my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

திங்கள், 7 மே, 2012

ஞானக்கதைகள் - 2 - முல்லா நசுருதீன்

முல்லா நசுருதீன் என்பவர் சுபி(sufi) ஞானி. இவர் ஒரு mystic என்றும் சொல்லுவார்கள். அதாவது சித்தர்கள் போல் மறை பொருள் உணர்த்திப்பேசுவார். ஆன்மிக அறிவு விரவிக்கிடக்கும்.இவரைப் பற்றிய கதைகள் ஏராளம். 


எனக்கு மிகவும் பிடித்த கதை.

முல்லாவுக்கு திடீரென்று எதையாவது மறந்து விடுவார். சில நாள் அவருக்கு வித்தியாசமான மறதி வரும். 

ஒரு நாள் எங்கோ போய் விட்டு வரும் வழியில் தான் யார்என்பதை மறந்து விட்டார். எதிரே வந்த தனக்கு அறிமுகமான ஒருவரிடம் நான் யார் தெரியவில்லை. தயவு செய்து சொல்லுங்கள் என்றார். எதிரில் வந்தவர் அவர்க்கு அவரையேஞாபகப் படுத்தி அறிமுகப்படுத்தினார். ஓகோ அது நான்தானாஎன்று கன்பார்ம் செய்துக்கொண்டார்.

மற்றொறு நாளும் இவ்வாறு தன்னை மறந்து விட்டார். கன்பார்ம் செய்துக்கொள்ள, யாரும் தெரிந்தவர் கண்ணில் படவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு இரும்புக் கடையில் நுழைந்தார். கடைக்காரர்என்ன வேண்டும் உங்களுக்கு?
கேட்டார்.

முல்லா: நான் கடைக்குள் வந்ததைப் பார்த்தீர்களா?”

கடைக்காரர்: ஆமாம்...நீர் வருவதைப் பார்த்தேன்

முல்லா:  இதற்கு முன் என்னை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?”

கடைக்காரர்: இல்லை

முல்லா: அப்படியானல், நான்தான் உங்கள் கடைக்குள் வந்தேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’

கடைக்காரர்:???????????????

ஞானகக்தைகள் - முல்லா நசுருதீன்

முல்லா நசுருதீன் என்பவர் சுபி(sufi) ஞானி. இவர் ஒரு mystic என்றும் சொல்லுவார்கள். அதாவது சித்தர்கள் போல் மறை பொருள் உணர்த்திப்பேசுவார். ஆன்மிக அறிவு விரவிக்கிடக்கும்.இவரைப் பற்றிய கதைகள் ஏராளம். 

1. ஒரு நாள் இரவு முல்லா விளக்குக் கம்பத்தின் கிழே ஏதோ தேடிக் கொண்டிருந்தார். 

அங்கு வந்த அவர் நண்பர் என்ன தேடுகிறீகள் என்று கேட்டார். அதற்கு அவர் ஒரு வெள்ளி நாணயத்தைத் தொலைத்துவிட்டதாக சொன்னார். எந்த இடம் என்று சரியாகச் சொன்னால் தான் உதவுவதாகச் சொன்னார் நண்பர்.

அதோ அந்த இடம் என்று கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு இருட்டு இடத்தைக் காட்டினார். அந்த இடத்தில் தேடாமல் இங்கு ஏன் தேடுகிறீர்கள் என்று நண்பர் கேட்டதற்கு ,”இங்குதான் வெளிச்சம் இருக்குஎன்று பதிலளித்தார்.

பிரச்சனை ஒரு இடத்தில் இருக்கும். ஆனால் அதற்கானத் தீர்வை வேறு இடத்தில் தேடுவோம்

ஓஷோவின் குட்டி கதைகள்-4


ஒரு பெரிய பணக்காரன் தன் நண்பனிடம் சொன்னான்.


நான் இறந்த போன பின் என் சொத்துக்களை எல்லாம் தர்மத்திற்கு கொடுக்க இருப்பது தெரிந்தும் ஏன் எல்லோரும் என்னை குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள்?

அதற்கு நண்பன் சொன்னான்:

இதற்கு பதில் கூற வேண்டுமானால்,உனக்கு பன்றி,பசுவை பற்றிய விபரங்களை சொல்ல வேண்டும்.

பன்றி பசுவிடம் தன்னுடைய ஏக்கத்தை கூறிற்று.அதாவது பன்றி எவ்வளவுதான் செய்தாலும் மக்கள் பசுவைதான் புகழ்கின்றார்கள்.பசு பால் தந்தாலும் பன்றி அதைவிட அதிகமாக தன் மாமிசத்தை தருகிறது.இருந்தும் தன்னை ஒருவரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் என்றது பன்றி.

