my playlist

MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

திங்கள், 7 மே, 2012

ஓஷோ உணவருந்துதல் பற்றி கூறியிருப்பது என்ன என்று ஒருவர் கேட்டிருந்தார், அதற்கான பதில்

ஒரு குழந்தையின் உணவுக்கான முதல் அனுபவமும் அன்புக்கான முதல் அனுபவமும் மிகவும் நெருங்கிய தொடர்புடையவை, அதனால்தான் இந்த பிரச்னை எழுகிறது. அவன் தாயின் மார்பகத்திலிருந்துதான் உணவையும் அன்பையும் பெறுகிறான். ஒரு குழந்தை அன்பை பெறும்போது அவன் பால் குடிப்பதைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை, தாய் அவனை குடிக்கச் செய்கிறாள்.

ஆனால் குழந்தை அன்பை பெறாத போது அவன் மார்பகத்தை விட்டு நகருவதில்லை, ஏனெனில் அவன் எதிர்காலத்தைக் கண்டு பயப்படுகிறான். அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கிறான், ஏனெனில் நாளை அம்மா கிடைப்பாள் என்பது நிச்சயமில்லை.

குழந்தைக்கு அன்பு கிடைக்கும்போது அவன் பாதுகாப்பாக உணர்கிறான். அவன் கவலைப்படுவதில்லை. எப்போதெல்லாம் தேவைப் படுகிறதோ அப்போதெல்லாம் அங்கே அம்மா இருப்பாள். அவன் அவளது அன்பை நம்பலாம். ஆனால் தாய் அன்பு செய்யாதபோது குழந்தையால் நம்பிக்கையுணர்வு கொள்ள முடிவதில்லை. அப்போது அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கிறான்.

அவன் அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறான்.

மேலும் இதுதான் சூழ்நிலை..... ஏழை குடும்பத்தில் உள்ள குழந்தைகள் வயிறு பெரிதாக இருப்பதை நீ காணலாம், ஏனெனில் அங்கே உணவு பற்றாக்குறை அதனால் எப்போதெல்லாம் உணவு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்வர். செல்வந்தர் குடும்பத்தில் உள்ள குழந்தைக்கு வயிறு சிறிதாக இருப்பதை நீ காணலாம். இது நம்ப முடியாததாக தோன்றும், ஏனெனில் வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு அவர்களது முழு உடலும் மெலிந்து இருந்தாலும் அவர்களது வயிறு மட்டும் பெரிதாக இருக்கும். அது சரியாக தோன்ற வில்லை, கணக்குப்படி சரியாக தோன்றவில்லை.

அவர்கள் வறுமையில் வாடும்போது எப்படி அவர்களுக்கு வயிறு அவ்வளவு பெரிது இருக்கும் ஏனெனில் அவர்கள் பட்டினி கிடப்பதால் நாளையை பற்றி அவர்களால் நம்ப முடியாது. அதனால் என்ன கிடைத்தாலும், கிடைப்பது எதுவாக இருந்தாலும் அவர்கள் வயிற்றில் அடைத்துக் கொள்கின்றனர். அவர்களது வயிறுதான் அவர்களது சேமிப்புகிடங்கு.

மேலும் ஒரு குழந்தைக்கு அன்பு கிடைக்க வில்லையென்றால் அது உணவில் நாட்டம் கொள்கிறது. அதற்கு அன்பு கிடைக்கும்போது அதற்கு உணவில் ஆர்வம் இருக்காது அல்லது இயல்பாக எவ்வளவு ஆர்வம் இருக்குமோ உடலுக்கு தேவையான அளவு உணவு பெறுவதில் அவ்வளவுதான் இருக்கும்.

