my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

மறதி

 
மறதி ப்ரொபசர் ஜான் ஒரு நாள் வீடு மாற்றினார் ...காலேஜில் இருந்து திரும்பி வரும் போது 

ஞாபகம் இருக்கட்டும் என்று அவர் மனைவி புது முகவரியை நிறைய துண்டுச் சீட்டுகளில் எழுதி 

அவரின் எல்லா பாக்கெட்டுகளிலும் போட்டு வைத்தார்...காலேஜில் எல்லா துண்டு சீட்டையும் 

பயன்படுத்தி விட்டு அவர்சாயங்காலம் காரில் வீடு திரும்பினார்...பழைய வீட்டுக்கு வந்ததும் தான் 

அவர் வீடு மாற்றி விட்டது தெரிந்தது எங்கே போவது என்று தெரியாமல் வீதியில் விளையாடிக் 

கொண்டு இருந்த ஒரு சிறுமியைப் பார்த்து "ஏ பாப்பா ப்ரொபசர் ஜானோட புது வீடு தெரியுமா?" 

என்றார்...அதற்கு அந்த சிறுமி " அடுத்த தெருவில் முதல் வீடு அப்பா" என்றாள்...











செய்தி: மனிதன் தான் யார் என்பதையே மறந்து விட்டான்....

வியாழன், 25 ஜூலை, 2013

படைப்பு பற்றி ஓஷோவின் கருத்து



படைப்பு என்பது எப்பொழுதுமே உணர்ச்சிகரமானது; அக்கறையுடையது - ஏனெனில், படைப்பு என்பது - காதல் - உண்டாக்குதல். காதலுடையவனால் தான் ஆக்குதல் செய்ய முடியும். படைப்பினால் எதையுமே உதாசீனப் படுத்த முடியாது. ஒரு மனிதன் உணர்ச்சியற்றவனாக இருக்கும் பட்சத்தில் அவனிடமுள்ள ஆக்கும் திறமை மறைந்தொழிந்து போய்விடுகிறது. படைப்பாளிக்கு தேவை உயிர்ப்பு (aliveness), சக்தி (energy), பற்றுதல்(passion). உருகியொழுகி ஓடும் - ஒருமுகப்படுத்தப் பட்ட வாழ்வின் மீதான காதலுடன் - பாய்ந்து ஓடும் நதியைப் போல ஆற்றலுடன், ஒடுவது தான் படைப்பு.

உங்களின் பார்வை உதாசீனப் படுத்தும் நோக்கிலிருந்தால், அழகு உங்கள் கண்களுக்குத் தெரியாது. உதாசீனப் போக்கு, வாழ்வில் கிடைக்கும் அனைத்தையுமே சாதாரணமாக்கிவிடும். உ-ம் - உங்கள் வேலை; தொழில். இதென்ன பெரிய வேலை என்ற அலட்சியம் உங்கள் நோக்கில் இருக்கும் பொழுது, அந்த வேலை - தொழில் உங்களுக்கு எந்த ஈர்ப்பையும், ஆர்வத்தையும் தராது. வேலை என்ற இடத்தில், வாழ்க்கை என்ற வார்த்தையை இட்டுப் பாருங்கள். இப்பொழுது, புரியும், மனிதர்கள் எதனால், தங்களுக்குள் வாழ்வின் ஆதர்சனமான வெப்பத்தை இழந்து, குளிர்ந்து குறுகிப் போய்விடுகிறார்கள் என்று.

இந்த விபத்து கிழக்கே நிகழ்ந்தது. மதங்கள் ஆசாரம் என்ற பெயரில் தவறான பாதையில், தவறான வழிகாட்டுதலுடன் நடை போட ஆரம்பித்தது. பற்றுதலுடன் வாழ்வை நோக்குவது தவறு என்ற கருத்தில் மக்களின் மனதில் நிலை நிறுத்தப்பட்டது (conditioned); பயிற்றுவிக்கப் பட்டது (trained). 

ஒருமுறை ஓஷோவைப் பார்க்க ஒரு துறவி வருகை தந்தார். அப்பொழுது ஓஷோ, தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பல மலர்கள் தோட்டத்தில் மலர்ந்திருந்தன. துறவியின் பார்வையில் அசூயை. அவர் ஒஷோவிடம் கேட்டார் - "இந்த மலர்களை நீங்கள் விரும்புகிறீர்களா? தோட்ட வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" அவருடைய தொனியில் கண்டனம். துறவறத்தில் ஈடுபட்டவர்கள், வாழ்வை இரசிக்கும் காரியங்களில் பற்றுதல் செய்யக் கூடாது என்ற தொனி இருந்தது.