பசு கூறியது:

நீ சொல்வது உண்மையாக இருக்கலாம்.ஏனெனில் நான் உயிருடன் இருக்கும் போதே இவைகளை கொடுத்து கொண்டிருக்கிறேன்.

ஓஷோ கூறுகிறார்:

மரணம் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு போய்விடும்.பின் எதற்காக கவலை படுகிறாய்?

ஓஷோவின் கதைகள்

கதை : 1

சந்தோஷமாக வாழ ஓஷோ அவர்கள் ஒரு கதை சொல்கிறார். வயதான கிழவர் தன் நூறாவது பிறந்த நாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாடுகிறார். அவரை பார்த்து வியந்தவர்கள் "எப்படி சந்தோஷமாக வாழ்வதாக கேட்டபோது அவர், " ஒவ்வொரு நாளும் நான் கண் விழிக்கிற போது சந்தோஷமாயிருப்பதா ? வேதனைப்படுவதா ? என்று கேட்டு விட்டு சந்தோஷத்தை தேர்வு செய்கிறேன்" என்றார்.

கதை : 2

குருட்ஜீஃப் பின் தன் சீடர்க்கள் முழுமையாக சரணடைதல் தேவைப்பட்டது. அவர் எதை சொன்னாலும் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டார். ஒரு குறிப்பிட்ட பயிற்சியை கூறுவார். அதை செய்து கொண்டிருக்கும் போது 'நிறுத்து !' என்பார். உடனே நிறுத்திவிட வேண்டும். 

ஒரு நாள் காலையில் கால்வாயில் இறங்கி நடக்கிற போது அவர் நிறுத்து என்று சொல்லிவிட்டு, தன் டென்ட்டிற்குப் போய்விட்டார். நான்கு சீடர்கள் கால்வாயில் நின்றிருந்தனர். யாரோ தண்ணீரைத் திறந்து விட, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வந்தது. 

குருட்ஜூஃப் உள்ளே போய்விட்டார். அவருக்கு தெரியாது. ஆனாலும் சீடர்கள் காத்திருந்தனர். 

கழுத்துவரை தண்ணீர் வந்து விட்டது. ஒருவன் கரைக்கு ஓடி விட்டன். "இது ரொம்பவும் அதிகம். குருவுக்கு எப்படி தெரியும் ? " என்றான். 

மற்ற இரண்டு சீடர்களும் மூக்குவரை தண்ணீர் வந்ததும் வெளியேறி விட்டனர். ஆனால், ஒரு சீடன் மட்டும் அப்படியே நின்றான். தண்ணீர் அவன் தலையைத் தொட்டு ஓடிக் கொண்டிருந்தது. அவன் மூழ்கிக் கொண்டிருந்தான். 

தன் அறையை விட்டு பாய்ந்து வந்த குருட்ஜீஃப் தண்ணீரில் குதித்து அவனை காப்பாற்றிக் கொண்டு வந்தார். 

மரணத்தில் இருந்து வந்த சீடர் கண்களை திறக்கும் போது புதிய மனிதனாக இருந்தான். அவனுக்குள் மாற்றம் நிகழ்ந்திருந்தது. அந்தப் பழைய மனிதன் இறந்து அவன் புதிதாகப் பிறப்பெடுத்திருந்தான். 

அந்த சீடன் குருவை முழுமையாக ஏற்றுக் கொண்டான். தன் மனதையும், அதன் கணக்குகளையும் அவன் நிராகரித்தான். தன் வாழ்வின் மீதான பற்றை நிராகரித்து, உயிராசையைத் துறந்தான். அதனால் அதான் அவனை எதுவும் நகர்த்தி விடவில்லை என்பதை ஓஷோ இந்த கதையின் மூலம் சொல்லுகிறார். 

கதை : 3

ஒரு ஜென் குரு தன் சீடர்களிடம், " நான் பாட்டிலில் ஒரு வாத்தை போட்டேன். இப்போது அந்த வாத்து வளர்ந்து விட்டது. பாட்டிலின் கழுத்தோ மிகச் சிறியது. எனவே வாத்து வெளியே வர முடியவில்லை. அது ஒரு சிக்கலாகி விட்டது. வெளியே வராவிட்டால் வாத்து செத்துவிடும். பாட்டிலை உடைத்து வாத்தை வெளியேற்றலாம். ஆனால், பாட்டிலை உடைக்க நான் விரும்பவில்லை. அது விலைமதிப்புள்ள ஒன்று. என்ன செய்வது என்று நீங்கள் சொல்லுங்கள்" என்றார். 