இதுதான் உனக்கும் நிகழ்ந்துள்ளது. நீ உனது அன்பு சக்தியை எந்த விதத்திலோ அடைத்துவிட்டாய். அந்த அடைக்கப்பட்ட அன்பு சக்திதான் உணவில் ஆர்வமாக வெளிப்படுகிறது. நீ இதை மாற்ற விரும்பினால் ஒரு சிறிதளவு அன்பில் தளர வேண்டும். நீ இன்னும் சிறிதளவு அன்பானவனாக மாற வேண்டும். உனது உடலை அன்பு செய் அதிலிருந்து தொடங்கு. உன் உடலை நீ அனுபவி. அது ஒரு அழகான விஷயம், அது ஒரு பரிசு. ஆடு, பாடு, உனது உடலை தொடு, உனது உடலை உணரு.
பிரச்னை என்னவென்றால் நீ உனது உடலை விரும்ப வில்லையென்றால் வேறு யாரும் உடலை விரும்புவதை நீ அனுமதிக்கமாட்டாய். உன்னை விரும்பும் ஒருவர் உனக்கு முட்டாளாக, மடையனாக, கிறுக்கனாக தோன்றுவார். ஏனெனில் நீயே உனது உடலை நேசிக்காதபோது அவர் எதைக் கண்டார் என்றே உனக்குத் தோன்றும். நீ எதையும் காணமாட்டாய். உனது உடலின் அழகை நீ காணாதவரை நீ வேறுயாருடைய நேசிப்பையும் நீ ஏற்றுக் கொள்ளமாட்டாய். அவர் உன்னை நேசிப்பதே உனக்கு அவர் மடையன் என்பதைக் காட்டுவதாகத் தோன்றும், வேறு எதுவும் தெரியாது. அதனால் உனது உடலை நேசி.

கைகளை கோர்த்துக் கொள்ளவும், அணைத்துக் கொள்ளவும், அன்பாய் இருக்கவும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவற்றை தவற விடாதே. நீ அன்பாய் இருக்க ஆரம்பித்தவுடன் உன் உணவு பிரச்னை தானாகவே தீர்வதை கண்டு நீ ஆச்சரியப்படுவாய். அன்பினுள் இருப்பது மிகவும் அருமையான அனுபவம், உணவை அடைத்துக் கொள்வது மிக மோசமான அனுபவம். உணவு அருமையானதல்ல என்பதல்ல, உன்னால் எவ்வளவு எடுத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு மட்டும் எடுத்துக் கொண்டால் அது மிகவும் அருமையானது. அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் பின் வாந்தி வந்துவிடும்.

அன்பைப் பற்றிய ஒரு விஷயம் மிகவும் சிறப்பானது, அது அன்பு ஒருபோதும் அளவுக்கு அதிகமாக என்றாகாது. யாராலும் அளவுக்கு அதிகமாக அன்பு செய்ய முடியாது, யாராலும். அதற்கு எல்லையே இல்லை. ஏனெனில் நீ சாப்பிடும்போது, நீ விஷயங்களை உள்ளே திணிக்கிறாய். நீ அன்பு செய்யும்போது, நீ பகிர்ந்து கொள்கிறாய், நீ கொடுக்கிறாய், அது சுமையை குறைக்கும் ஒரு செயல். மேலும் நீ கொடுக்கும் அளவு உனது சக்தி பாய்ந்தோட ஆரம்பிக்கிறது. நீ ஒரு நதியாகிறாய், ஒரு தேங்கிய குளமாக இருப்பதில்லை.

God’s Got a thing About You

Che # 14    

2.
நீ மேற்புறத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் கீழே வேர்கள் மாற்றமடையாத வரை எதுவும் மாறாது. அதனால் வெளிப்புறத்தை பொறுத்தவரை நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அதை பற்றிய விழிப்புணர்வு கொள்வது மட்டுமே. மேற்புறத்திலிருந்து வேர்களுக்கு நகரு, வேர்களை கண்டுபிடி ஏன் பதட்டமாயிருக்கிறாய், ஒருவர் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுகிறார். அதை நிறுத்தமுடியும். அதிகமாக சாப்பிடாமல் இருக்குமாறு நீ உன்னை கட்டாயப்படுத்தமுடியும். ஆனால் ஏன் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுகிறாய், ஏன், ஏனெனில் அது உடலின் தேவை அல்ல, எங்கோ மனது அதில் தலையிடுகிறது. மனதைதான் சீர் செய்ய வேண்டும், அது உடலின் பிரச்னை அல்ல. நீ ஏன் உனக்குள் திணித்துக் கொள்கிறாய்.

