my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

போதிதர்மனின் சூத்திரம்-ஓஷோ விளக்கம்


போதி தர்மனின் சூத்திரங்களிலிருந்து ஒன்று;

Detachment is Enlightenment because it negates appearances.
துறவு என்பது ஞானமடைதலுக்கான வழி. இது தோற்றங்களிலிருந்து விடுபடவைக்கிறது. 

 
இந்த வழியின் சாராம்சம் ஒட்டாதிருப்பது. அதாவது துறவு.

போதி தர்மன் சொன்னான் ; புத்தன் சிரிக்காமலேயே சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று. யாருமே இதுவரை புத்தன் சிரித்துக் கொண்டிருப்பதான சிலையை பார்த்ததில்லை. அவரின் இருப்பே சிரிப்புதான்.

சிரிப்பின் உளவியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் சிரிப்புக்கும் புத்தனின் சிரிப்புக்கும் வேறுபாடு உண்டு. உங்கள் வாழ்வு எந்த நேரத்திலும் ஏதாவது நிகழ்வுகளின் பாதிப்பால் அலைக்கழிக்கப்பட்டு துன்பம் நேரலாம் என்ற மனநிலையில் ஏதாவது அபத்தமாகநடந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிரித்துவிடுகிறீர்கள். அந்த அபத்தம் உங்களுக்கு தப்பிக்க உதவுகிறது துன்பத்தை மறக்க. டென்ஷன் மறைகிறது. சிரிப்பு ஆரோக்கியமானது. நிமிடத்தில் உடலை வேறு நிலைக்கு எடுத்து சென்றுவிடுகிறது. ஆனால் அதுவும் நிமிடத்துக்குத்தான். பின் மறுபடி உன் இருட்டுக் குகைக்குள் போய்விடுகிறாய்.

உண்மைதான் உன் கனவு எதனால் ஆனதோ அதனால் ஆனதே இந்த வாழ்வும். ஆனால் கனவை நீ ஒரு மாயை என்கிறாய்...நனவை 'மிகுந்த சிரமப்பட்டு' தலையில் வைத்துக் கொண்டாடுகிறாய் . கனவுக்கும் நீ நனவு என்று சொல்வதற்கும் வித்தியாசமே இல்லை. இந்த உலகில் வாழ். ஆனால் இந்த உலகம் உன்னுள் இருக்கக் கூடாது. நினைவிருக்கட்டும். இது எல்லாமே அழகான கனவுதான். இந்த வாழ்வு என்பது மாறிக்கொண்டும் மறைந்துகொண்டும் தோன்றிக் கொண்டும் இருக்கிறது. கனவும் அப்படித்தானே!

அதனால் இந்த நனவுடன் ஒட்டிக் கொண்டிராதே! எப்படி தூங்கி எழுந்ததும் கனவுடன் ஒட்டிக் கொள்ளாமல் விடுபட்டுவிடுகிறாயோ அப்படி. ஒட்டிக் கொண்டிருப்பது என்பது விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது. அப்படி ஒட்டுதல் இல்லாமல் இருக்கையில் அபரிமிதமான ஆற்றல்விடுபடுகிறது. இவைகளுடன் ஒட்டிக் கொண்டுள்ளதால் சிறைபட்டுள்ள அந்த ஆற்றல் ஒரு புதிய உதயத்தை, புதிய இருப்பை, ஒளியை, புரிதலை உனக்குள் கொண்டுவரும். பிறகு துன்பம் என்பதே இல்லை.
இது நடக்கையில் நீ மிகவும் அமைதியான, இதுவரை அனுபவித்திராத அமைதியுடன் இருப்பாய். உன் இருப்பிலேயே சிரிப்பு வெடித்துக் கொண்டிருக்கும். அதைத்தான் போதிதர்மன் சொன்னான். புத்தன் சிரிக்கிறான் ஆனால் சிரிக்காமலேயே.

அவனிடம் டென்ஷன் இல்லை அதனால் சிரிப்பதில்லை. ஆனால் முழுவாழ்வின் முழுஅபத்தமும் புரியும் அதானால் சிரிக்கவும் செய்கிறான்.

டென்ஷன் என்றால் ஆற்றல் அடக்கப்படுகிறது என்று அர்த்தம். அது ஒரே இடத்தில் வேறு எங்கும் நகர்ந்து செல்ல முடியாமல் தேங்கி திணற ஆரம்பிக்கிறது என்று பொருள். புத்தன் ஆற்றலை அடக்குவதில்லை. டென்ஷன் இல்லாததால் சிரிப்பதும் இல்லை. அடக்கப்பட்டதே வெடித்துக் கொண்டு கிளம்பும் வெடிச்சிரிப்பாகவும். புத்தனுக்கு ஒவ்வொரு செல்லிலும் சிரிப்பு பொங்குவதால் அவன் ஆற்றலை அடக்கி பின்பு விடுவிப்பது என்பது இல்லை. உதட்டில் வருகிற சிரிப்புமட்டுமல்ல அவனுடையது. அவனின் இருப்பே சிரிப்புதான். இந்த விழிப்புணர்வுதான் நீயும் நானும் காண முடியாததை இந்த உலகில் அவனால் காண முடிகிறது.