பாட்டில் தலையில் உள்ளது அதன் கழுத்தோ குறுகியது. தலையை உடைக்கலாம். ஆனால் அது விலைமதிப்புள்ளது. அல்லது வாத்தை சாகவிடலாம். ஆனால், அதையும் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் தான் அந்த வாத்து. 

அந்த ஜென் குரு தொடர்ந்து சீடர்களைக் கேட்டார். அவர்களை அடித்தார். சீக்கிரம் வழி கண்டுபிடியுங்கள் என்றார். ஒரே ஒரு பதிலை தான் அவர் ஏற்றுக் கொண்டார். ஒரு சீடன் கூறினான், " வாத்து வெளியில் தான் இருக்கிறது !" 

நீங்கள் வெளியே இருக்கிறீர்கள். எப்போதும் நீங்கள் உள்ளே இருந்ததில்லை. உள்ளிருப்பதாக எண்ணுவது தவறான கருத்து. எனவே, நிஜமான பிரச்சனை என்பது எதுவும் இல்லை என்பதை விளக்க இந்த கதையை ஓஷோ சொல்லுகிறார். 

ஞாயிறு, 6 மே, 2012

முல்லாவின் வேட்டை


முல்லா தனது நன்பர்களுடன் வேட்டைக்குச் சென்றார், வழியில் ஒரு சிங்கத்தை அவர்கள் கண்டுவிட்டனர், அந்த சிங்கமும் இவர்களைப் பார்த்து துரத்த ஆரம்பித்தது, நண்பர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு திசையாக துண்டை காணோம் துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்தனர். ஆனால் பாவம் முல்லாவினால் சிங்கத்தின் பார்வையிலிருந்து தப்பமுடியவில்லை, சிங்கம் அவரை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது.

நண்பர்கள் முல்லாவின் கதை முடிந்தது என்றே நினைத்தனர். மிகவும் கவலையுடன் ஊருக்குள் வந்து சேர்ந்தனர். ஆனால் அவர்களுக்கு முன்னால் முல்லா ஊருக்குள் வந்து சேர்ந்திருந்தார்,நண்பர்களுக்கு தங்களின் கண்களையே நம்ப முடியவில்லை . அவர்கள் முல்லாவை பார்த்து அடப்பாவி! எப்படி சிங்கத்திடம் இருந்து தப்பித்தாய் ! என வினவினர்

முல்லா நான் வந்த திசையிலே விடாமல் துரத்தி வந்தது சிங்கம் ! நானும் விடாமல் ஓடிவந்தேன் , எனக்கும் சிங்கத்திற்க்கும் உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வந்தது, சிங்கம் என் மிக அருகில் நெருங்கி என் மீது பாயும் சமயம் ஒரு சிறிய பள்ளத்தாக்கு குருக்கிட்டது , நான் அதை உயிரைக்கொடுத்து தாண்டினேன் ! சிங்கம் தாண்டும் போது வழுக்கிவிழுந்தது! எனச் சொன்னார்

அப்போது அந்த நண்பரில் ஒருவர் முல்லா நீங்கள் மிகவும் தைரியசாலி , நாங்களாக இருந்தால், பயத்தில் பேன்டு ஒழப்பியிருப்போம் என்றார்

முல்லா பின்னே சிங்கம் எப்படி வழுக்கிவிழுந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய் ?! “ என்றார்

வெள்ளி, 4 மே, 2012

எதற்காக கவலை படுகிறாய்?


ஓஷோவின் குட்டி கதைகள்-4



ஒரு பெரிய பணக்காரன் தன் நண்பனிடம் சொன்னான்.

நான் இறந்த போன பின் என் சொத்துக்களை எல்லாம் தர்மத்திற்கு கொடுக்க இருப்பது தெரிந்தும் ஏன் எல்லோரும் என்னை குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள்?

அதற்கு நண்பன் சொன்னான்:

இதற்கு பதில் கூற வேண்டுமானால்,உனக்கு பன்றி,பசுவை பற்றிய விபரங்களை சொல்ல வேண்டும்.

பன்றி பசுவிடம் தன்னுடைய ஏக்கத்தை கூறிற்று.அதாவது பன்றி எவ்வளவுதான் செய்தாலும் மக்கள் பசுவைதான் புகழ்கின்றார்கள்.பசு பால் தந்தாலும் பன்றி அதைவிட அதிகமாக தன் மாமிசத்தை தருகிறது.இருந்தும் தன்னை ஒருவரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் என்றது பன்றி.