உணவின் மீது உள்ள அதீத ஈடுபாடு அன்பு தேவை என்பதையே காட்டுகிறது. நீ நேசிக்கப்பட வில்லையென்றால் நீ அதிகம் சாப்பிடுவாய். நீ நேசிக்கப்பட்டால், நீ நேசித்தால் நீ குறைவாகவே சாப்பிடுவாய். யாராவது உன்னை நேசிக்கும் சமயத்தில் உன்னால் அதிகமாக சாப்பிடமுடியாது. அன்பு உன்னை நிறைவு செய்கிறது, நீ வெறுமையாக உணர்வதில்லை. அன்பு இல்லையென்றால் நீ வெறுமையாக உணர்கிறாய், ஏதாவது இட்டு அதை நிரப்ப வேண்டும், எனவே நீ உணவை திணிக்கிறாய்.

இதற்கு காரணங்கள், அடிப்படையான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் ஒரு குழந்தை அன்பையும் உணவையும் சேர்த்தே எதிர் கொள்கிறது. அதே மார்பகத்திலிருந்துதான், அதே தாயிடமிருந்துதான் அன்பு உணவு இரண்டையும் பெறுகிறது உணவும் அன்பும் இணைகிறது. தாய் நேசிக்கும்போது குழந்தை ஒருபோதும் அதிக அளவு பால் குடிப்பதில்லை. அதற்கு தேவையுமில்லை. அவன் அனபினால் பாதுகாக்கப்படுகிறான். எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் அம்மா அங்கிருப்பாள், பால் கிடைக்கும், உணவு கிடைக்கும் என்று அவனுக்குத் தெரியும். அவன் பாதுகாப்பாய் உணர்கிறான். ஆனால் தாய் நேசிக்காதபோது அவன் பாதுகாப்பற்று உணர்கிறான். அவனுக்கு பசிக்கும்போது பால் கிடைக்குமா கிடைக்காதா, உணவு கிடைக்குமா கிடைக்காதா என்று அவனுக்கு தெரியாது. ஏனெனில் அங்கு அன்பில்லை. அதனால் அவன் அதிகம் சாப்பிடுகிறான். இது தொடர்கிறது. இது தன்னுணர்வற்றதாக வேரினுள் பதிகிறது.

அதனால் நீ உனது உணவை மாற்றிக் கொண்டே போகலாம், - இதை சாப்பிடலாம், அதை சாப்பிடலாம், இதை சாப்பிடாமல் இருக்கலாம் ஆனால் இது எந்த மாற்றத்தையும் உண்டாக்கப்போவதில்லை. ஏனெனில் இது வேரில் ஆழமாக உள்ளதொரு விஷயம். பின் நீ உணவை திணித்துக் கொள்வதை நிறுத்திவிட்டு, வேறு எதையோ திணித்துக் கொள்ள ஆரம்பிக்கிறாய். இதில் பல வழிகள் உள்ளன. நீ சாப்பிடுவதை நிறுத்திவிட்டு பணத்தை சேர்க்க ஆரம்பிக்கிறாய். இப்போது மறுபடியும் நீ வேறு ஏதோ ஒன்றால் நிரப்பப்படுகிறாய். பின் நீ பணத்தை சேகரிக்க ஆரம்பிக்கிறாய். 

தியான யுக்திகள்

தியான யுக்தி – 1

சோகம் மிக சிறந்த தருணம்

சோகம் வரும் கணம் ஒரு ஆழ்ந்த புரிதலுக்கான கணமாக மாறக்கூடும் ஏனெனில் ஏதோ ஒன்று உன் இதய ஆழத்தை தொட்டுள்ளது. இப்போது நேரத்தை வீணாக்காதே. அதன் மேல் தியானம் செய். அதை ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு மூலையிலிருந்தும் பார். வெறுமனே கோபமாக இருக்காதே. வெறுமனே சோகமாக இருக்காதே. அது தியானம் செய்வதற்கான மிக அற்புதமான தருணமாகும்.

தியான யுக்தி - 2
திரைபடமாக அனுபவி

நீ மனதின் திரைபடத்தை முழுமையாக அனுபவிக்கலாம். பல்வேறு அற்புதமான திரைபடங்கள் திரையில் ஓடும், நீ வெறுமனே பார்க்கலாம். எந்த படமும் இவ்வளவு அற்புதமான நாடகமாகவோ, ஆர்வமூட்டுவதாகவோ இருக்காது. ஆனால் நீ ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்கவேண்டியது மிகவும் முக்கியம்.

