my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

புண்ணியம்


ஒரு ஊரின் பாதை வழியே ஒருவன் நடந்து சென்று கொண்டிருக்கும்போது. அவ்வழியே இருந்த கிணற்றில் தவறுதலாக விழுந்துவிடுகிறான். விழுந்தவன் மேல ஏற முடியாமல் கத்துகிறான்...யாரும் வரவில்லை சிறிது நேரம் போனதும் அந்த வழியே இந்து மதத்தை பின்பற்றுபவன் ஒருவன் வருகிறான். அவன், கூக்குரல் கேட்டு கிணற்றில் எட்டி பார்கிறான்...... "அட பாதாக இப்படி விழுந்துவிட்டாய்யே போன பிறவியில் நீ என்ன பாவம் செய்தாயோ இந்த பிறவியில் சாவ போகிறாய் உன் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று சொல்லிவிட்டு போய்விடுகிறான். இன்னும் கொஞ்சம் நேரம் போனபின் சீனன் ஒருவன் வருகிறான். அவன், "நான் கன்பூயுசத்தை பின்பற்றுபவன். இந்த கிணற்றை சுற்றி சுவர் எழுப்பவேண்டும் எழுப்பாமல் விட்டது மனிதனின் தவறு அடுத்த முறை இந்த தவறு ஏற்படாமல் நான் பார்த்துகொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். அதன் பின் அவன் அழுகுரல் கேட்டு ஒரு பாதிரியார் வருகிறார். அவர் கிணற்றில் விழைந்தவன் அழுகுரல் கேட்டு மிகவும் பதற்றம் அடைகிறார். "நான் காப்பாற்றுகிறேன் அன்பரே கவலை அடையாதே" என்று சொல்லி ஒரு கயிர விட்டு விழுந்தவனை காப்பாற்றுகிறார். அவன், "நான் உயிர் பிழைத்தேன் யாருமே என்னை காப்பாற்றவில்லை நீங்கள் தான் என்னை பிழைக்க வைத்தீர்கள் இந்த நன்றியை நான் மறக்கமாட்டேன்" என்றான். அதற்கு பாதிரியார், "இது எங்கள் மதத்து கடமை அப்பா யார் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீ காப்பாற்றுவாயாக அப்போதே உனக்கு புண்ணியம் ஏற்படும். என் இராச்சியத்தில் சீக்கிரம் புகுவாய்" என்று பைபிளில் வாசகம் உள்ளது. அதனால் காப்பாற்றினேன். "இனிமேல் நீ எப்போதெல்லாம் விழுவாய் என்று எனக்கு முன்பே சொல்லிவிடு நான் வந்து உன்னை காப்பாற்றுகிறேன். பின்பு எனக்கு புண்ணியம் அதிகரித்து இறைவன் இராட்சியத்தில் சீக்கிரம் இடம் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
மக்கள் புண்ணியம் அடைவதற்குதான் மற்றவர்களுக்கு பல உதவிகள் செய்யபடுகிறது. எல்லா உதவிகளும் சுயதேவையை பொறுத்தே அமைகிறது..

சனி, 8 செப்டம்பர், 2012

ஓஷோவின் வாழ்வில்


ஒருமுறை ஓஷோவின் இளமை காலவாழ்வில் அவர் வாழ்ந்த பகுதியில் புராண நாடகங்கள் நடக்கும். இவர் நாடக நடிகர்களுடன் நல்ல நட்புடன் பழகிவந்தார். அவர்களின் நடிப்பில் சில மாற்றங்கள் செய்ய சொல்லி மக்களை சிரிக்க வைத்து கண்டு ரசிப்பார். இது நாடகம் நடத்துபவர்களுக்கு பெரும் இன்னலாக இருக்கும். அவர் தந்தையிடம் ஓஷோவை பற்றி சொல்வார்கள். அதனால் நாடக நடிகர்கள் இவருடன் பழகுவதை நாடகம் நடத்துபவர்கள் விரும்பவில்லை. அதனால் இவர் நாடக நடிகர்களின்  தொடர்பு இல்லாமல் இருந்தார். ஓஷோவின் வீட்டிற்கு தட்சர் ஒருவர் வருவார். ஓஷோவின் வீட்டில் உள்ள மரவேலைகளை எல்லாம் அத்தட்சர்தான் செய்வார் அவர் ஒரு நாட நடிகரும் கூட இதை ஓஷோ தெரிந்து அவரிடம் "நான் சொல்வதை நீங்க கேட்பிங்கள" என்று கேட்க அதற்கு "அவர் தாரளமாக கேட்கலாம்" என்ன விவரம் என்று கேட்டதற்கு... நீங்க இன்று நடக்கும் நாடகத்திற்கு போகும்போது நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும் என்றார். அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

அன்று அவ்வூரில் நாடகம் நடக்கிறது. என்ன நாடகம் என்றால் இராமாயணயத்தில் வரும் கதையில் லட்சுமணன் எதிரின் விஷஅம்பு பட்டு மயக்கத்தில் சாகும் நிலையில் இருக்கிறார். இதை பார்த்த ராமனுக்கு பெரும் கவலை மருத்துவர் சஞ்சீவி மூலிகை இருந்தால் இவரை காப்பாற்றிவிடலாம் என்று சொல்கிறார். இதை கேட்ட அனுமன் அதை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்கிறார். அதற்கு மருத்துவர் அது அருணாசல பர்வதமலையில் இருக்கிறது அது இருளில் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும் அதுதான் அந்த மூலிகை அதை பறித்துக்கொண்டு வா என சொல்கிறார். அதை கேட்டு அனுமன் பறந்து சென்று  மூலிகை எதுவென்று தெரியாமல் மொத்த மலையே பெயர்த்துகொண்டு வருவார். அதுதான் அப்போது நடக்கும் கதை.  அட்டையில் செய்யப்பட்ட மலைபோன்றதில் மெழுவர்த்தி கொளுத்தபட்டு அதை அனுமன் தூக்கி கொண்டு வரும் போது அந்த தச்சர் அனுமனை கயிரு முலம் இழுக்கவேண்டும். ஆனால் தச்சரிடம் ஓஷோ சொல்கிறார் "நீங்க பாதி இழுத்து அப்படியே இருந்திடுங்க அதுக்கு மேல இழுக்காதிங்க" என்று அவரும் அதையே செய்கிறார்.

இச்சம்பவத்தை ஓஷோ சொல்கிறார்:

இப்போது லட்சுவணன் அடிபட்டு சாக இருக்கிறான். இராமன் சோகமாக பக்கத்தில் நிற்கிறான். ஆனால் வர வேண்டிய அனுமன் பாதிலே தொங்கிக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்த மக்களுக்கு ஒரே சிரிப்பு இதை அறிந்த நாடக மேனஜர் ஓடிவந்து கயிறை வெட்டி விடுகிறார். அனுமன் தொப்பென்று கிழே விழுந்து கோவம் அடைகிறார்.  ஆனால் இராமன் தான் பேசவேண்டிய வசனத்தை திரும்ப திரும்ப சொல்லிகொண்டே இருக்கிறான்.

அனுமனே, என் பக்தி நிறைந்தவனே நண்பனே" என்று..

அனுமனோ, "உன் நண்பர்கள் நாசமாய் போக! எனக்கு எலும்பு முறிந்துவிட்டது" என்றான். ஆனால்  இராமன் அதே வசனத்தை சொல்லிகொண்டே இருந்தான்.  "என் தம்பி செத்துகொண்டிருக்கிறான்" என்று...

அதற்கு அனுமன், அவன் சாகட்டும் எனக்கு ஒன்று தெரியவேண்டும் யார் கயிறை அறுத்தது என்று அவன நான் கொல்லாமவிடமாட்டேன்! என்று கத்தினான். இதை பார்த்த மக்கள் வயிறு குலங்க சிரித்தார்கள். அவர்கள் சிரித்த சிரிப்பை கண்டு நான் மகிழ்ந்தேன். பின் என் தந்தையிடம் சென்று என்னை பற்றி பெரிய நாடகமே நடந்தது... 

"
பழைய பாரம்பரிய மதவாதிகளுக்கு சிரிப்பை ஏற்றுகொள்வது சிரமம்தான் மாதா கோயிலில் நீங்கள் சிரிக்கவே முடியாது. மதங்களுக்கு மதபண்பு வேண்டும். சில பண்புகள் காணப்படவே இல்லை அவற்றில் மிக மிக முக்கியமானவை நகைச்சுவை உணர்வு...
ஒரு மனநல மருத்துவரிடம் ஒரு பெண்மணி தன் மகன் சிறு வயதில் இருந்தே இன்றுவரை படுக்கையிலே சீறுநீர் கழிக்கிறான் நீங்கள்தான் அவனின் பிரச்சனையாய் தீர்க்கவேண்டும் என்று சொல்கிறார். அவர் அப்பிரச்சனையை தீர்த்தாரா..என்று தெரியவில்லை ஆனால் அதை பற்றி ஆழ்ந்து சிந்திக்க தொடங்கிவிட்டார்.      

