my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com
அன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 ஆகஸ்ட், 2012

அன்பு

அன்பு அறிவில் பிறப்பதில்லை,
அது உழைத்துச் சேர்ப்பதில்லை,
அது தேடி அடைவதில்லை,
அது அதிர்ஷ்டப் பரிசுமில்லை,
அது கொடுத்துப் பெறுவதில்லை,
அது வயதில் வளர்வதில்லை.

அன்பு நீ பிறக்கும்போதே இருந்தது,
நீ மூச்சு விடுவதில் வாழ்வது,
உன் இதயத் துடிப்பில் ஒலிப்பது, 
உன் இன்பச் செயல்களில் ஒளிர்வது.

அன்பு உன் மென்மையின் உறுதி,
உன் படைப்பின் பெருமிதம்,
உன் இருப்பின் அழகு.

அன்பு வாழ்வின் பயிர்,
அதில் வாழ்வதே உயிர்.

ஆகவே

அன்பைத் தேடாதே,
தயவுசெய்து அதைப் பழகாதே,
அதைப் பற்றிப் படிக்காதே,
அன்பைப்பற்றி அறிவுரை கேட்காதே,
அது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறையல்ல.

இப்படித்தான் அன்பு அழிந்தது, அழிகிறது.

குழந்தையிடம் நிறைந்திருக்கும் அன்பை முறைப்படுத்தும் முயற்சியில்,
அறிவுச்சிறையிலிட்டுத்தான் அன்பு அடியோடு அழிகிறது.
அன்பு அழிந்ததால்.....வாழ்வு அர்த்தம் இழந்தது,
இயற்கை அழகு குலைந்தது.
மனிதன்....... வெறும் இயந்திரமாகிப் போனான், தந்திரமாகிப் போனான்.

எனதருமை நண்பனே,
அன்பில் நீ
அமிழலாம், கரையலாம், உணரலாம், இருக்கலாம்,
ஆனால்..... சொல்ல முடியாது.
அது சொற்சிறை கடந்த அனுபவம்,
காட்ட முடியும்......ஆம்.....தொட்டுக் காட்டலாம்.

என் இதயமே
எட்ட இருந்து பார்க்கக்கூடிய பொருளல்ல அன்பு,
கிட்டே நெருங்கி வா,
கூடிக் குலாவி அன்பில் குதூகலிப்போம்.
அன்புடன் ,
ஓஷோ 

புதன், 11 ஜூலை, 2012

அன்பின் சொர்க்கம்


இரண்டு சகோதரர்கள் இருந்தனர்.ஒருவர் பிரமச்சாரி இன்னொருவர் திருமணமானவர்.அவர்கள் இருவரும் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்து தானியங்களை சமமாக பங்கிட்டு கொள்வார்கள்.
திருமணமான சகோதரன் தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுந்து யோசிப்பான்.இது அழகல்ல!என்னுடைய சகோதரன் பிரமச்சாரி .விளைச்சலில் பாதிப்பங்கு அவனுக்குச் செல்கிறது.இங்கு நான்,என் மனைவியோடும் ஐந்து குழந்தைகளுடனும்,என் முதுமைக்காலத்திற்கு தேவையான சகல பாதுகாப்புடன் இருக்கிறேன்.ஆனால்,என் சகோதரன் வயோதிகப் பருவத்தில் கவனிக்க யார் இருக்கிறார்கள்.எதிர்காலத்திற்கான சேமிப்பு ,என்னை விட அவனுக்குதான் அதிகமாக இருக்க வேண்டும்.என்னை விட அதிகமான பங்கினை தருவதுதான் முறை "
இந்த சிந்தனையில் படுக்கையை விட்டு எழுந்த அவன் ,தன்னுடைய தானிய களஞ்சியத்தில் இருந்து  மூட்டை நெறைய தானியங்களை எடுத்து போயி தன் சகோதரன் களஞ்சியத்தில் ரகசியமாக வைத்தி விட்டான்.
இதே போன்று எண்ணம் கொண்ட பிரமச்சாரி சகோதரன்னுக்கும் அடிக்கடி ஏற்ப்பட்டது அவனும் துக்கத்தில் இருந்து எழுந்து இப்படி சொல்வான்.
இது கொஞ்சம் கூட நன்றாக இல்லை.மனைவியோடும் ஐந்து குழந்தையோடும் வாழும் என் சகோதரனுக்கும் விளைச்சலில் பாதி போகிறது.நான் தனி கட்டை.எனகென்றும்  யாரும் இல்லை அதனால் குடும்பஸ்தனான என் சகோதரன்,என்னை விட அதிகமாக தானியங்கள் பெறுவதுதான் நியாயம்"இப்படி நினைத்த அவன் படுக்கையை விட்டு எழுந்து தன் களஞ்சியத்திலிருந்து மூட்டை நெறைய தானியங்களை எடுத்து போயி ,சகோதரனின் களஞ்சியத்தில் வைத்து விட்டான்.
இதே போல்,ஒவொரு விளைச்சல் முடிந்தபின்பும்,இருவரும் பங்கிட்டுக்கொண்ட பிறகு தான்யங்களை சகோதர்கள் இருவரும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர்,மாற்றிவைத்து கொண்டு இருந்தனர்.ஒரு சமயம் இருவரும் எதிர் எதிராக சந்தித்து கொண்ட பொழுது இருவர் கண்களும் கலங்கி போயிருந்தனர்.அந்த அன்பு என்ற கண்ணீர் துளியில்தான்,சகோதரர்கள்   சந்தித்த இடத்தில்தான் பிற்காலத்தில் அந்த கிராமமே கோவில் கட்டியது  