தியான யுக்தி - 3
இரண்டுபட்டவனல்ல

எப்போதெல்லாம் நீ கோபமடைகிறாயோ, உனது நண்பன் அல்லது உனது மனைவி அல்லது கணவன் என யார்மீது கோபம் வந்தாலும் - அது மிகச் சிறிய விஷயமாக இருக்கும், ஒரு தினகாலண்டரில் இருந்து தேதியை கிழிக்கும் விஷயமாக கூட இருக்கலாம் சேர்ந்து வைத்திருக்கும் கோபம் வெறுப்பு வெளிவரும் இதை நீ எப்போதாவது நினைத்து பார்த்திருக்கிறாயா எப்போதெல்லாம் இப்படி நிகழ்கிறதோ அப்போதெல்லாம் இயந்திரதனமாக இல்லாமல் தன்னுணர்வோடு இரண்டுபட்டவனல்ல என்று சொல். உடனடியாக நீ உன் இதயத்தின் உள்ளே தீடீரென ஒரு தளர்வு நிலையை உணர்வாய்.

இரண்டுபட்டவனல்ல என்று சொல், அப்போது அங்கே தேர்ந்தெடுக்க எதுவுமில்லை, தேர்வு என்பதே இல்லை, விரும்பவோ, வெறுக்கவோ எதுவுமில்லை. பின் எல்லாமும் சரியாகிவிடும், நீ எல்லாவற்றையும் அரவணைக்கலாம். பின் வாழ்க்கை உன்னை எங்கே கொண்டு சென்றாலும் சரி, நீ செல்லலாம். வாழ்விடம் நீ இணைப்புணர்வு கொள்வாய்.

தியான யுக்தி - 4

ஆனந்தத்தை ஈர்த்துக் கொள்

நீ என்ன செய்தாலும் அது ஆனந்தத்தை உனக்குத் தருமா என்பதில் தெளிவோடு இரு. அது ஆனந்தத்தை கொண்டு வராது என்றால் அதை விட்டுவிடு, அதை செய்யாதே. அது உனக்கு துன்பத்தை தரும் என்பதை உன்னால் பார்க்க முடிந்தால் அதை மறந்து விடு. நேரத்தை வீணடிக்காதே. கடந்த காலத்தில் அதன் மூலம் நீ துன்பப்பட்டாய் என்பது உனக்கு தெரிந்தால், என்றாவது ஒருநாள் அது சந்தோஷத்தை கொண்டுவரும் என்று நம்பிக்கை கொள்ளாதே. அது கொண்டு வராது.
ஒரு சிறிதளவு சந்தோஷத்தை அது கொடுத்தால் கூட அதை அறிகுறியாக எடுத்துக் கொள். அதனுள் ஆழமாக செல், அதை மறுபடி மறுபடி செய், அதை மேலும் மேலும் அதிகமான அளவில் செய், அதன் ஓட்டத்துடன் செல். எந்த வாய்ப்பையும் தவற விடாதே. ஒவ்வொருவருக்கும் சிறிய அளவிலான சந்தோஷம் நிகழும், அதை கொண்டாடு. பின் அது மேலும் மேலும் அதிக அளவில் நிகழ ஆரம்பிக்கும். நீ உன்னுள் சந்தோஷத்தை ஈர்க்கக்கூடிய மின்காந்த சக்தியை உருவாக்கிக் கொள். நீ ஒரு நேர்மறை சக்தி கொண்ட காந்தமாக மாறு.