நான் புறக்கணிப்பவனில்லை. புறக்கணிப்பு என்பது எதிர்மறை நடை. தற்கொலை செய்து கொள்ளும் மனம் கொண்டவனின் செயல். உதாசீனம் செய்பவனை எதுவும் பாதிக்காது. அவன் தன் வாழ்க்கையை புறக்கணிப்பு என்ற பிரச்னைகளை தவிர்க்கும், தப்பித்து ஓடும் வழியில் நடத்திச் செல்கிறான். எதுவுமே - எந்த ஒரு நிகழ்வுமே - அவனை அதிரச் செய்யாது; கவனத்தைப் பிசகச் செய்யாது. எதற்குமே அசைந்து கொடுக்காத நிலை தேவையில்லை. மனம் இந்நிலையில் எப்பொழுதுமே மகிழ்ச்சியையும், பொங்கி வழியும் ஆற்றலையும் பெறாது.

புறக்கணிப்பை, மக்கள், மதங்கள் பரிந்துரைக்கும் வாழ்வுமுறையாக - பயணம் செல்லும் பாதையாகத் தேர்வு செய்து விட்டனர் - பயணிக்க முடிகிறதோ இல்லையோ! முடிந்தவர்கள் வாழ்வில் வெற்றி பெற்றவர்களாகவும், சாதித்தவர்களாகவும் கொண்டாடப் பட்டார்கள். அவர்கள் எதை சாதித்தார்கள்? வாழ்வின் நேசமான பகுதிகளை, பிற மனிதர்களைப் பற்றுதலோடு நோக்கும் பண்பை இழந்து, விதைத்தது முளைத்தது என்ற கணக்கில் வாழ்ந்து, பிரச்னைகளைச் சந்திக்கும் முயற்சியை விடுத்து ஓடிய வாழ்வா கொண்டாடப் பட வேண்டியது? 

சாதிப்பது, நிகழ்த்திக் காட்டுவது, பரிபூரணமாக உணர்வது இவையே இயற்கையுடன் ஒன்றிய நேர்முறை வழிமுறை (Positive attidue). கடவுள் இதற்கு ஒரு நல்ல முன்மாதிரி. அவன் துறவறம் பூண்டிருந்தால், இந்த பிரபஞ்சத்தையும், கோள்களையும், துணகளையும், விலங்குகளையும், பறவைகளையும், புழுக்களையும், பூச்சிகளையும், இன்னபிறவற்றையும் படைத்திருக்க முடியுமா? பச்சைக்கிளியின் வண்ணம் தான் எத்தனை அழகு? உணர்ச்சியற்ற ஜடமாக இறைவன் இருந்திருந்தால், இத்தனை ரசிப்புடன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்க முடியுமா? ஒவ்வொரு படைப்பிலும் உயிர்ப்புடன், ரசனையுடன், பற்றுதலுடன் செய்த இறைவனை பற்றற்ற வாழ்வுமுறைப் பாதையில் சென்றடைய முடியுமா? காந்தியைப் படைத்த அதே அக்கறையுடன் தான், அவன் ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறகுகளில் வண்ணம் தெளிவித்தான்.

இறைவன் அன்பானவன்.(LOVE). இறைவன் முழுமையானவன். அந்த முழுமையில் ஒன்றாகிப் போக நீங்கள் விரும்புவீர்களேயானால், நீங்களும் காதலில் ஈடுபடுங்கள். அன்பு செய்தலில்). அதை விடுத்து, விரதமிருந்து, பற்றுதலைப் போக்கி, இறைவனை நோக்கி செல்வோமென்பது சுயமாக மெல்லச் சாகும் வழியாகும். 

காதல் செய்யுங்கள்; ஆழ்ந்த காதல் செய்யுங்கள்; முழுமையாக உங்கள் காதலில் மூழ்குங்கள்; அந்தக் காதலிலே உள்ளமும் உடலும் கரைந்து செல்லும் அளவிற்குக் காதல் செய்யுங்கள் - அப்பழுக்கற்ற படைக்கும் சக்தியாக வழிந்தோடும் நிலை எய்துங்கள்; அந்த நிலையில் தான் உங்களால் கடவுளின் உயிர்ப்பு சக்தியில் பங்கேற்றுக் கொள்ளவும், கடவுளுடன் கைகோர்த்துக் கொண்டு நடந்து செல்லவும் இயலும்.

எனக்கு படைப்பு என்பது - பிரார்த்தனை; தியானம்; அதுவே வாழ்க்கை.