புதன், 23 மே, 2012

அன்பின் இதயமும், அறிவுஇன் மூளையும்

இந்த உலகம் முழுவதும் அன்பினால் செலுத்தப்படவில்லை.அது தந்திரத்தால் செலுத்தப்படுகிறது.இந்த உலகில் வெற்றி பெற உங்களுக்கு அன்பு தேவையில்லை.உங்களுக்குக் கல்லாகிப் போன ஒரு இதயமும் கூரிய புத்தியும் தான் தேவை.சொல்லப்போனால் உங்களுக்கு இதயமே தேவையில்லை.ஏனெனில் நீங்கள் வளரும் முறை,கலாச்சாரம்,சமுதாயம் ஆகியவை அன்பு செலுத்தும் திறனைக் கொன்று விட்டன.இதயம் உள்ள மனிதர்கள் நசுக்கப்பட்டு சுரண்டப்பட்டு அடக்கியாளப் படுகின்றனர்.இந்த உலகம் தந்திரக்காரர்களால்  இதயமில்லாத கொடூரமானவர்களால் நடத்திச் செல்லப்படுகிறது.எனவே வளரும் பிள்ளையும் தனது இதயத்தை இழக்கும்படி இந்த சமூகம் செய்கிறது.எனவே அவனது சக்தி முழுவதும் மூளையை நோக்கி செலுத்தப்படுகிறது.இதயம் அலட்சியப்படுத்தப் படுகிறது. இதயம் எப்போதாவது ஏதாவது சொன்னாலும்,அது உங்கள் செவியை வந்து அடைவதில்லை.உங்கள் தலையில்,மூளையில் ஒலிஅதிகம் இருப்பதால் இதயத்தின் குரல் எழும்பாது.மெல்ல மெல்ல இதயம்,அது அலட்சியப் படுத்தப் படுவதால் சொல்லுவதை நிறுத்தி மௌனமாகி விடுகிறது.சமூகத்தைப் புத்தி நடத்திச் செல்கிறது.அன்பு நடத்திச் சென்றால் நாம்,முற்றிலும் மாறுபட்ட,அதிக அன்பு கொண்ட,குறைந்த வெறுப்பு கொண்ட,போர்களற்ற  உலகில் வாழ்ந்து கொண்டிருப்போம்.அழிக்கும் முறைகளை உருவாக்குவதை என்றும் இதயம் ஆதரிக்காது.அது வாழ்விற்காக மட்டுமே உயிர்க்கிறது; துடிக்கிறது.