பசு கூறியது:

நீ சொல்வது உண்மையாக இருக்கலாம்.ஏனெனில் நான் உயிருடன் இருக்கும் போதே இவைகளை கொடுத்து கொண்டிருக்கிறேன்.

ஓஷோ கூறுகிறார்:

மரணம் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு போய்விடும்.பின் எதற்காக கவலை படுகிறாய்?

செக்ஸ் பற்றி ஓஷோ சொல்லுகிறார்


நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன்.உண்மையில் எழுதியதல்ல.என் பேச்சை தொகுத்து 
எழுதியிருக்கிறார்கள்.அதன் தலைப்பு,காமத்திலிருந்து கடவுளுக்கு.அதற்கு பிறகு 
என்னுடைய நூற்றுக் கணக்கான புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு 
விட்டன.ஆனால்,மற்றவற்றை படித்தார்களா என்பது சந்தேகம்தான்.குறிப்பாக 
இந்தியாவில் எல்லாரும் படித்ததுகாமத்திலிருந்து கடவுளுக்கு என்ற 
புத்தகைத்தான்.அவர்கள் எல்லாரும் அதை விமர்சனம் 
செய்தார்கள்.எதிர்த்தார்கள்.இன்னும் அதை பற்றி கட்டுரைகளும்,மறுப்பு நூல்களும் 
எழுதி கொண்டுதான் இருக்கிறார்கள்.மகாத்மாக்கள் அதை மறுத்து கொண்டே 
வருகிறார்கள்.மற்ற புத்தகங்களை பார்க்கவும் இல்லை.குறிப்பிடவும் 
இல்லை.புரிகிறதா?நான் ஏதோ ஒரே புத்தகத்தைதான் எழுதியது போல. 
மக்கள் காயப்பட்டு கிடக்கிறார்கள்.காமமே காயமாகி விட்டது.அதை குணப்படுத்தியாக 
வேண்டும். 
உடலுறவில் ஏற்படும் பரவசம்,தியானத்தின் ஒரு சிறு பகுதியின் 
ஆரம்பத்தை,உங்களுக்கு அடையாளம் காட்டிவிடும்.காரணம்,அப்போது மனம் நின்று 
விடுகிறது.காலம் நின்று விடுகிறது.அந்த சில வினாடிகளில் காலமும் 
இருப்பதில்லை.மனமும் இருப்பதில்லை.நீங்கள் பரிபூரண மவுனத்திலும் பரவசத்திலும் 
ஆழ்ந்து விடுகிறீர்கள். 
அது,அந்த விஷயம் பற்றிய என் அறிவியல் அணுகுமுறை.காரணம்,மனமற்ற நிலைக்கும்,பரவச 
நிலைக்கும் காலமற்ற நிலைக்குமான வேறு வழி எதுவுமே இல்லை.மனம் கடந்தும்,காலம் 
கடந்தும் செல்வதற்கு வழி இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு,உடலுறவு தவிர 
வேறு வழியில்லை.தியானத்தின் முதல் அடையாளத்தை நிச்சயமாக அதுதான் 
காட்டுகிறது.நான் மக்களுக்கு இந்த உண்மையை சொல்வதால்தான் உலகமே என்னை கண்டனம் 
செய்கிறது. 
காமத்திலிருந்து அதி பிரக்ஜைக்கு செல்வது பற்றி நான் பேச போய்,உலகம் 
முழுவதிலும் இருந்து விமர்சிக்கப்பட்டேன்.கண்டிக்கப்பட்டேன்.ஏன் 
கண்டிக்கிறார்கள் என்பதற்கான எந்த விளக்கத்தையும் யாரும் கொடுக்கவில்லை.என் 
புத்தகம்,முப்பத்து நான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.பன்னிரண்டு 
பதிப்புகள் வெளிவந்துள்ளன.எல்லா சன்னியாசிகளும் அதை படித்து விட்டார்கள். 
இந்து,சமண,கிறித்துவ,புத்த சன்னியாசிகள் என்று யாராக இருந்தாலும் 
சரி,சன்னியாசிகளே அந்த புத்தகத்திற்கு சிறந்த வாடிக்கையாளர்கள்.சில 
மாதங்களுக்கு முன்பு,இங்கே புனாவில் சமண மாநாடு ஒன்று நடந்தது.என் செயலாளர் 