செவ்வாய், 16 ஜூலை, 2013

ஓஷோவின் சிரிப்பு கதைகள்

இரண்டு மனவியல் டாக்டர்கள் தங்கள் தொழில் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்...
ஒருவர் "உங்கள் வேலை எப்படி போகிறது?" என்றார்...
இன்னொருவர் "நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது....ஒரு மனிதன் கவுன்சிலிங்கிற்காக வந்திருந்தான்....அவன் தான் எல்லோரையும் விட உருவத்தில் கொஞ்சம் சிறியதாக இருப்பதாக தாழ்வு மனப்பான்மையில் இருந்தான்,,,,,நான் அவனுக்கு "இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை...உலகத்தில் சாதனையாளர்கள் எல்லாம் பெரும்பாலும் உருவத்தில் சற்றுசிறியவர்களே" என்றெல்லாம் கூறி கவுன்சிலிங் கொடுத்துக் கொண்டிருந்தேன்...பணமும் நிறைய கொடுத்தான்....என்னுடைய துரதிர்ஷ்டம் அவனை இழந்து விட்டேன்" என்றார்...


"ஓ அப்படியா...என்ன ஆயிற்று அவனுக்கு" என்று கேட்டார் இன்னொருவர்...

"ஒருநாள் என் வீட்டுப் பூனை அவனை தின்று விட்டது...."

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

ஓஷோ சிரிப்பு கதைகள்


ஒரு மன நல மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் மூன்று பைத்தியங்களுக்கு அவர்கள் குணமடைந்து விட்டனரா என்று அறிய ஒரு டெஸ்ட் வைத்தார்....மூன்று பேரையும் தண்ணீர் இல்லாத ஒரு நீச்சல் குளத்தின் டைவிங் பலகைக்கு அழைத்துச் சென்று குதிக்கச் சொன்னார்...

முதல் பைத்தியம் குதித்து விட்டு காலை உடைத்துக் கொண்டது...

இரண்டாம் பைத்தியம் குதித்து விட்டு கையை உடைத்துக் கொண்டது..

மூன்றாவது "இல்லை டாக்டர் நான் குதிக்க மாட்டேன் " என்றது.. மகிழ்ச்சியடைந்த டாக்டர் "வாழ்த்துக்கள் நீங்கள் குணமாகி விட்டீர்கள் போல தோன்றுகிறது....சரி ஏன் குதிக்க மாட்டேன் என்றீர்கள்?" என்று கேட்டார்...

"
அது வந்து டாக்டர் எனக்கு நீச்சல் தெரியாது"

ஓஷோ: மனிதன் எப்போதும் திருந்துவதே இல்லை.....

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

ஓஷோவின் நகைச்சுவை


பாதிரியார் ஹோலி-கோகனட் ஒரு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்....
நடு வழியில் துணை பைலட் வந்து " இந்த விமானத்தின் நான்கு இஞ்சின்களில் ஒன்று பழுதாகி விட்டது....ஆனால் கவலைப்பட ஒன்றும் இல்லை....அதிக பட்சமாக நாம் மூன்று மணி நேரம் தாமதமாகச் செல்வோம் அவ்வளவுதான்" என்றார்
சிறிது நேரம் சென்றதும் அவர் மறுபடியும் வந்து "மன்னிக்கவும்...இரண்டாவது இன்ஜினும் செயலிழந்து விட்டது...ஆனால் கவலைப்பட வேண்டாம்...அதிக பட்சம் ஆறு மணி நேரம் தாமதமாகும்" என்றார்...

கொஞ்ச நேரம் கழித்து வந்து "மூன்றாவது இன்ஜினும் போய் விட்டது....ஆனாலும் பயப்பட ஒன்றும் இல்லை...என்ன அதிக பட்சம் ஒன்பது மணி நேரம் லேட் ஆகும்" என்றார்...
சிறிது நேரம் கழித்து அவர் மறுபடியும் வந்து "சாரி...நான்காவது இன்ஜினும் நின்று விட்டது...இனி எல்லாரும் அவரவர் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்ள வேண்டியதுதான் " என்றார்....

ஹோலி-கோகநட்டின் அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி இதைக் கேட்டு "ஐயோ, கடவுளே, இப்படி ஆயிருச்சே,,எல்லாம் போச்சே" என்று கதறி அழுது அலப்பறை செய்தாள்....
பாதிரியார் அவளிடம் திரும்பி "ஏன் இப்படி அழுகிறாய்....மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பன்னிரண்டு மணி நேரம் லேட்டாகப் போவோம், அவ்வளவு தானே" என்றார்...... 

செவ்வாய், 29 ஜனவரி, 2013

ஓஷோவின் நகைச்சுவை




ஒரு நாள் ஒரு இந்தியன், ஒரு ஆப்பிரிக்கன், ஒரு அமெரிக்கன் மூன்று பேரும் ஒரு பேருந்தில் ஏறினார்கள்.

பேருந்து புறப்பட்டதும் ஒரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..

அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது....அவனும் அதைத் தட்டி விட 

அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது...

அதை அவன் அப்படியே பிடித்து சாப்பிட்டு விட்டான்....சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ உள்ளே 

வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..

அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது..

அவனும் தட்டி விட அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது..

இந்த முறையும் அவன் அதை பிடித்து அப்படியே சாப்பிட்டு விட்டான்.

சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..

அதை அவன் தட்டி விட ,அது இந்தியன் மேல் வந்து அமர்ந்தது...

இந்த முறை அந்த ஈயை அவன் கையில் பிடித்து வைத்துக் கொண்டு ஆப்பிரிக்கனிடம் சென்று

"சார், சுவையான ஈ இருக்கு,,,வாங்கறீங்களா? பத்து ரூபாய் தான்" என்றான்.. 


ஓஷோ: இந்தியா எப்போதோ தன் ஆன்மீக வாழ்கையை இழந்து பணத்தின் மேல் குறியாகி விட்டது....



வெள்ளி, 25 ஜனவரி, 2013

பைத்தியக்காரன்(கலீல் ஜிப்ரான்)


நான் எப்படி பைத்தியமானேன் என்று கேட்கிறீர்களா?

பல கடவுள்கள் பிறப்பதற்கு, நீண்ட நாட்களுக்கு முன், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து ஒருநாள் எழுந்தபோது, என்னுடைய முகமூடிகள் திருட்டுப் போயிருந்ததைக் கண்டேன். என்னுடைய ஏழு பிறப்புகளில் என்னை அலங்கரித்த ஏழு முகமூடிகள் அவை.

‘திருடர்கள், சபிக்கப்பட்ட திருடர்கள்’ என்று கத்திக்கொண்டே தெருவில் இறங்கி ஓடினேன்.

ஆண்களும், பெண்களும் என்னைக் கண்டு சிரித்தனர். சிலர் என்னைக் கண்டு பயந்து வீட்டுக்குள் ஓடினர்.

நான் கடைவீதியை அடைந்தபோது, கூரையில் நின்று கொண்டிருந்த இளைஞன் ஒருவன், ‘இதோ ஒரு பைத்தியக்காரன்’ என்று என்னைப் பார்த்துக் கத்தினான். அவன் முகத்தைப் பார்க்க நிமிர்ந்தபோது, முகமூடியற்ற என் முகத்தை சூரியன், முதல் முறையாக முத்தமிட்டது. என் ஆன்மா ஆழமான காதலில் விழுந்தது. அதுமுதல் எனக்கு முகமூடிகள் தேவைப்படவில்லை. ஆழ்ந்த அமைதியிலிருந்தபடி, ‘திருடர்கள், ஆசிர்வதிக்கப்பட்ட திருடர்கள்’ என்று அழுதேன்.

இப்படித்தான் நான் பைத்தியமானேன்.

என்னுடைய பைத்தியக்காரத்தனத்தில், சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் கண்டுகொண்டேன்; தனிமையின் சுதந்திரம் மற்றும் புரிந்துகொள்ளப் படுவதிலிருந்து பாதுகாப்பு; நம்மைப் புரிந்து கொள்வதன்மூலம், நம்மில் எதையோ அடிமையாக்குபவர்களிடம் இருந்து.

என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் கர்வப்படாமல் இருக்கட்டும். சிறையிலிருக்கும் திருடன்கூட, இன்னொரு திருடனிடமிருந்து பாதுகாப்பாகவே இருக்கிறான்.
*
சூரிய உதயத்தின்போது ஒரு நரி தன் நிழலைப் பார்த்தபின் சொல்லிக் கொண்டது, ‘இன்று உணவாக ஒரு ஒட்டகத்தை சாப்பிடுவேன்’.

பிறகு, பகல் முழுவதும் ஒட்டகத்தைத் தேடி அலைந்தது.

மதியத்தில் தன் நிழலைப் பார்த்தபின் சொல்லிக்கொண்டது, ‘ஒரு எலியே போதும்’.
*

நேற்று இரவு ஒரு புதிய சந்தோஷத்தைக் கண்டுபிடித்தேன். அதை முயன்றுகொண்டிருந்தபோது, ஒரு தேவனும், அசுரனும் வேகமாக வந்தார்கள். என் வீட்டுக் கதவருகே சந்தித்துக் கொண்ட அவர்கள், என்னுடைய சந்தோஷத்தைக் கண்டு, சண்டையிடத் தொடங்கினார்கள்; ‘அது மிகவும் புனிதமானது’, ‘இல்லை அது பாவச் செயல்’ என்று.

சனி, 5 ஜனவரி, 2013

ஓஷோவின் கதைகள்

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான், அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான், உட்னே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான் அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “

பிச்சைக்காரன் “ அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.
வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்

அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டான் .

இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.

அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன் , மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “ என்றவாறே நடக்கலானான்.