இதை போன்றே ஒரு பிரச்சனையை ஓஷோ அவர்களிடம், ஒரு பெண்மணி " ஐயா, என் மகன் எப்போதும் விரல் சூப்புகிறான். இப்படி வளர்ந்து கல்யாணம் பண்ற நிலையில் இருக்கிறான் இன்னும் விரல் சுப்பிகிட்டே இருக்கான் .எனக்கு ரொம்ப கவலையா இருக்கு" என சொல்கிறார். அதற்கு ஓஷோ, "நீ ஏம்மா கவலை படுகிறாய் நீ சீக்கிரம் அவனுக்கு கல்யாணம் செய்துவை அப்புறம் ஏன் விரலை சப்ப போகிறான், இப்பொழுது இருக்கிற பழக்கம் அப்பொழுது மறைந்துவிடும் கவலைபடாதே" என்றார்.




புதன், 29 ஆகஸ்ட், 2012

முக்தி

 போதிவனத்தில் தியானத்திலிருந்த புத்தரைத் தரிசிப்பதற்காக நடுத்தர வயதுடைய ஒருவன் காத்திருந்தான்.
புத்தர் தியானம் கலைந்து கண் விழித்தார்.
புத்தரை வீழ்ந்து வணங்கினான். புத்தர் அவனிடம் " நீ யார் ? " என்று வினவினார்.
அவன் " என் பெயர் அபிநந்தன் " என்றான்.
புத்தர், " உனக்கு என்ன வேண்டும் ? " என்று கேட்டார்.
அபிநந்தன், " பெருமானேநான் ஒரு ஏழை. எனக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். நான் உலகப் பற்றிலும்உலக வாழ்க்கையிலும் உழன்று ஏராளமான துன்பங்களையும் சித்ரவதைகளையும் அனுபவித்து விட்டேன். என்னை சந்நியாசியாக்கிப் பந்த பாசங்களிலிருந்து விடுவித்து ஞானம் அருளுங்கள். " என்றான்.

புத்தர் சிறிது யோசித்து அவனிடம், " அபிநந்தா இந்த மரத்திலுள்ள இலைகள் ஆடுகின்றன. காரணம் என்ன தெரியுமாகாற்று இலைகள் மீது மோதுவதால் மரத்திலுள்ள இலைகள் ஆடுகின்றன. மனித மனங்கள் இந்த இலைகளைப் போன்றவை. மனித மனங்கள் மீது உலகப் பற்று என்கிற காற்று வந்து மோதுகிறது. அதனால் மனங்கள் ஆடுகின்றன. அலைபாய்கின்றன. முதலில் உன் மனத்திலுள்ள பந்த பாசங்கள் அனைத்தையும் உன்னால் நீக்கிவிட முடியுமா? " என்று கேட்டார்.
அபிநந்தன், " புத்த பெருமானே என்னால் பந்த பாசங்களைத் துறந்து விட முடியும் " என்றான்.

