my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

தெய்வ பயமும், சரணாகதியும் பற்றி விளக்கும் போது ஓஷோ சொன்ன கதை

ஒரு பிச்சைக்காரன் அனாதை சிறுவன் ஒருவனை வளர்த்து வந்தான். பிச்சைக்காரனின் குடிசை அருகே சுடுகாடு இருந்தது. 
இரவில் சிறுவன் சுடுகாட்டுக்குள் சென்று குறும்புகள் செய்யாமல் தடுக்க அவனிடம், "சுடு காட்டுக்குள் இரவில் நுழைந்தால் அங்கிருக்கும் பேய்கள் உன்னைப் பிடித்து தின்றுவிடும்என்று பயப்படுத்தினான். அந்த சிறுவன் பெரியவனாக வளர்ந்து கல்வியறிவு பெற்ற பின்னும் பேய் பயம் ஓயவில்லை. 

பிச்சைக்காரன் வாலிபன் கையில் தாயத்தைக் கட்டி, " இப்போது தெய்வ சக்தி உள்ளது. கடவுள் உனக்கு பேய்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பார்" என்று கூறினான்.
வாலிபன் தைரியமாக சுடுகாட்டை இரவில் தாண்டி வெளியூர் செல்லும் போது, " பேய்களே அஞ்சும் கடவுள் எவ்வளவு பெரிய பேயாக இருக்க வேண்டும் ?" என்று நினைத்து கடவுள் மீது பயம் கொண்டான். முன்பெல்லாம் பேய்யை நினைத்து இரவில் பயந்தவன், கடவுளை நினைத்து பயப்படத் தொடங்கினான். 

விபரீதத்தை உணர்ந்த பிச்சைக்காரன் கொடுத்த தாயத்தை தூக்கி எறிந்து, சுடுக்காட்டில் சென்று பேய்களை பற்றியும், பிசாசுகளை பற்றியும் விளக்கினான். அதன் பிறகு அந்த வாலிபன் மனதில் இருக்கும் பேய்களும், பிசாசுகளு விடைப்பெற்று மனத்தெளிவு பெற்றான்.


வியாழன், 12 ஏப்ரல், 2012

மீண்டும் புல் தானாகவே வளருகிறது


நிகழ்காலத்தில் சிந்தனை என்பதே கிடையாது. இதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இப்போது, இந்தக் கணத்தில் சிந்தனை எப்படி இருக்க முடியும்? நிகழ்கணத்தில் அது இருக்காது. எதிர் காலத்திலோ, இறந்த காலத்திலோதான் அது இருக்க முடியும்.
இறந்த காலம் பற்றி நினைத்தவுடனே, கற்பனை வந்து விடுகிறது, எதிர்காலம் பற்றி நினைத்தவுடனே, தர்க்கம் தோன்றிவிடுகிறது. நிகழ்காலம் பற்றி நீங்கள் எப்படி நினைக்க முடியும்?
நிகழ்காலத்தில் வாழலாம். அவ்வளவுதான்.
இந்தக் கனப்பொழுது மிக நுட்பமானது. மிகச் சிறியது; அணுவைப் போல வேறு எதுவும் அதற்குள் நுழைய இடமே இல்லை. சிந்தனைக்கு இடம் வேண்டும், வசதியான அறை வேண்டும், நிகழ் கணத்திற்குள் இடமே கிடையாது, வெறும் ‘இருத்தல்’ மட்டுமே அதில் உண்டு.
ஆகவே, நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது, சிந்தனை நின்று விடுகிறது. சிந்தனை அற்றது நிகழ்காலம்தான். சமய வழிப்பட்ட மனம் எதிர்காலம் பற்றிக் கவலைப்படாது. முன்பு என்ன நடந்தது என்பது பற்றியும் நினைத்துப் பார்க்காது. கணத்திற்குக் கணம் வாழ்வது சமய வழிப்பட்ட மனம்.
ஒரு கணம் மறைந்ததும், மறு கணம் வந்துவிடுகிறது. ஒவ்வொரு கணமாக வாழ்ந்து செல்வது அது. வருகிற ஒவ்வொரு கணத்திற்குள் வாழ்கிறவர் சமயவாதி. அவர் ஆறு போன்றவர்.
சமயவாதி, சமய மனிதர், சமய மனம் எப்போதும் இடையறாது இயங்கிக் கொண்டே இருக்கும்; நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதை மிகமிக ஆழமாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், அவரது இயக்கத்திற்கு ஒரு நோக்கம் இருக்காது. எதை நோக்கியும் அது இயங்காது. சும்மா இயங்கும் – ஏன்னென்றால் இயக்கம்தான் அதன் இயல்பு; எதார்த்தம்.
இயக்கமே எதார்த்தத்தின் இயல்பு. இயக்கம் எதார்த்தமாய் இயங்குகிறது. நதி நீரில் மிதப்பவரைப் போல, அவர் கால நதியின் ஓட்டத்தில் மிதந்து செல்பவர். ஒவ்வொரு கணமும் அவர் உயிர் வாழ்பவர்; ஒவ்வொரு கணமும் இயங்கிக் கொண்டிருப்பவர்.
அவர் ஒன்றுமே செய்வதில்லை. அவர் அந்தக் கணத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர். அந்த வினாடி நகர்ந்ததும், அடுத்த வினாடி வந்து விடுகிறது. அதிலும் அவர் வாழ்கிறார்.
- ஓஷோ