ஓஷோ : இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய சந்தோசங்களுக்காக விலைமதிப்பற்ற தியானம் என்பதனை இழந்துவிடுகிறோம்

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

ஓஷோவின் நகைச்சுவை


ஆப்பிரிக்கன் ஒருவன் ஒரு காய்கறி கடைக்கு சென்று "எனக்கு ஒரு பாதி முட்டை கோஸ் வேண்டும்என்றான்.

கடைக்காரன் அதற்கு பாதி கோசெல்லாம் விற்பதில்லை என்றான்.

இல்லை பாதி தான் வேண்டும் என்று அவன் அடம் பிடிக்கவே "இருங்கள்உள்ளே சென்று என் முதலாளியை கேட்கிறேன்என்று சென்றான்.

 அவன் பின்னேயே வந்தது தெரியாமல் கடைக்காரன் முதலாளியிடம் "ஒரு கருப்பு நாய் பாதி முட்டை கோஸ் வேண்டும் என்று அடம் பிடிக்கிறது என்றான்

பின்னால் ஏதோ சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்து உடனே,

 "மேலும் இங்கே நிற்கும் இந்த அழகான பெரிய மனிதருக்கு அதன் இன்னொரு பாதி வேண்டுமாம்என்றான் ...



ஓஷோவின் செய்திமனிதன் மிக மிக தந்திரமானவன்....man is very very cunning ...

சனி, 24 நவம்பர், 2012

ஓஷோவின் நகைசுவை


ஒரு நாள் ஒரு ஆசாமி ஹோட்டலில்தங்கியிருந்தான்....ஹோட்டலை காலி செய்து விட்டு கொஞ்சதூரம் சென்றதும் தான் நினைவு வந்தது .
அவன் தன் குடையைஅறையிலேயே மறந்து விட்டு வந்து விட்டான் என்பது....
திரும்பிவந்து பார்க்கும் போது அந்த அறை ஒரு புது மணத் தம்பதிகளால்வாடகைக்கு எடுக்கப் பட்டிருந்தது....
கதவும்சாத்தியிருந்தது....சாவித் துவாரம் வழியாக உள்ளே என்னபேசுகிறார்கள் என்று கேட்டான்...
கணவன்அன்பேஇந்த கண்கள் யாருடையவை?
மனைவி: உன்னுடையது தான் அன்பே
 : இந்த உதடுகள் யாருடையவை?
 : உன்னுடையது தான் அன்பே
 : இந்த கன்னம் யாருடையது?
 உன்னுடையது தான் அன்பே
இந்த ஆசாமி பொறுக்க முடியாமல் வெளியிலிருந்து கத்தினான்...."அந்த மஞ்சள் கலர் கைப்பிடிபோட்ட குடை மட்டும் என்னுடையது....."

வியாழன், 1 நவம்பர், 2012

மனதின் கதை – ஓஷோவின் கதை


ஓரு பிரபல திபெத்திய கதை........                                                    

ஓரு மனிதன் ஓரு வயதான குருவுக்குத் தினமும் சேவை
புரிந்து வந்தான். உணவு தருவது, கிணற்றிலிருந்து நீர்
இறைப்பது, கால்களை அமுக்கிவிடுவது போன்ற
சேவைகள். வயதான குருவோ, “ஏன் உன் நேரத்தை
வீண் செய்கிறாய்என்று கூறுவது வழக்கம். ஏனெனில்
அந்த குருவுக்கு இந்த சேவையின் நோக்கம் ஏதோ
ஆசைதான் என்பது தெளிவாகப் புரிந்திருந்தது.                               