தியான யுக்தி - 5

பேச்சை நிறுத்து.....உனது அன்பை வெளிப்படுத்து

எப்போதெல்லாம் நன்றாக உணர்கிறாயோ, உணரு. அங்கு மனதையோ, மொழியையோ கொண்டுவந்து அதை ஆராய்ச்சி செய்யாதே. செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு எந்த அடையாளமும் தேவையில்லை. ஏனெனில் எந்த அடையாளமும் உண்மையில்லை. நன்றாக இருப்பதாக உணரும் அந்த உணர்வு அழிவற்றது. நீ அதை நல்லது என குறிப்பிடும்போது நீ அதை சாதாரணமானதாக மாற்றி விட்டாய். யாரிடமாவது நீ நேசத்தை உணர்ந்தால் நான் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்லும்போது அதன் புனிதத்தை குறைத்து விட்டாய். நீ அதை ஏற்கனவே கெடுத்து விட்டாய், புரிகிறதா? இந்த வார்த்தை குலைத்துவிடுகிறது. நீ உனது முழு இருப்பின் மூலம் அதை காட்டு. அதை அனுபவி. மற்றவர் அதை உணரட்டும்..... ஆனால் அதைப்பற்றி எதுவும் சொல்லாதே.  

ஓஷோவின் ஞான கதைகள்-5

வீட்டை விட்டு ஓடிபோவதை பற்றி இரண்டு சிறுவர்கள் தங்களுக்குள் பேசி கொண்டார்கள்.

இது நம்முடைய தகப்பனார்களுக்கு தெரிய வந்தால் நம்மை அடிப்பார்களே என்றான் ஒருவன்.

அதனாலென்ன நாம் அவர்களை திருப்பி அடித்தால் போயிற்று என்றான் மற்றவன்.

நாம் அவ்வாறு செய்ய முடியாதே.ஏனெனில் உன் தகப்பனையும் உன் தாயையும் மதிக்க வேண்டும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது அல்லவா?

சரி அப்படியானால் ஒன்று செய்வோம்.நீ என்னுடைய அப்பாவை அடி,நான் உன்னுடைய அப்பாவை அடிக்கிறேன்.

ஓஷோவின் குட்டி கதைகள்-2

பண்ணையில் பணியாற்றும் ஒரு தொழிலாளிக்கு அவன் வீட்டிலிருந்து தந்தி வந்தது.

தந்தியில் வாசகம் அவனது மனைவி நான்கு குழந்தைகள் பெற்றுள்ளதாக சொல்லிற்று.

எனவே பண்ணை வேலையை விட இன்னும் அதிக வருமானமுள்ள வேறு வேலை ஒனறை தேட வேண்டும் என்று அவன் தீர்மானித்தான்.

பல தொழிலகங்களுக்கு அவன் விண்ணப்பித்தான்.ஒரு தொழிலகத்திலிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

வேலையில் நியமிக்கும் நிறுவனத்தின் அதிகாரி அவனிடம் கேட்டார்.

உனக்கு பொருள்களை விற்பனை செய்யும் தகுதி உள்ளதா?தட்டச்சு தெரியுமா?கம்யூட்டரை இயக்க தெரியுமா?

அவன் மிகவும் வருத்தத்துடன் ஒவ்வொரு கேள்விக்கும் தெரியாது என்றே கூறினான்.

அப்படியானால் உன்னால் என்னதான் செய்ய முடியும்?என்று அதிகாரி கேட்டார்.

உடனே அவன் தன் பையில் வைத்திருந்த தந்தியை எடுத்து காட்டி,இதில் தெளிவாக உள்ளது;படித்து பாருங்கள் என்றான்.

ஓஷோவின் கதைகள்

ஒரு பெரிய தொழிலதிபரின் மனைவி இறந்து விட்டாள்.அவளது ஈம சடங்குகள் ஒரு பெரிய பொது நிகழ்ச்சி போல நடந்து கொண்டிருந்தது.நகரிலுள்ள பெரிய மனிதர்களும் மற்றவர்களும் வந்து துக்கம் கொண்டாடினர்.

அவர்களிடையே ஒரு புதிய மனிதன் மற்றவர்களை விட கவலை கொண்டவனாக காணப்பட்டான்.சடங்குகள் முடியுமுன் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.

மனைவியை இழந்தவர் கேட்டார்.

தேம்பி தேம்பி அழும் அந்த புதியவன் யார்?

பக்கத்தில் நின்ற ஒருவர் சொன்னார்:

தெரியாதா உங்களுக்கு?இறந்து போன உங்கள் மனைவியின் காதலன் அவன்.

மனைவியை இழந்தவர் அவனிடம் சென்றார்.அவனது தோள்களை தட்டி கொடுத்தார்.பிறகு கூறினார்.