சரி அப்படியானால் நீ இன்று முதல் போதி வனத்திலேயே தங்கலாம். " என்றார் புத்தர்.
சில நாட்கள் கடந்தன.
ஒரு நாள் புத்தர் அருகிலுள்ள குளத்திற்கு நீராடுவதற்காகச் சென்றார். அப்போது அவர் ஒரு மரத்தின் கீழ் அபிநந்தன் பக்கத்தில் ஒரு நாய்க் குட்டி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.
புத்தர் அவனிடம், " அபிநந்தாஇது ஏது? " என வினவினார்.
அபிநந்தன், " பெருமானேஇது என் நாய்க்குட்டி. இது என்னை விட்டு அகல விரும்புவதே இல்லை. எப்போதும் என்னுடனேயே இருக்க விரும்புகிறது. ஆதலால் இதை மட்டும் என்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்." என்று கூறி இழுத்தான்.
புத்தர் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றார்.
மேலும் சில நாட்கள் கடந்தன. புத்தர் முன்பு போலவே நீராடச் சென்று கொண்டிருந்தார்.
இப்போதும் அபிநந்தன் அதே மரத்தடியில் நின்றிருந்தான். அவன் அருகில் நாய்க்குட்டியுடன் ஒரு சிறுவனும் நின்று கொண்டிருந்தான்.
புத்தர் " அபிநந்தாஇந்தச் சிறுவன் யார் ? " எனக் கேட்டார்.
அபிநந்தன், " ஐயனேஇவன் என் மகன். இவன் இந்த நாய்க் குட்டியுடன் எப்போதும் இருக்க விரும்புகிறான். இவனால் இந்த நாய்க்குட்டியை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. ஆதலால் இவனையும்..." என்றான்.
புத்தர் மீண்டும் சிரித்தவாறு அங்கிருந்து சென்றார்.
மேலும் சில நாட்கள் கடந்தன. அன்றைய தினம் புத்தர் நீராடக் குளத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
குளத்தின் கரையிலிருந்த அதே மரத்தடியில் முன்பு போலவே அபிநந்தன் நின்று கொண்டிருந்தான். அவனருகில் நாய்க்குட்டிசிறுவன் ஆகியவர்களுடன் ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்தாள்.
புத்தர்," அபிநந்தாயார் இந்தப் பெண் ? " என்றார்.

பெருமானேஇவள் என் மனைவி. இவளால் இந்தச் சிறுவனை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. ஆதலால் இவளும்..." என்று கூறி இழுத்தான்.
புத்தர் சிரித்துக் கொண்டே இரண்டு காலிப் பாத்திரங்களை எடுத்தார்.

அபிநந்தாஇதோ பார் " என்று சொல்லிக் கொண்டே அவர் ஒரு பாத்திரத்தில் கற்களைப் போட்டு நிரப்பினார். அதைக் குளத்து நீரில் விட்டார். அந்தப் பாத்திரம் குளத்தில் மூழ்கியது.
மற்றொரு காலிப் பாத்திரத்தைக் குளத்து நீரில் விட்டார். அது மிதந்து சென்றது.

அபிநந்தா கனமான பாத்திரம் குளத்தில் மூழ்கி விட்டது. காலிப் பாத்திரம் குளத்தில் மிதந்து செல்கிறது. கனமான பாத்திரம் என்பது பந்த பாசம் எனும் உலகப் பற்று நிறைந்த பாத்திரம். அது பிறவித் துன்பங்கள் என்ற கடலில் மூழ்கிறது. காலிப் பாத்திரம் என்பது ஞானப் பாத்திரம். அது மூழ்காமல் மிதந்து செல்கிறது.
தலையிலிருந்து சில கேசங்கள் தாமாக உதிர்ந்து விடுகின்றன. அவ்விதம் உதிர விரும்பாத கேசங்கள்தலையில் இருந்து கொண்டே நரைத்து நம்மைக் கேலி செய்கின்றன. உதிர்ந்த கேசங்கள் ஓடி விடுகின்றன.
உலகப் பற்று இல்லாதவர்கள் உதிர்ந்த கேசங்களைப் போன்றவர்கள். பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டவர்கள் உதிர விரும்பாமல் தலையில் நரைத்து நம்மைக் கேலி செய்கிற கேசங்கள் போன்றவர்கள். விலக்க முடியாத பந்த பாசங்கள்உதிர விரும்பாத தலையில் உள்ள நரைத்த கேசங்கள் போன்றவை.
உனது மனம் உலகப் பற்றிற்காகவே படைக்கப் பட்டிருக்கிறது. அதற்கு விலையாக நீ உலகத் துன்பங்களையும்சித்ரவதைகளையும் அனுபவித்தேத் தீர வேண்டும். நீ இங்கிருந்து செல்லலாம்போய் வா " என்றார் புத்தர்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

ஒரு செய்தி


விமானம் நடுவானத்தில் பறந்து கொண்டிருந்த போது,பயணிகள் பார்த்து விமானி கூறினார்,
"பயணிகளுக்கு ஒரு வருத்தமான செய்தியைத் தெர்வித்து கொள்கிறேன்.நம் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது .கடவுள் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்.

ஒரு பயணி தன பக்கத்திலிருந்த துறவியை பார்த்து,
விமானி என்ன கூறுகிறார்?என்று கேட்டபோது
,துறவி அளித்த பதில் :
நாம் உயிர் பிழைக்க வழியே இல்லை". 