முடிவில் ஓரு நாள் அந்த மனிதன்,  “நான் உங்களுக்கு
சேவை புரியக் காரணம் எனக்கு ஏதாவது ஓர் அதிசயம்
ஓரே ஓரு அதிசயமாவது செய்ய கற்றுக் தர வேண்டும்
என்றான்.                                  
 அதற்கு அந்த வயதான குரு,“ஆனால் எனக்கு எந்த
அதிசயமும் செய்யத் தெரியாது. நீ உன் நேரத்தை
தேவையின்றி வீண் செய்து விட்டாய். நீ வேறு யாராவது
அதிசயங்கள் செய்ய தெரிந்தவரைப் போய் பார்என்று
கூறினார்.
  ஆனால்  அந்த மனிதனோ,  ”உங்களுக்கு அதிசயம் செய்யத்
தெரியாது என்று எப்போதும் நீங்கள் மறுத்து வருகிறீர்கள்
என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் எப்போதும்
அதிசயங்களை நடத்திதான் வருகிறீர்கள். பிறர் என்னிடம்
கூறியுள்ளார்கள் நீ அவர் கூறுவதைக் கேட்காதே.
அவருக்கு சேவை செய்துகெர்ண்டே வா. ஓருநாள் அவர்
உனக்கு ஏதாவது ரகசியம் கூறுவார். ஆனால் அதற்கு நீ
ஏற்றவனாக இருக்கிறாயா என்று பார்த்துவிட்டுத்தான்
கூறுவார் என்று கூறியுள்ளனர். ஓருவேளை நான்
இன்னும் அதற்குத் தக்கவாறு கனியவில்லையோ
என்னவோஎன்று கூறினான்.                                                             
 சில நாட்கள் கழித்து, அந்த வயதான குரு, இந்த மனிதன்
இன்னும் தேவையேயின்றி வேலை செய்து வருவதைக்
கண்டார். யாரோ இவன் மனதில் நான் அதிசயம் புரிபவன்
என்ற எண்ணத்தை விதைத்து விட்டனர். “ஓருவேளை
அதிசயங்கள் நடக்கலாம். ஆனால் அவை தாமாகவே
நடப்பவை. நான் அவற்றை செய்வதில்லை.”                        
 உயர்ந்த தன்னுணர்வு நிலை அடைந்த மனிதர்களிடம்,
இப்படிப் பல விஷயங்கள் தானாகவே நடக்கும். எப்படி
சூரியன் உதிக்கும்போது பறவைகள் பாடுகின்றனவோ
அப்படித்தான். சூரியன் இந்த அதிசயத்தை செய்வதில்லை.
மலர்கள் தங்கள் இதழ்களை தாமாகவே திறக்கின்றன.
சூரியன் இந்த அதிசயத்தை புரிவதில்லை. சூரியன்
இருந்தால் போதும், இந்த அதிசயங்கள் தாமே நடக்கும்.
இப்படி தன்னுணர்வு நிலையில் விழிப்பு பெற்ற ஓரு
மனிதனின் இருப்பே பல மலர்கள் இதழ் மலரவும், பல
பறவைகள் கானம் பாடவும் போதுமானதாக இருக்கும்.                                   
 அந்த வயதான குரு,“நான் உனக்கு ஏதாவது
ரகசியத்தைக் கூறினால் அன்றி நீ என்னை விட்டுப்
போகமாட்டாய் போலிருக்கிறதேஎன்றார். அந்த மனிதன்,
அது உண்மைதான்என்றான். ஆகவே குரு நான் உனக்கு
ஓரு ரகசிய மந்திரம் கூறுகிறேன். ஓரு சிறு மந்திரம்.
திபெத்திய மந்திரம் ஓம் மணி பத்மீ ஹம்என்பதை
எழுதித்தருகிறேன்என்றார். ஓம்  என்பது வாழ்விருப்பின்
நிரந்தர ஓசை, மணி பத்மீ ஹம் என்றால் தாமரைப் பூவில்
இருக்கும் வைரமணி. மணி என்றால் வைரம், பத்மம்
என்றால் தாமரை. ஆக அதன் அர்த்தம் நிரந்தர ஓசையும்,
தாமரை பூவுக்குள் இருக்கும் வைரமும் என்பதாகும். இது
முக்தி நிலை என்பதன் அர்த்தமாகும். எங்கும் பரந்து உள்ள
நிரந்தர ஓசையும், தாமரையின் அழகும், மேலும்
தாமரையின் உள்ளிருக்கும் வைரத்தின் ஓளியும். ஓரு
சின்ன மந்திரத்திற்குள் அவர்கள் முக்தி அனுபவத்தின்
முழுமையையும் சுருக்கி விவரித்துள்ளனர்.
 அந்த வயதான குரு, “இந்த மந்திரத்தை எடுத்துச் சென்று,
இதை ஐந்து முறை, வெறும் ஐந்தே ஐந்து முறை கூறு.
முதலில் குளி. புத்தாடைகளை உடுத்திக்கெரள். கதவுகளை
