my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

தலைவலியை குணமாக்க விரும்புகிறீர்களா?


தலைவலியின் செயற்பாட்டை நீங்கள் உணர்ந்து இருக்க மாட்டீர்கள் .தலையிலோ ,காலிலோ வலி இருந்தால் தொடர்ந்து அதனோடு போராடவோ அல்லது தடுக்கவோ முயலுவீர்கள். வலியை நீங்கள் விரும்புவது இல்லை .நீங்கள் அதனோடு எதிராக இருக்கிறீர்கள் .நீங்கள் பிளவுப் பட்டுவிடுகிறீர்கள் .தலையில் நீங்கள் ஒரு பகுதியில் ,தலைவலி ஒரு பகுதியில் இருக்கிறது .நீங்கள் தனித்தும் உங்கள் தலைவலி தனித்தும் இருக்கிறது .மேலும் அது இருக்ககுடது எனக் கட்டாயப் படுத்துகிறீர்கள் .இது தான் உண்மையான பிரச்சனை .
ஒருமுறை சண்டை போடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் .தலை வலியோடு செல்லுங்கள் .தலை வழியாக மாறுங்கள் .இதுதான் நிலை .இந்த நிலையில் என் தலை எப்படி இருக்கிறது ?மேலும் இந்த கணத்தில் வேறு எதுவும் சாத்தியம் இல்லை .எதிர்காலத்தில் இது இல்லாமல் போகலாம் .ஆனால் இந்த கணத்தில் தலை வலி இருக்கிறது என எண்ணுங்கள் .அதனை மறுக்காதீர்கள் .அதனோடு இயைந்து ஓடுங்கள் .அதனோடு ஒன் றாகுங்கள்.அதிலிருந்து உங்களை நீங்கள் விளக்கிக்கொள்ளதீர்கள் .அதன் பிறகு புதுவிதமான நீங்கள் அறிந்திராத மகிழ்வு திடீர் என பொங்கி வருவதை உணர்வீர்கள் . மறுப்பதற்கு அங்கு யாருமில்லாத பொழுது தலைவலிக்குட மிகுந்த துன்பம் மிக்கதாக இருக்காது .அதனோடு சண்டைப் போடுவதே வலியை கொண்டுவருகிறது உண்மையான வலி இதுதான் .
ஜிசஸ் ஏற்றுக்கொண்டார் .இதுதான் அவருடைய வாழ்வை சிலுவைக்கு கொண்டுவந்தது இதுதான் விதி ,இதைதான் கிழக்கில் அதிஷ்டம் ,பாக்கியம் ,கிஸ்மத் என்று அழைக்கிறார்கள் .ஆகவே உங்கள் அதிர்ஷ்டத்தோடு வாதாட எந்த பொருளும் இல்லை .அதனோடு சண்டைப்போட விஷயம் ஒன்றும் இல்லை .அதனோடு நீங்கள் செய்யக்குடியது ஒன்றும் இல்லை . அது நிகழக் போகின்றது .உங்களால் ஒரேஒரு விஷயம் மட்டும் சாத்தியம் .ஒன்று அதனோடு செல்வது அதாவது இயைந்து செல்வது .நீங்கள் சண்டைப் போட்டீர்கள் என்றால் அது உங்களுக்கு கடுந்துயர் விளைவிப்பதாக அமையும் .அதனோடு நீங்கள் ஒன்றிணைத்து செல்வீர்கள் என்றால் துயரம் மறைந்து விடும் அதன் ஓட்டமாகவே மாறிவிடுங்கள் .
தலைவலியோடு இருக்கும்போது நீங்கள் இதை முயற்சி செய்து பாருங்கள் .உடல்நிலை சரயில்லாமல் இருக்கும் போதுஇத்தனை முயற்சி செய்து பாருங்கள் .வெறுமனே அதனோடு இயைந்து செல்லுங்கள் .ஒருமுறை இத்தனை நீங்கள் அனுபவித்தீர்கள் என்றால் அதனோடு ஒன்றிணைந்து செல்வதால் துயரம் மறைந்துவிடும் என்ற ஆழமான வாழ்க்கை ரகசியத்தை அறிந்தவராவீர்கள் .
மேலும் ,அதனோடு நீங்கள் முழுவதும் ஒன்றிணைந்து செல்வீர்கள் என்றால் வலியானது இன்பமாக மாறிவிடும் .
ஆனால் இவையொன்றும் புரிந்துக்கொள்ள வேண்டிய தர்க்க விஷயம் இல்லை .அறிவார்த்த விசயமாக இத்தனை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம் .ஆனால் இதனால் பயன் ஒன்றும் இல்லை .வாழ்க்கையில் இத்தனை முயற்சி செய்து பாருங்கள் .இதற்கு உரிய நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் இருக்கும்,சில தவறுகள் இருக்கும் அதனோடு ஒன்றிணைந்து சென்று முழுச் சூழலையும் எவ்வாறு மாற்றுகிறீர்கள் என்று பாருங்கள் .
பதஞ்சலி யோகம் , ஒரு விஞ்ஞான விளக்கம் ,ஓஷோ

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

ஓஷோவின் குட்டி கதைகள்-4





ஒரு பெரிய பணக்காரன் தன் நண்பனிடம் சொன்னான்.

நான் இறந்த போன பின் என் சொத்துக்களை எல்லாம் தர்மத்திற்கு கொடுக்க இருப்பது தெரிந்தும் ஏன் எல்லோரும் என்னை குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள்?