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

ஓஷோவின் குட்டி கதைகள்


முழு நிலா இரவில் தேன் நிலவில் முல்லாவிடம் அவரது மனைவி கேட்டாள்
முல்லா உனக்கு த் தெரியுமா ? பெளர்ணமி இரவில் கடல்கள் கொந்தளிக்கும் , மனித மனம் பைத்தியகாரத்தனம்மாக வேலை செய்யும் ! கேள்விப் பட்டிருக்கிறாயா ? “

முல்லா நான் கேள்விப்பட்டதில்லை , ஆனால் உன்னை முதல் முதலாக காதலிக்கிறேன் என்று சொன்னது பெளர்ணமி இரவில் தான்என்றார்

உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு!


முல்லா தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார் , அப்போது நாளிதழில் வந்த ஒரு( கிழ்கண்ட ) விளம்பரம் அவரை கவர்ந்தது

மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு!
1.)
சாதா உடற் இளைப்பு ரூ 1,000/- ஒரு மணி நேரம் ( 2 - 5 கிலோ வரை)
2.).
சூப்பர் ட்ரிம்மர் - ரூ 2,000/- இரண்டு மணி நேரம் ( 6-10 கிலோ வரை)
3.)
ஹெவி ட்ரிம்மர் - ரூ 3,000/- மூன்று மணி நேரம் ( 11 – 15 கிலோ வரை )
4.)
அல்டிமேட் ட்ரிம்மர் - ரூ 10,000/- கால வரையரை இல்லை ( எடை வரையரை இல்லை )

முன்பதிவிற்க்கு முந்துங்கள்

முல்லா அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அதை முயற்ச்சி செய்து பார்த்துவிடுவது என முடிவேடுத்தார் , ஆனாலும் முதலில் சாதா முறையில் முதலில் பரிச்சிக்க விரும்பி அதற்க்கான பணத்தை கட்டினார். அவர் ஒரு காலியான அறையில் விடப்பட்டார் அந்த அறை 16 x 16 என்ற அளவில் இருந்தது அதன் மூலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார் அவரூடைய கையில் ஒரு அட்டை அதில் ஒரு மணி நேரத்திர்க்குள் என்னை துரத்திப் பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம் என்று எழுதியிருந்தது , முல்லா அந்த பெண்னை துரத்த ஆரம்பித்தார் அவருக்கு எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது அவர் துரத்திய துரத்தலில் அவருடைய எடையும் கனிசமாக குறைந்தது..

முழு திருப்தியுடன் அதற்க்கு அடுத்த முறையை பரிச்சிக்க விரும்பினார் இந்த முறையில் வித்யாசம் அறையின் அளவு 40x40, சாதா முறையைவிட நல்ல அழகான பெண் , கால அவகாசம் 2 மணி அவ்வளவுதான், மற்றபடி முறை ஒன்றுதான் ,இங்கும் அவருக்கு முழுதிருப்தி.

மிகவும் மகிழ்ச்சியுடன் அடுத்த முறையை தேர்ந்தெடுத்தார் வித்யாசம் அறையின் அளவு 75x75 , மிக அழகான பெண் , கால அவகாசம் 3 மணி நேரம் , முல்லா கணிசமாக எடை குறைந்திருந்தார் அவருக்கு , எல்லா முறைகளிலும் தான் சிறப்பாக செய்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம் , கடைசியாக அல்டிமேட் ட்ரிம்மர் முறையிலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தார், அதற்க்கான பணத்தையும் கட்டினார் ,

வரவேர்ப்பாளர் அவரிடம் 16 வது மாடிக்கு நடந்து செல்லும் படி சொன்னார், முல்லாவும் தான் அடையப்போகும் சந்தோசத்தை எண்ணியவரே கஷ்டப்பட்டு 16 மாடிக்கு வந்தார் , அங்கு அவர் 42 வது மாடிக்கு 15 நிமிடத்திற்க்குள் ஓடி வந்து சேர வேண்டும் அப்படி வந்தால் தான் பயிற்சி உண்டு என தெரிவிக்கப்பட்டது , முல்லாவிற்க்கு வேறு வழியும் இல்லை , தான் கானப்போகும் மிக மிக அற்ப்புதமான அனுபவத்தை நினைத்தவாரே உயிரைக் கொடுத்து ஓடி 42 வது மாடியை 13 நிமிடத்தில் அடைந்தார். அது மிகப்பரந்த ஒரு மொட்டை மாடி அதன் அளவு சுமார் 500x500 அடி பரப்பளவு இருக்கும் , அதன் மூலையில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான். அவர் மொட்டை மாடியை அடைந்ததும் அவருக்குப்பின் கதவு மூடப்பட்டது, முல்லா மூச்சு வாங்கியவாரே அந்த அறையை நோக்கி நடந்தார் அங்கே ஒரு பெரிய மனிதக்குரங்கு நான் உன்னை துரத்திப் பிடித்தால் , என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன் என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் அமைதியாக அமர்ந்திருந்தது

