்தனை அழகு? உணர்ச்சியற்ற ஜடமாக இறைவன் இருந்திருந்தால், இத்தனை ரசிப்புடன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்க முடியுமா? ஒவ்வொரு படைப்பிலும் உயிர்ப்புடன், ரசனையுடன், பற்றுதலுடன் செய்த இறைவனை பற்றற்ற வாழ்வுமுறைப் பாதையில் சென்றடைய முடியுமா? காந்தியைப் படைத்த அதே அக்கறையுடன் தான், அவன் ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறகுகளில் வண்ணம் தெளிவித்தான்.

இறைவன் அன்பானவன்.(LOVE). இறைவன் முழுமையானவன். அந்த முழுமையில் ஒன்றாகிப் போக நீங்கள் விரும்புவீர்களேயானால், நீங்களும் காதலில் ஈடுபடுங்கள். அன்பு செய்தலில்). அதை விடுத்து, விரதமிருந்து, பற்றுதலைப் போக்கி, இறைவனை நோக்கி செல்வோமென்பது சுயமாக மெல்லச் சாகும் வழியாகும். 

காதல் செய்யுங்கள்; ஆழ்ந்த காதல் செய்யுங்கள்; முழுமையாக உங்கள் காதலில் மூழ்குங்கள்; அந்தக் காதலிலே உள்ளமும் உடலும் கரைந்து செல்லும் அளவிற்குக் காதல் செய்யுங்கள் - அப்பழுக்கற்ற படைக்கும் சக்தியாக வழிந்தோடும் நிலை எய்துங்கள்; அந்த நிலையில் தான் உங்களால் கடவுளின் உயிர்ப்பு சக்தியில் பங்கேற்றுக் கொள்ளவும், கடவுளுடன் கைகோர்த்துக் கொண்டு நடந்து செல்லவும் இயலும்.

எனக்கு படைப்பு என்பது - பிரார்த்தனை; தியானம்; அதுவே வாழ்க்கை.

செவ்வாய், 16 ஜூலை, 2013

ஓஷோவின் சிரிப்பு கதைகள்

இரண்டு மனவியல் டாக்டர்கள் தங்கள் தொழில் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்...
ஒருவர் "உங்கள் வேலை எப்படி போகிறது?" என்றார்...
இன்னொருவர் "நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது....ஒரு மனிதன் கவுன்சிலிங்கிற்காக வந்திருந்தான்....அவன் தான் எல்லோரையும் விட உருவத்தில் கொஞ்சம் சிறியதாக இருப்பதாக தாழ்வு மனப்பான்மையில் இருந்தான்,,,,,நான் அவனுக்கு "இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை...உலகத்தில் சாதனையாளர்கள் எல்லாம் பெரும்பாலும் உருவத்தில் சற்றுசிறியவர்களே" என்றெல்லாம் கூறி கவுன்சிலிங் கொடுத்துக் கொண்டிருந்தேன்...பணமும் நிறைய கொடுத்தான்....என்னுடைய துரதிர்ஷ்டம் அவனை இழந்து விட்டேன்" என்றார்...


"ஓ அப்படியா...என்ன ஆயிற்று அவனுக்கு" என்று கேட்டார் இன்னொருவர்...

"ஒருநாள் என் வீட்டுப் பூனை அவனை தின்று விட்டது...."

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

ஓஷோ சிரிப்பு கதைகள்


ஒரு மன நல மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் மூன்று பைத்தியங்களுக்கு அவர்கள் குணமடைந்து விட்டனரா என்று அறிய ஒரு டெஸ்ட் வைத்தார்....மூன்று பேரையும் தண்ணீர் இல்லாத ஒரு நீச்சல் குளத்தின் டைவிங் பலகைக்கு அழைத்துச் சென்று குதிக்கச் சொன்னார்...

முதல் பைத்தியம் குதித்து விட்டு காலை உடைத்துக் கொண்டது...

இரண்டாம் பைத்தியம் குதித்து விட்டு கையை உடைத்துக் கொண்டது..

மூன்றாவது "இல்லை டாக்டர் நான் குதிக்க மாட்டேன் " என்றது.. மகிழ்ச்சியடைந்த டாக்டர் "வாழ்த்துக்கள் நீங்கள் குணமாகி விட்டீர்கள் போல தோன்றுகிறது....சரி ஏன் குதிக்க மாட்டேன் என்றீர்கள்?" என்று கேட்டார்...

"
அது வந்து டாக்டர் எனக்கு நீச்சல் தெரியாது"

ஓஷோ: மனிதன் எப்போதும் திருந்துவதே இல்லை.....

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

ஓஷோவின் நகைச்சுவை


பாதிரியார் ஹோலி-கோகனட் ஒரு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்....
நடு வழியில் துணை பைலட் வந்து " இந்த விமானத்தின் நான்கு இஞ்சின்களில் ஒன்று பழுதாகி விட்டது....ஆனால் கவலைப்பட ஒன்றும் இல்லை....அதிக பட்சமாக நாம் மூன்று மணி நேரம் தாமதமாகச் செல்வோம் அவ்வளவுதான்" என்றார்
சிறிது நேரம் சென்றதும் அவர் மறுபடியும் வந்து "மன்னிக்கவும்...இரண்டாவது இன்ஜினும் செயலிழந்து விட்டது...ஆனால் கவலைப்பட வேண்டாம்...அதிக பட்சம் ஆறு மணி நேரம் தாமதமாகும்" என்றார்...

கொஞ்ச நேரம் கழித்து வந்து "மூன்றாவது இன்ஜினும் போய் விட்டது....ஆனாலும் பயப்பட ஒன்றும் இல்லை...என்ன அதிக பட்சம் ஒன்பது மணி நேரம் லேட் ஆகும்" என்றார்...
சிறிது நேரம் கழித்து அவர் மறுபடியும் வந்து "சாரி...நான்காவது இன்ஜினும் நின்று விட்டது...இனி எல்லாரும் அவரவர் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்ள வேண்டியதுதான் " என்றார்....