அதற்கு நண்பன் சொன்னான்:

இதற்கு பதில் கூற வேண்டுமானால்,உனக்கு பன்றி,பசுவை பற்றிய விபரங்களை சொல்ல வேண்டும்.

பன்றி பசுவிடம் தன்னுடைய ஏக்கத்தை கூறிற்று.அதாவது பன்றி எவ்வளவுதான் செய்தாலும் மக்கள் பசுவைதான் புகழ்கின்றார்கள்.பசு பால் தந்தாலும் பன்றி அதைவிட அதிகமாக தன் மாமிசத்தை தருகிறது.இருந்தும் தன்னை ஒருவரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் என்றது பன்றி.

பசு கூறியது:

நீ சொல்வது உண்மையாக இருக்கலாம்.ஏனெனில் நான் உயிருடன் இருக்கும் போதே இவைகளை கொடுத்து கொண்டிருக்கிறேன்.

ஓஷோ கூறுகிறார்:

மரணம் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு போய்விடும்.பின் எதற்காக கவலை படுகிறாய்?

ஓஷோவின் குட்டி கதைகள்-3


ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும்
காண்பிப்பாயாக என்று ஏசுநாதர் சொல்லுகின்றார் என்று
ஒரு கிறிஸ்துவ துறவி போதனை செய்தார்.

இதை கேட்டு கொண்டிருந்த ஒருவன் உண்மை தானா என்று அந்த துறவியையே பரிசோதிக்க விரும்பினான்.

அவர் கன்னத்தில் அறைந்தான்.

உண்மையான அந்த துறவி மறு கன்னதையும் காட்டினார்.

அவன் தன் வலு முழுவதும் கூட்டி மறு கன்னத்திலும் அறைந்தான்.

உடனே அவனை பாய்ந்து பிடித்த துறவி செம்மையாக உதைக்க தொடங்கினார்.

வலி தாங்க முடியாமல் அலறியபடி அவன் கேட்டான்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள்?இன்று காலையில் தானே ஒரு கன்னத்தில் ஒருவன் அறைந்தால் மறு கன்னத்தையும் அவனுக்கு காட்டு என்று உபதேசம் செய்தீர்கள்?

துறவி சொன்னார்:

ஏசு மறு கன்னத்துடன் நிறுத்திவிட்டார். மறு கன்னத்திலும் அறைந்தால் என்ன செய்வது என்று சொல்லவில்லை.அதை நம்முடைய விருப்பத்துக்கு விட்டுவிட்டார்.

ஓஷோவின் குட்டி கதைகள்-2



பண்ணையில் பணியாற்றும் ஒரு தொழிலாளிக்கு அவன் வீட்டிலிருந்து தந்தி வந்தது.

தந்தியில் வாசகம் அவனது மனைவி நான்கு குழந்தைகள் பெற்றுள்ளதாக சொல்லிற்று.

எனவே பண்ணை வேலையை விட இன்னும் அதிக வருமானமுள்ள வேறு வேலை ஒனறை தேட வேண்டும் என்று அவன் தீர்மானித்தான்.

பல தொழிலகங்களுக்கு அவன் விண்ணப்பித்தான்.ஒரு தொழிலகத்திலிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

வேலையில் நியமிக்கும் நிறுவனத்தின் அதிகாரி அவனிடம் கேட்டார்.

உனக்கு பொருள்களை விற்பனை செய்யும் தகுதி உள்ளதா?தட்டச்சு தெரியுமா?கம்யூட்டரை இயக்க தெரியுமா?

அவன் மிகவும் வருத்தத்துடன் ஒவ்வொரு கேள்விக்கும் தெரியாது என்றே கூறினான்.

அப்படியானால் உன்னால் என்னதான் செய்ய முடியும்?என்று அதிகாரி கேட்டார்.

உடனே அவன் தன் பையில் வைத்திருந்த தந்தியை எடுத்து காட்டி,இதில் தெளிவாக உள்ளது;படித்து பாருங்கள் என்றான்.

ஞானகக்தைகள் - முல்லா நசுருதீன்



முல்லா நசுருதீன் என்பவர் சுபி(sufi) ஞானி. இவர் ஒரு mystic என்றும் சொல்லுவார்கள். அதாவது சித்தர்கள் போல் மறை பொருள் உணர்த்திப்பேசுவார். ஆன்மிக அறிவு விரவிக்கிடக்கும்.இவரைப் பற்றிய கதைகள் ஏராளம். 

1. ஒரு நாள் இரவு முல்லா விளக்குக் கம்பத்தின் கிழே ஏதோ தேடிக் கொண்டிருந்தார். 

அங்கு வந்த அவர் நண்பர் என்ன தேடுகிறீகள் என்று கேட்டார். அதற்கு அவர் ஒரு வெள்ளி நாணயத்தைத் தொலைத்துவிட்டதாக சொன்னார். எந்த இடம் என்று சரியாகச் சொன்னால் தான் உதவுவதாகச் சொன்னார் நண்பர்.

அதோ அந்த இடம் என்று கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு இருட்டு இடத்தைக் காட்டினார். அந்த இடத்தில் தேடாமல் இங்கு ஏன் தேடுகிறீர்கள் என்று நண்பர் கேட்டதற்கு ,”இங்குதான் வெளிச்சம் இருக்குஎன்று பதிலளித்தார்.

பிரச்சனை ஒரு இடத்தில் இருக்கும். ஆனால் அதற்கானத் தீர்வை வேறு இடத்தில் தேடுவோம்