மூடிக்கெர்ண்டு தனியே ஓரிடத்தில் அமர்ந்து  இந்த
மந்திரத்தை ஐந்தே ஐந்து முறை கூறு. பிறகு நீ எந்த
அதிசயம் வேண்டுமானாலும் செய்யலாம்என்று கூறினார்.
 அந்த மனிதன் வேகமாக வெளியேறத் துவங்கினான்.
அவன் தன் நன்றி உணர்வைக் காட்டக்கூட
முயலவில்லை. நன்றி என்று கூறக்கூட முயலவில்லை.
உடனே கோயில் படிகளில் இறங்கி ஓடி விட்டான். அவன்
பாதிதூரம் போனபோது, அந்த குரு,“நில்! ஓன்றைக் கூற
மறந்து விட்டேன். இந்த மந்திரத்தைக் கூறும்போது
ஓன்று நினைவிருக்கட்டும். குரங்கைப் பற்றி  நினைக்கவே
கூடாது!என்று சத்தமாகக் கூறினார்.
 அந்த மனிதன்,“நான் ஏன் குரங்கைப் பற்றி நினைக்கப்
போகிறேன், என் வாழ்வில் இதுவரை நான் நினைத்ததே
இல்லைஎன்றான். குரு,“சரிதான், ஆனால்
நினைவிருக்கட்டும்! குரங்கு மட்டும் கூடவே கூடாது. 
குரங்கின் நினைவு வந்தால் நீ மறுபடி ஐந்து தடவை
மந்திரம் கூற வேண்டும்என்றார்.
 அந்த மனிதன் குரங்கு எதற்காக வரும்?” என்றான். குரு,
எனக்குத் தெரியாது. நான் உனக்கு இரகசியத்தைக்
கூறிவிட்டேன்.இதுதான் எனது குரு எனக்குக் கூறிய
இரகசியமாகும்.என்றார்.
 ஆனால் அவன் படிகளில் இறங்கத் துவங்கும் முன்பே
குரங்குகளைப் பற்றி நினைக்கத் துவங்கி விட்டான். அவன்,
அடக் கடவுளே நான் இன்னும் மந்திரம் கூறக் கூட
ஆரம்பிக்கவில்லை. ஆனால் குரங்குகள் வந்துவிட்டனவே!
என்று கூறினான். அவன் கண்களை மூடியபோதும்
குரங்குகள்.குரங்குகள் இளித்துக் கெரண்டு,அவனைப்
பார்த்து மூஞ்சியைக் காட்டின. அவன்,“இது ஓரு விநோத
மந்திரம்தான். நான் இன்னும் துவங்கவேயில்லை,
அதற்குள்ளா?” என்றான்.
 அவன் வீட்டைச் சென்றடைந்தபோது குரங்குகளால்
சூழப்பட்டிருந்தான். அவன் எங்குப் பார்த்தாலும்
குரங்கைத்தான் கண்டான். உள்ளே சென்று குளித்தான்.
ஆனால் அதனால் எந்தப் பயனுமில்லை. குளியலறையில்
மூடிய கதவிற்குப்பின் குரங்குகள் சுற்றி அமர்ந்திருந்தன.
அவன், “அந்தக் கிழவன் ஓரு முட்டாள். இந்தக்
குரங்குதான் பிரச்னை என்றால் அவன் இதைப் பற்றி
குறிப்பிட்டிருக்கவே கூடாது. யானைகள் வரவில்லை.
ஓட்டகங்கள் வரவில்லை. சிங்கங்களும் வரவில்லை.
குரங்கைக் தவிர வேறெதுவுமே வரவில்லை.என்று
நினைத்தான்.
 பிறகு அவன் கால்களை மடித்து பத்மாசன நிலையில்
அமர்ந்து கண்களை மூடிக் கெர்ண்டான். ஆனால் அதற்கு
எந்த பயனுமில்லை. குரங்குகள் அவனை இடித்தன.
குரங்குகள் மடியில் உட்கார்ந்து கெர்ண்டன. சுற்றிலும்
ஓரே குரங்குக்கும்பல்தான். அவனுக்கு மிகவும்
கவலையாகி விட்டது.   அவன் மனைவி அவனை கடந்து
சென்றபோது அவன் பார்த்தான். அப்போது அவளும் கூட
ஓரு குரங்கு போல..... இல்லை, இல்லை, அவள் என்
மனைவி. அவன் தந்தை கடந்து போனார். பார்த்தால் கிழக்
குரங்குபோல...... சிலமுறை அவன் தந்தைபோலத்
தெரிந்தார். அந்த மனிதன், “ஐயோ நான் பைத்தியமாகி
விடுவேன்என்று நினைத்துக் கெரண்டான்.
 ஐந்து தடவை என்பது மிக அதிகம். அந்த மந்திரமான ஓம்
மணி பத்மீ ஹம் என்ற நான்கு வார்த்தைகளை ஓரு
முறை கூட முடிக்கவிட வில்லை. அத்தனை குரங்குகள்.
அன்றிரவு முழுவதும் அவன் முயன்றான். நிறைய முறை
குளித்தான். ஓருவேளை அவனது உடுப்புகள் போதுமான
அளவு தூய்மையாக இல்லையோ என நினைத்துக்