ஹோலி-கோகநட்டின் அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி இதைக் கேட்டு "ஐயோ, கடவுளே, இப்படி ஆயிருச்சே,,எல்லாம் போச்சே" என்று கதறி அழுது அலப்பறை செய்தாள்....
பாதிரியார் அவளிடம் திரும்பி "ஏன் இப்படி அழுகிறாய்....மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பன்னிரண்டு மணி நேரம் லேட்டாகப் போவோம், அவ்வளவு தானே" என்றார்...... 

செவ்வாய், 29 ஜனவரி, 2013

ஓஷோவின் நகைச்சுவை




ஒரு நாள் ஒரு இந்தியன், ஒரு ஆப்பிரிக்கன், ஒரு அமெரிக்கன் மூன்று பேரும் ஒரு பேருந்தில் ஏறினார்கள்.

பேருந்து புறப்பட்டதும் ஒரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..

அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது....அவனும் அதைத் தட்டி விட 

அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது...

அதை அவன் அப்படியே பிடித்து சாப்பிட்டு விட்டான்....சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ உள்ளே 

வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..

அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது..

அவனும் தட்டி விட அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது..

இந்த முறையும் அவன் அதை பிடித்து அப்படியே சாப்பிட்டு விட்டான்.

சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..

அதை அவன் தட்டி விட ,அது இந்தியன் மேல் வந்து அமர்ந்தது...

இந்த முறை அந்த ஈயை அவன் கையில் பிடித்து வைத்துக் கொண்டு ஆப்பிரிக்கனிடம் சென்று

"சார், சுவையான ஈ இருக்கு,,,வாங்கறீங்களா? பத்து ரூபாய் தான்" என்றான்.. 


ஓஷோ: இந்தியா எப்போதோ தன் ஆன்மீக வாழ்கையை இழந்து பணத்தின் மேல் குறியாகி விட்டது....



வெள்ளி, 25 ஜனவரி, 2013

பைத்தியக்காரன்(கலீல் ஜிப்ரான்)


நான் எப்படி பைத்தியமானேன் என்று கேட்கிறீர்களா?

பல கடவுள்கள் பிறப்பதற்கு, நீண்ட நாட்களுக்கு முன், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து ஒருநாள் எழுந்தபோது, என்னுடைய முகமூடிகள் திருட்டுப் போயிருந்ததைக் கண்டேன். என்னுடைய ஏழு பிறப்புகளில் என்னை அலங்கரித்த ஏழு முகமூடிகள் அவை.

‘திருடர்கள், சபிக்கப்பட்ட திருடர்கள்’ என்று கத்திக்கொண்டே தெருவில் இறங்கி ஓடினேன்.

ஆண்களும், பெண்களும் என்னைக் கண்டு சிரித்தனர். சிலர் என்னைக் கண்டு பயந்து வீட்டுக்குள் ஓடினர்.

நான் கடைவீதியை அடைந்தபோது, கூரையில் நின்று கொண்டிருந்த இளைஞன் ஒருவன், ‘இதோ ஒரு பைத்தியக்காரன்’ என்று என்னைப் பார்த்துக் கத்தினான். அவன் முகத்தைப் பார்க்க நிமிர்ந்தபோது, முகமூடியற்ற என் முகத்தை சூரியன், முதல் முறையாக முத்தமிட்டது. என் ஆன்மா ஆழமான காதலில் விழுந்தது. அதுமுதல் எனக்கு முகமூடிகள் தேவைப்படவில்லை. ஆழ்ந்த அமைதியிலிருந்தபடி, ‘திருடர்கள், ஆசிர்வதிக்கப்பட்ட திருடர்கள்’ என்று அழுதேன்.

இப்படித்தான் நான் பைத்தியமானேன்.

என்னுடைய பைத்தியக்காரத்தனத்தில், சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் கண்டுகொண்டேன்; தனிமையின் சுதந்திரம் மற்றும் புரிந்துகொள்ளப் படுவதிலிருந்து பாதுகாப்பு; நம்மைப் புரிந்து கொள்வதன்மூலம், நம்மில் எதையோ அடிமையாக்குபவர்களிடம் இருந்து.

என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் கர்வப்படாமல் இருக்கட்டும். சிறையிலிருக்கும் திருடன்கூட, இன்னொரு திருடனிடமிருந்து பாதுகாப்பாகவே இருக்கிறான்.
*
சூரிய உதயத்தின்போது ஒரு நரி தன் நிழலைப் பார்த்தபின் சொல்லிக் கொண்டது, ‘இன்று உணவாக ஒரு ஒட்டகத்தை சாப்பிடுவேன்’.

பிறகு, பகல் முழுவதும் ஒட்டகத்தைத் தேடி அலைந்தது.

மதியத்தில் தன் நிழலைப் பார்த்தபின் சொல்லிக்கொண்டது, ‘ஒரு எலியே போதும்’.
*

நேற்று இரவு ஒரு புதிய சந்தோஷத்தைக் கண்டுபிடித்தேன். அதை முயன்றுகொண்டிருந்தபோது, ஒரு தேவனும், அசுரனும் வேகமாக வந்தார்கள். என் வீட்டுக் கதவருகே சந்தித்துக் கொண்ட அவர்கள், என்னுடைய சந்தோஷத்தைக் கண்டு, சண்டையிடத் தொடங்கினார்கள்; ‘அது மிகவும் புனிதமானது’, ‘இல்லை அது பாவச் செயல்’ என்று.