சனி, 11 ஆகஸ்ட், 2012

அன்பு

அன்பு அறிவில் பிறப்பதில்லை,
அது உழைத்துச் சேர்ப்பதில்லை,
அது தேடி அடைவதில்லை,
அது அதிர்ஷ்டப் பரிசுமில்லை,
அது கொடுத்துப் பெறுவதில்லை,
அது வயதில் வளர்வதில்லை.

அன்பு நீ பிறக்கும்போதே இருந்தது,
நீ மூச்சு விடுவதில் வாழ்வது,
உன் இதயத் துடிப்பில் ஒலிப்பது, 
உன் இன்பச் செயல்களில் ஒளிர்வது.

அன்பு உன் மென்மையின் உறுதி,
உன் படைப்பின் பெருமிதம்,
உன் இருப்பின் அழகு.

அன்பு வாழ்வின் பயிர்,
அதில் வாழ்வதே உயிர்.

ஆகவே

அன்பைத் தேடாதே,
தயவுசெய்து அதைப் பழகாதே,
அதைப் பற்றிப் படிக்காதே,
அன்பைப்பற்றி அறிவுரை கேட்காதே,
அது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறையல்ல.

இப்படித்தான் அன்பு அழிந்தது, அழிகிறது.

குழந்தையிடம் நிறைந்திருக்கும் அன்பை முறைப்படுத்தும் முயற்சியில்,
அறிவுச்சிறையிலிட்டுத்தான் அன்பு அடியோடு அழிகிறது.
அன்பு அழிந்ததால்.....வாழ்வு அர்த்தம் இழந்தது,
இயற்கை அழகு குலைந்தது.
மனிதன்....... வெறும் இயந்திரமாகிப் போனான், தந்திரமாகிப் போனான்.

எனதருமை நண்பனே,
அன்பில் நீ
அமிழலாம், கரையலாம், உணரலாம், இருக்கலாம்,
ஆனால்..... சொல்ல முடியாது.
அது சொற்சிறை கடந்த அனுபவம்,
காட்ட முடியும்......ஆம்.....தொட்டுக் காட்டலாம்.

என் இதயமே
எட்ட இருந்து பார்க்கக்கூடிய பொருளல்ல அன்பு,
கிட்டே நெருங்கி வா,
கூடிக் குலாவி அன்பில் குதூகலிப்போம்.
அன்புடன் ,
ஓஷோ 