கெரண்டு நடு இரவில், அந்த குளிர்காலத்தில் அவன்
நிர்வாணமாக நின்றான். இப்போது அழுக்கு துணிகள்
பற்றியோ, அல்லது வேறு எது பற்றியோ எந்தக்
கேள்வியும் இல்லை. ஆனால் குரங்குகளும் சுற்றிலும்
காலை மடித்துகெரண்டு பத்மாசனம் போட்டு
அமர்ந்திருக்கின்றன. அவன் அவற்றைப் பார்த்துச்
சப்தமிட்டான். அவை சிரித்தன. 
 காலையில் அவன் கிட்டதட்ட பைத்தியமாகிவிட்டான். 
அந்த கிழவன் தந்திரக்காரன். எத்தனை வருடங்களாக
நான் சேவை செய்தேன். முடிவில் அவன் எனக்கு
இரகசியத்தையும் தந்து, கூடவே இந்தக் குரங்குகளையும்
தந்து அந்த இரகசிய மந்திரத்தை நாசமாக்கி விட்டானே!
என்றான் அவன்.
 அவன் அந்த குருவிடம் திரும்பிச் சென்று, அந்த
மந்திரத்தை திருப்பி தந்துவிட்டு, “நீங்களே வைத்துக்
கெர்ள்ளுங்கள். ஏனெனில் அந்தக் குரங்குகள்......என்றான். 
அந்தக் குரு, “அவை உன்னிடம் வரவே வராது என்றாயே
என்றார்.அவன், “நான் இதுவரை என் வாழ்வில் ஓரு
குரங்கைப் பற்றிக்கூட எண்ணியதோ,கனவில் கண்டதோ
நேரில் கூட கண்டதோ கிடையாது. இலட்சக்கணக்கான
விலங்குகளைப் பற்றி நான் யோசித்ததேயில்லை,
அவசியமுமில்லை. நீங்கள் அந்த வார்த்தையைக்
கூறாமலிருந்திருந்தால் என்னால் அதிசயங்களை
நிகழ்த்தி இருக்க முடியும். ஆனால் அது இப்போது
நடவாத காரியமாகி விட்டது.என்றான். 
 குரு.நான் என்ன செய்வது? குரங்கு அந்த மந்திரத்துடன்
இணைந்து வரும். குரங்கு இல்லையேல் அந்த மந்திரம்
பயனில்லை. குரங்கைத் தவிர்க்கும் வழி தெரியாவிட்டால்
உன்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது.என்றார்.
 அந்த மனிதன்,“நான் எல்லா அதிசயங்களை பற்றியும்
மறந்தே போய்விட்டேன். இந்த மந்திரத்தைத் திருப்பி
எடுத்துக் கெரண்டு என்னை குரங்குகளிடமிருந்து
விடுவியுங்கள். ஏனெனில் எனக்கு மந்திரம் போனாலும்
குரங்குகள் போகாதோ என்று பயமாக இருக்கிறது. எனக்கு
மனைவியும் வயதான தகப்பனாரும், சிறு குழந்தைகளும்
உள்ளனர். நான் அவர்களை கவனித்தாக வேண்டும்.
என்னால் இரவும் பகலும் அந்த குரங்குகளுடன்
சண்டையிட முடியாது.என்று வேண்டினான். 
 குரு,“அந்த மந்திரத்தை நீ என்னிடம் திருப்பி தந்து
விட்டதால் இனிமேல் குரங்குகள் வராது. அவை மிகவும்
நேர்மையான பக்திமான்கள்.என்றார். 
 அந்த மனிதன் சென்று நாலாபக்கமும் பார்த்தபோது
எங்குமே குரங்குகள் தென்படவில்லை. அவன்
ஆச்சரியமடைந்தான்.வீடு சென்று பார்த்தபோது மனைவி
மனைவியாகவே தோற்றமளித்தாள். தகப்பனார்
தகப்பனாராகவே தோன்றினார். குழந்தைகள்
குழந்தைகளாகவே இருந்தனர். அவன் இது
விநோதம்தான் என்று குளித்தான். குளியலறை
காலியாகவே இருந்தது!அந்த மந்திரம் சிறியதுதான்,
குரு எழுதிக்கெரடுத்த மந்திரத்தை நான் திருப்பித்
தந்து விட்டாலும் கூட, அதை இரவு முழுவதும்
கூறியபடியிருந்ததால் எனக்கு அது நினைவிருக்கிறது.
இப்போது எந்த ஆபத்துமில்லை.... நான் கூறிப்
பார்க்கிறேன்.என்று நினைத்தான்.
 அவன் ஓம் என்று துவங்கிய கணமே, ஓரு குரங்கு
தோன்றிவிட்டது. கூடவே இரண்டு குரங்குகள் சுற்றி
அமர்ந்து ஓம் என்றன. அந்த எண்ணம் முழுவதையும்
கைவிட்டுவிட்டான். அவன் நான் கடைக்குப் போய்
என் வேலையைப் பார்க்கிறேன். இந்த அதிசயங்களை
நிகழ்த்தும் எண்ணம் இனிமேல் சரியாக வராது என்றுபோய்விட்டான்.