உற்சாகமாக இரு.ஒருவேளை நான் மறுமணம் செய்து கொள்ள கூடும்.

ஓஷோவின் ஜோசியம்

ஒரு அரசன் தன் அரண்மனை ஜோஸியரிடம் கூறினான்:- 

ஒருவரின் நடத்தை,எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி கணித்துக் கூறுவது என்பது இயலாத காரியம்.ஏனெனில் வாழ்வின் பாதையில் பல குறுக்கு வழிகள் அமைந்து உள்ளன.ஒருவன் எந்த சமயத்தில் என்ன மாதிரி சிந்திப்பான்,நடப்பான்,எப்படிக் குட்டிக்கரணம் அடித்து மாறுவான் என்பதை யாரும் அறிய முடியாது. வாழ்க்கை என்பது ஒரு புரிந்துக்கொள்ள முடியாத ஒரு புதிர் ஆகும்.

ஜோஸியன் இதை மறுத்தான். 

அரசன் ஒரு செயல் நடத்திக் காட்டி அதை நான் நிருப்பிக்கிறேன்என்றார்.

அரண்மனைக்கு எதிரே ஒரு ஏரி உள்ளது. அரண்மனையிலிருந்து அதைக் கடந்து அந்தப் பக்கம் போக ஒரு பாலம் உள்ளது.அந்தப் பாலத்தைக் கடந்து வந்து அரண்மனைக்கு அருகில் தினமும் முதல் மனிதனாக உட்கார்ந்து ஒரு பிச்சைக்காரன்  பிச்சை எடுப்பான்.

நாளைக் காலையில் அவன் நடந்து வருகிற பாலத்தின் நடுவில் ஒரு துணிப் பையில் தங்க காசுகள் போட்டு வைங்கள்.அவன் முதலில் கடப்பதால் அவன் அதிர்ஷ்டக் காரனா என்று பார்ப்போம்.

அவ்வாறே ஜோசியன் வைத்து விட்டு அவன் அதிர்ஷ்டக்காரன்தான் என்று ஜோஸ்யம் சொன்னார்.

மறுநாள் பிச்சைக்காரன் வந்தான். பாலத்தின் ஆரம்பத்தில், வழக்கத்திற்க்கு மாறாக கண்களை மூடிக்கொண்டு பாலத்தைக் கடந்து அரண்ம்னை வாசலில் வந்து அமர்ந்துக் கொண்டான். சற்று நேரம் கழித்து அதே வழியில் வந்த ஒரு உண்மை குருட்டுப் பிச்சைக்காரி  காலில் தட்டுப் பட்டதை எடுத்துணர்ந்து அதிர்ந்து தன் பையில் ஒளித்துக் கொண்டு நடையைக் கட்டினாள்.

பார்த்துக் கொண்டிருந்த அரசனும் ஜோஸ்யனும் அதிர்ந்துப் போனார்கள்.

ஜோஸ்யன் அந்த பிச்சைக்காரனிடம் , “உனக்குதான் கண் தெரியுமே ஏன் கண்ணை மூடிக் கொண்டு பாலத்தைக்கடந்தாய்?”

காலையில் மனசுல ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. ஒரு வேளை எனக்குக் கண் பார்வை போய்ட்டா ,எப்படி தின்மும் இங்கு வந்து பிச்சை எடுப்பது.எனக்குத் துணை யாரும் கிடையாது. யோசித்தேன். இன்றையிலிருந்து கண் இல்லாமல் நடந்து ஒத்திகை பார்த்து பழகி விட்டால் எதிர்காலத்தில் பிரச்சனை இருக்காது. யாரையும் நம்பி இருக்க வேண்டாம்... அதான் கண் முடி நடந்தேன்.

அரசன்நாம் இந்தச் செயலை நடத்தியதும் அவனுடைய குருட்டு நடை ஒத்திகை எண்ணமும் ஒரே நாளில் நிகழ்ந்து விட்டது. இதை எப்படி எடுத்துக் கொள்வது?”

ஜோஸியன் நான் ஒன்று நினைத்தேன் தெய்வம் ஒன்று நினைத்து விட்டது” என்றார்.