ஆச்சரியமான விஷயம் ஒன்று சொன்னார்.சமண சன்னியாசிகள் இங்கே வந்து அந்த 
புத்தகத்தை மட்டுமே கேட்டார்கள்.காமத்திலிருந்து கடவுளுக்கு.அதை வாங்கி தமது 
ஆடைக்குள் மறைந்து வைத்து கொண்டு சத்தமில்லாமல் வெளியே போனார்கள்.அவர்கள் 
வந்ததும் போனதுமே தெரியவில்லை என்றார் என் செயலாளர். 
காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற புத்தகம்,காமத்தை பற்றியதன்று.அது,அதிபிரக்ஜை 
பற்றியது.அதை,ஒருவன் கண்டு கொள்ள,ஏதாவது ஒரு வழி இருக்க வேண்டும்.தன் எண்ணங்களை 
கடந்து எல்லையற்ற மவுனத்திற்கு செல்ல சிற்றினபம் இருக்கிறது.அது ஒரு கண 
பொழுதுதான் என்றாலும் அது நிரந்தரமானது.எல்லாமே அங்கே நின்று போய் 
விடுகிறது.நீங்கள் எல்லா கவலைகளையும்,எல்லா இறுக்கங்களையும் அப்போது மறந்து 
போய் விடுகிறீர்கள்,என்பதை சுட்டி காட்டுகிறது அந்த புத்தகம். 
காமத்திலிருந்து அதிபிரக்ஜைக்கு செல்வது சாத்தியம் என்பதை நான் சொல்லி கொண்டு 
வருகிறேன்.உங்களுக்கு அதில் மகிழ்ச்சி.உங்கள் காதில் 
விழுவது,காமத்திலிருந்து என்பது 
மட்டுமே.அதிபிரக்ஜைக்கு என்பதை நீங்கள் காதில் போட்டு கொள்வதில்லை. 
காமம் வெறும் ஆரம்பம் மட்டுமே அது முடிவானது அன்று.அதை ஒரு ஆரம்பமாக ஏற்று 
கொள்வதில் எந்த தவறும் இல்லை.அதையே பிடித்து தொங்கி கொண்டிருந்தால்தான் தவறாக 
முடியும். 
சுதந்தர உறவு பற்றி நான் எதுவுமே உபதேசிக்கவில்லை.இந்தியாவின் மடத்தனமான மஞ்சள் 
பத்திரிக்கைதனம்தான்,என் தத்துவம் முழுவதையும் அந்த இரண்டு சொற்களில் அடக்கி 
விட்டது.650 புத்தகங்கள் வெளியிட்டு விட்டேன்.ஒரு புத்தகம் மட்டுமே காமம் 
பற்றியது.மற்ற 649 புத்தகங்களை பற்றி யாரும் கவலை பட வில்லை.காமம் பற்றி பேசிய 
அந்த ஒரு புத்தகம்தான் அவர்களுக்கு பிரச்சனை.அது கூட காமம் பற்றியது 
அன்று.அதுவும்,காமத்தின் 
ஆற்றலை ஆன்மிக ஆற்றலாக எவ்வாறு மாற்றுவது என்பதை பற்றியது.உண்மையில் அது 
காமத்திற்கு எதிரான நூல். 
அவர்கள் செய்வதெல்லாம்,மக்களுக்கு தவறான தகவலை கொடுப்பது,பிறகு அந்த தவறான 
தகவலின் அடிப்படையில் பழி தூற்றுவது.என்னை அவர்கள் நியாயமான முறையில் 
வெளிப்படுத்தவே இல்லை.இல்லையென்றால்,இந்தியா புத்தி கெட்டது என்று நான் 
நினைத்திருக்கவே மாட்டேன். 
தந்திரா தத்துவத்தை வெளியிட்ட ஒரு நாடு கஜுராஹோ,கொனார்க் போன்ற கோயில்களை 
உருவாக்கிய நாடு முட்டாள்தனமானதாக இருக்க முடியாது.நான் சொல்வதை விளங்கி கொள்ள 
முடியாததாக இருக்க முடியாது.கஜுராஹோ எனது சாட்சியம்.தந்திரா இலக்கியங்கள் 
எல்லாமே என் சாட்சியங்கள்.தந்திரா போன்றவை தாக்கு பிடித்து இருந்த நாடு இது 
ஒன்றுதான்.உலகத்தின் எந்த நாட்டிலும் காமத்தின் ஆற்றலை ஆன்மிக ஆற்றலாக மாற்றும் 
முயற்சி நடைபெறவே இல்லை.நான் அதைதான் செய்து 
வருகிறேன்.ஆனால்,பத்திரிக்கையாளர்களுக்கு யதார்த்தத்தில் விருப்பம் 
இல்லை.அவர்களுக்கு பரபரப்பில்தான் ஈடுபாடு.