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

ஓஷோவின் குட்டி கதைகள்


முல்லா தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணின் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார்

ஐயா ! நான் உங்களது மகளை திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறேன்

அந்தப் பெண்ணின் தந்தை அவனைப் பார்த்து கேட்டார் இது நிமித்தமாக எனது மனைவியை பார்த்தாயா ? “

பார்த்தேன் ஐயா ! ஆனாலும் எனக்கு உங்களின் மகளைத் தான் அதிகம் பிடித்திருக்கிறது என்றார் முல்லா

பெண்ணின் தந்தை : ???????????

புதன், 4 ஏப்ரல், 2012

முல்லாவின் கிறுக்குத்தனம்

முல்லாவும் அவரது மனைவியும் ஒரு நாள் தொலைக்காட்சி பார்த்துக்க்கொண்டிருந்தனர் , அதில் ஒரு சுகமளிப்பவர் ( faith healer ) உறை ஆற்றிக்கொண்டிருந்தார் அவர் உங்களின் உடம்பில் ஏதாவது பகுதியை குனப்படுத்தவேண்டும் எனில் , உங்களது ஓரு கையை பாதிக்கப்பட்ட உறுப்பில் வைக்கவும் மற்றொரு கையை இந்த தொலைக்காட்சிப் பெட்டியில் வைத்தால் அந்த உருப்பு ஆண்டவனுடைய கிருபையினாலே குனப்படுத்தப்படும்என்றார்

இதைக் கேட்ட அவரது மனைவி தன்னுடைய கையை தன்னுடைய இதயத்தில் வைத்தாள்.

முல்லாவோ அவசரமாக தனது கையை அடிவயிற்றை நோக்கி கொண்டு சென்றார்
இதை கவனித்த அவரது மனைவி முல்லா ! இவருக்கு பாதிக்கப்பட்ட உருப்பை மட்டுமே குனப்படுத்தவைக்க முடியும். இவரால் இறந்தவைகளை உயிர்த்தெழச்செய்யமுடியாது விட்டுவிடுஎன்றாள்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

ஓஷோவின் குட்டி கதைகள்


ஒரு மன நல விடுதியை பார்வையிட சென்றார் ஒரு மன நல நிபுணர். மன நல விடுதியின் பொறுப்பாளர் அவரை சுற்றி பார்க்க அழைத்து சென்றார். அவரது கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவன் தனது அறையில் கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தான். சுவரின் மேல் ஒரு சாதாரண பெண்ணின் படம் இருந்தது. அவன் அதன் முன்னால் கைகளை கூப்பிய வண்ணம் கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தான். மனநல நிபுணர் இந்த மனிதனுக்கு என்னவாயிற்று? என்று கேட்டார்.
பொறுப்பாளர், அவனை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி, அவரை சற்று தொலைவில் அழைத்து சென்று, அவனை பிரார்த்தனையிலிருந்து யாரும் தொந்தரவு செய்வதை அவன் விரும்பவில்லை. முழு நாளும் அவன் பிரார்த்தனை செய்த வண்ணம் இருக்கிறான் என்றார்.
அந்த படம் யாருடையது? என்று நிபுணர் கேட்டார்.
பொறுப்பாளர் சிரிக்க தொடங்கினார். அது யாருமில்லை ஒரு சாதாரண பெண். அவன் அவளை காதலித்தான். ஆனால் இருவரும் வேறு வேறு சாதிகளை சார்ந்திருந்தபடியால் அந்த பெண்ணின் தந்தை மறுத்து விட்டார். இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அந்த பெண் ஒரு தெய்வமாகி விட்டாள். கிடைக்க முடியாமற் போனதால் ஒரு சாதாரண பெண் தெய்வமாகி விட்டாள். இப்போது அவன் இந்த பிறவியில் நடக்காத ஒன்று பிரார்த்தனையின் மூலம் அடுத்த பிறவியிலாவது நடக்கும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான்.
இந்த மாதிரி ஒரு கேஸை நான் பார்த்ததேயில்லை என்றார் நிபுணர்.

அடுத்த அறையில் மற்றொரு மனிதன் தனது தலையை சுவரில் மோதி கொண்டிருந்தான். அவனை இரண்டு காவலாளிகள் பிடித்து கொண்டிருந்தனர்.
இவனுக்கு என்னவாயிற்று? ஏன் இவன் தனது தலையை சுவரில் மோதி கொள்கிறான்? என்றார் மன நல நிபுணர்.
இவன்தான் அந்த பெண்ணை திருமணம் செய்தவன் என்றார் விடுதி பொறுப்பாளர்.