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

ஒரே ஒரு பாட்டு


ஒரு மூறை சங்கராச்சார்யா பம்பாயில் உறை ஆற்றிக்கோண்டிருந்தார்அவருக்கு முன்னால் ஒரு மிகப்பணக்காரப் பெண்மணி அவரது குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அந்த குழந்தை “ நான் ஒன்னுக்கு போகனும் ! ஒன்னுக்கு போகனும் “ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தது. சங்கராச்சார்யாருக்கு மன்டை காய்ந்தது ஏனேனில் அவர் மிக முக்கியமான ( ? ) சொற்பொழிவை ஆற்றிக்கொண்டிருந்தார்ஒவ்வொறு முறை அந்த குழந்தை அவ்வாரு சொல்லும் போதும் சபையில் உள்ளவர்களாள் சிரிப்பை அடக்க முடியவில்லை மிகவும் தொந்திரவாக இருந்ததுமேலும் அந்த குழந்தை “ என்ன அனுமதிக்காவிட்டால் நான் இங்கியே ஒன்னுக்கு போயிருவேன் என்னால் அடக்க முடியவில்லை” என்று அழுக ஆரம்பித்தது.
கடைசியாக அந்த சொற்பொழிவை சங்கராச்சாரியார் சீக்கிரமே முடிக்க வேண்டியது ஆயிற்று. அவர் அந்த பெண்மணியை தனியாக அழைத்து சொன்னார் “ முதலில் அவனுக்கு நல்ல கலாச்சாரத்தை கற்றுக்கொடு! அவனால் இன்று மிக த் தொந்திரவு ஆகிவிட்டது “ என அறிவுறுத்தினார்.
உடனே அந்த ப் பெண்மணி “ என்ன பன்னறது சாமி நான் எங்கு போனாலும் வருகிறேன் என்று அடம் பிடிக்கிறான் ! அப்படி வந்தாலும் நம்ப நேரம் அவனால் உக்கார முடியாது ! இப்படி ஒன்னுக்கு போகனும் என்று ஆரம்பித்துவிடுகிறான் என்றாள்
சங்கராச்சாரியார் “ நீ அவனிடம் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவன் பாட்டு பாடவிரும்புவதாகச் சொல்லச் சொல் அவ்வாறு சொன்னால் சபையில் இருக்கும மற்ற யாருக்கும் தெரியாது. அதனால் எந்த இடையூரும் இருக்காது இப்படி சபையில் ஒன்னுக்கு போகனும் என்று அசிங்கமாக கேட்டு கொண்டிருக்க மாட்டான் “ என்றார்.
சில மாதங்கள் கழித்து சங்கராச்சாரியார் அந்தப் பெண்மணியின் வீட்டில் தங்க நேர்ந்தது அந்த பெண்மனி சங்க்ராச்சாரியிடம் “ சுவாமி ! தற்ச்செயலாக நான் ஒரு நெருங்கிய சொந்தக்காரரின் மறைவிற்க்கு செல்ல வேண்டியுள்ளது காலை எப்படியும் வந்து விடுவேன் இந்த குழந்தை என்னிடமோ அல்லது அவனது அப்பவிடமோ மட்டும் தான் துங்கி பழக்கமுள்ளவன் நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் இவனை தங்கள் அருகிலே இன்று இரவு வைத்திருக்கமுடியுமா ? “ எனக் கேட்டார்
சங்கராச்சாரியார் “ ஒரு பிரச்சனையும் இல்லை ! அவன் என்னிடமே இருக்கட்டும் ! “ என்றார்.
நடு இரவில் பிரச்சனை வந்தது அந்த குழந்தை “ நான் பாட்டு பாடவேண்டும் என தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.
சங்கர் “ முட்டாள்! நடு இராத்திரியில் என்ன பாட்டு வேண்டி கிடக்கிறது ! என்னட தூக்கத்தை கெடுத்ததில்லாமல் மற்றவர்களின் தூக்கத்தையும் கெடுத்துவிடுவாய் எல்லாம் காலையில் பார்த்து கொள்ளலாம் இப்ப பேசம ப் படு “ என்றார்
குழந்தை “ முடியாது நான் இப்பவே பாட வேண்டும் பாட்டு அடக்கமுடியாமல் பீறீட்டுகொண்டு வேகமாக வருகிறது என்னால் ஒரு நிமிடம் கூட பொறுக்கமுடியாது ! “ என்றது
சங்கர் “ என்னட இது உன்னோட தொந்தரவாப் போச்சு ! இது தான் முதல் முறை நான் கேட்பது பாட்டு வேகமாக பீறீட்டு கொண்டு வருவதை ! அமாம் யாரோட பாட்டு ( யார் பாடிய பாட்டு என்ற அர்த்ததில் ) “ எனக் கேட்1டார்
குழந்தை “ என்ன கேள்வி இது ! என்னோட சொந்த பாட்டு “ என்றது
சங்கர் “ அப்படியேன்றால் அது பகவான் பாடலாகத்தான் இருக்கும் சரி எனது காதில் மெதுவாகப் பாடு ! மற்றவர்களின் உறக்கமும் கெடாது எனச்சொன்னார்
குழந்தை “ நீங்கள் சொல்வதால் நான் செய்கிறேன் !என்னோட அப்பா அம்மாகிட்ட சொல்லக்கூடாது !” என்றது
சங்கர் “ பாட்டுமட்டும்தான பாடப்போகிறாய் வேறு ஏதாவது செய்யப் போகிறாய எனக் கேட்டார்
குழந்தை “ சுத்தமான பாட்டு மட்டும் தான் “ என்றது
சங்கர் அப்படியென்றால் உடணடியாக பாடிவிட்டு படுத்துவிடு “ என்றார்
குழந்தை காதில் அழகாகப் பாடியது சங்கராச்சாரியார்க்கு அது பாட்டு என்று இவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டிருந்தது எது என்று புரிந்தது  ஓஷோ

சனி, 4 ஆகஸ்ட், 2012

அப்பாவி (முட்டாள் )மனிதன்


ஒரு பயணி, ஒரு புகை வண்டியிலிருந்து வெளியே வந்தான். அவனை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் அவள் என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் ?” என்று கவலையோடு கேட்டாள்.
அவன்,“ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன் . அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது.என்றான்
அவள் நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே. உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ?”
அவன் , “ நான் அப்படித்தான் நினைத்தேன் ஆனால், என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை , நான் யாரிடம் கேட்பது?” என்றான்