my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com
முல்லா......... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முல்லா......... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஜூலை, 2012

நாய் வால்

முல்லா அவசரமாக ஒரு விலங்கு வைத்தியரிடம் வந்தார்.
அவருடன் அவருடைய நாயும் இருந்தது.
வைத்தியர் முல்லாவிடம் நலம் விசாரித்து விட்டு நாய்க்கு உடல் நலம் இல்லையா எனக் கேட்டார்.
முல்லா
,''நாய் நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் அதன் வாலை முழுமையாக நறுக்கி விட வேண்டும்
,'' என்றார்.
மருத்துவருக்கு ஒன்றும் புரியவில்லை
,''முல்லா,உன் நாய் அழகாக இருக்கிறது.
அதன் வாலை அறுத்தால் மிக அசிங்கமாக இருக்கும்.ஏன் அதன் வாலை நறுக்க வேண்டும் என்கிறாய்
?
தயவு செய்து அதன் வாலை நறுக்க வேண்டாம்,''என்றார்.
முல்லா வைத்தியரின் காதருகே குனிந்து
,''நமக்குள் இந்த ரகசியம் இருக்கட்டும்,யாரிடமும் சொல்ல வேண்டாம். 
நாளை என் வீட்டிற்கு என் மாமியார் வருகிறார்.
எனக்கு அவரைக் கொஞ்சமும் பிடிக்காது.
எனவே அவர் வரும்போது அவரை வரவேற்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாதபடி ஏற்பாடு செய்து விட்டேன்.
ஆனால் இந்த நாய் மாட்டும் அவர் வரும்போது வாலை ஆட்டி வரவேற்பு தெரிவித்து விடும்.
அதற்காகத்தான் இந்த ஏற்பாடு
,''என்றார்.

ஞாயிறு, 24 ஜூன், 2012

கற்பனை காதலி

ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நன்பன் கிண்டலாக , “ நசுருதீன்உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான்.
முல்லா கம்பீரமானார். “ எப்போது அவள் வ்ருகிறாள் ? “ என்று கேட்டார்.
“ 
இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்கு” என்றான் அவன்
அந்த நாள் நசுருதீனின் பொழுது மன ஆமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பைடவில்லை. இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். “ இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது “ என்று முடிவு செய்திருந்தார்.
நேரம் போய் கொண்டே இருந்தது.
அவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை.
இரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது.
அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. “ தனக்கு திருமணம் ஆகவில்லை “ என்பது
ஓஷோ : மனிதன் கனவிலேயே வாழ்கின்றான் இந்த கனத்தில் வாழ்வதில்லை

புதன், 30 மே, 2012

இரவில் காதலியுடன் முல்லா.........


முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணைக் காதலித்தார். முல்லாவுக்கு எல்லாம் நல்லபடி அமைந்திருந்தது. ஆனால் அவருடைய கண்பார்வை மங்கலானது.

ஆகவே அவர் கண் டாகடரிடம் கேட்டார் : கண்ணுக்கு சோடாபுட்டி போட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பெண் எப்படி என்னைக் காதலிப்பாள் ? அவளுடைய முகம் கூட எனக்கு சரியாகத் தெர்யவில்லையே! நான் கண்ணாடி போட்டபடி அவள் எதிரில் போகக் கூடாது : உடனே என்னை நிராகரித்து விடுவாள் . என்ன செய்யலாம் ? “

டாக்டர் ஆலோசனை கூறினார் : ஒன்று செய்யலாமே! வெகு தொலைவு வரை உம்மால் பார்க்க முடிவது போல் நடியும் . இப்படி அவள் நம்பும்படி ஏதாவது செய்து பாரும் !

முல்லா இதை செய்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார். ஒரு நாள் பூங்காவில் உட்கார்ந்திருந்தபோது அவருக்கு ஒரு யுக்தி தோன்றியது . தூரத்தில் இருந்த ஒரு மரத்தில் ஒரு தையல் ஊசியைக் குத்திவிட்டு வந்தார்.நல்ல கண்பார்வை இருந்தால் கூட அவ்வளவு தொலைவில் உள்ள ஊசியை யாராலும் பார்க்க முடியாது.

முல்லா விண்மீ ன்கள் பளிச்ச்சிடும் இரவில் அன்று அந்த மரத்திலிருந்து 100 அடி தொலைவில் தன் காதலியுடன் உட்கார்ந்திருந்தார், திடிமென அவளிடம் அதோ அந்த மரத்தில் பொருப்பில்லாமல் யாரோ ஒரு தையல் ஊசியை குத்தி வைத்திருக்கிறார்களே ! என்று கூறினார்.

அப்பெண் முல்லாவின் கண்பார்வையின் மேல் ஏற்க்னவே சந்தேகம் கொண்டிருந்தாள். அப்படி இருக்க இவ்வளவு தொலைவில் ஒரு ஊசி இருப்பதை அவரால் எப்படி காண முடிந்தது என்று ஐயம் கொண்டாள். மேலும் அவளாலும் அதை பார்க்க முடியவில்லை ; அந்த மரத்தையும் கூட சரியாகப் பார்க்கவில்லை . நஸ்ருதீன் , எனக்கு ஊசி ஒன்றும் தெரியவில்லையே,” என்று கூறினாள்.

முல்லா பந்தாவாக எழுந்து , “ நான் போய் அதை எடுத்து வருகிறேன் “, என்று கூறியபடி நடக்கலானார். ஓன்றிரண்டு அடி வைத்ததுமே தொப்பென்று தரையில் விழுந்தார். ஏனேன்றால் எதிரில் ஒரு எருமை மாடு நின்று கொண்டிருந்தது. இது அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.

ஓஷோ : எந்த வேஷமும் நெடு நேரம் நிலைத்திருக்காது! உங்கள் வேஷத்தை மக்கள் கண்டுபிடிக்க வெகுனநேரமாகாது. ஆனாலும் மரியாதைக்காக நீங்கள் வேஷம் போடுகிறீர்கள் என்று உங்களிடம் அவர்கள் சொல்லுவதில்லை. ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது நாகரீகமாகிவிட்டது