ஒரு பெண் திடீரென்று சொன்னாள்தன் பக்கத்தில் படுக்கையில் படுத்திருந்தவனிடம்…’சீக்கிரம் எழுந்திரு! என் புருஷன் வந்திட்டான். இது என் புருஷனோட கார் சத்தம்தான். அது ரொம்ப தூரத்திலேர்ந்து வரும்போதே சத்தம் போடும் என்றாள். இப்பதான் பிரேக் போட்டிருக்கான்.
    கூட இருந்தவன் அலறி எழுந்து இப்ப நான் எங்கே போக?’ என்றான்.

    ‘
ம்ஜன்னல்லேர்ந்து குதி!என்றாள். நல்லவேளையாக அது ஒன்றும் அறுபது மாடி கட்டிடம் இல்லை. கிரௌண்ட் ஃப்ளோர் தான். வெளியே குதித்தான் நிர்வாணமாக! அப்போது மழை வேறு தூறிக் கொண்டிருந்தது.

   
அதிர்ஷ்டவசமாக, அந்த அதிகாலை வேளையில் ஒரு கூட்டம் ஜாகிங்போய்க் கொண்டிருந்தது. அவன் அவர்களோடு சேர்ந்து கொண்டான். நிர்வாணமாக அங்கேயே நின்றால் மாட்டிக் கொண்டுவிடுவோம் என்று அவர்களோடு ஓட ஆரம்பித்தான். அது இருட்டாக இருந்ததால் கிட்டத்தட்ட இரண்டு டஜன் ஆட்கள் ஓடிக்கொண்டிருந்தபடியால் அவன் எப்படியோ சமாளித்துவிட்டான்.

   
பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்தவன் இவன் நிர்வாணமாக வருவதைப் பார்த்துவிட்டுஆவலை அடக்கமுடியாமல்

    ’
பாஸ்! நீங்க எப்போதுமே டிரஸ் இல்லாமதான் ஓடுவீங்களா?’ என்று கேட்டான்

    ‘
ஆமா! ஆமா!அப்படித்தான்

   
கொஞ்சம் கொஞ்சமாக விடிந்துகொண்டிருந்தது. வெளிச்சம் வர வர அந்த ஓட்டக்காரன் கண்டு கொண்டான் இந்த நிர்வாண மனிதன் வேறு யாருமல்லஅந்த ஊர் சர்ச்சின் ஃபாதர்தான் என்று!

   
சிறிது வெளிச்சத்தில் இன்னொரு விஷயத்தையும் கண்டான். ஓடிக்கொண்டிருக்கிற ஃபாதர் ஆணுறை அணிந்திருந்தார் என்பதுதான் அது.

   
ஓடிக்கொண்டே கேட்டான்….'ஃபாதர்! நீங்க எப்போதும் ஓடும்போது காண்டம் போட்டுக்கிட்டுதான் ஓடுவீங்களா?’

   
ஃபாதர் எரிச்சலோடு சொன்னார் ; 'எப்போதும் இல்லமழை பெய்யும் போது மட்டும்' என்றார்.
வாழ்வு அபத்தமானது. இருபத்துநாலு மணிநேரமும் நகைச்சுவையானவை அதன் அபத்தங்கள். கண்டு கொள்ளத்தான் கண்கள் வேண்டும். புத்தன் தனியாக உதடுகளால் சிரிக்க வேண்டிய அவசியமில்லை. தன் அமைதியில் சிரித்துக்கொண்டேதான் இருக்கிறார். அதுதான் புத்தனின் சிரிக்காமல் சிரித்தல்.

நீ விடுதலை அடையும்போது மக்கள் எப்படி சின்ன சின்ன முடிச்சுகளில் சிக்கி தவிக்கிறார்கள் என்ற அபத்தத்தை கண்டு சிரிப்புதான் வரும். நீயும் இதே மாதிரிதான் இருந்தாய் என்றாலும். சின்ன சின்ன முடிச்சுகள்தான் அவைகள். போதி தர்மன் சொல்வது தோற்றங்களிலிருந்து விடுதலை அடைவதே லட்சியம்.காண்கிற தோற்றங்களிலிருந்து விடுதலை.

நீங்கள் காண்கிற உலகம் தோற்றம் மட்டும். ஆழமான இந்த தோற்றத்திற்குப் பின்பு இருப்பது உண்மை. தோற்றங்களிலிருந்து விடுபட்டால் அதை உணரலாம். உன் எல்லா உறவுகளும் பற்றுகளும் அதை தடுக்கின்றன. வெகு அபூர்வமாகவே நாம் வளர்கிறோம். மற்றபடி சிறுவயதில் பொம்மை இப்போது வேறு ஏதோ ஒன்று. பொம்மை இடம் மாறி இருக்கிறது அவ்வளவே!

போதிதர்மனின் வாக்கு ; ஒட்டுதல் இல்லாமல் இருப்பது ஞானமடைதல். ஏனெனில் அது தோற்றங்களிலிருந்து விடுதலைஅடையச் செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக