my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

ஞாயிறு, 27 மே, 2012

வாழ்நாள் முழுவதும் தீமைகளைச் செய்து விட்டு கடைசி நேரத்தில் கடவுளை நினைத்தால் போதுமா ?

பேராசை பிடித்த வியாபாரி ஒருவன் மரணப் படுக்கையில் இருக்கிறான். எந்த நேரமும் அவன் உயிர் பிரிந்துவிடும் நிலையில் இருந்தது. அவன் கண்களை மூடிய நிலையில் இருந்தான். அவன் படுக்கையை சுற்றி கவலையுடன் அவன் மனைவி, மகன், மகள் என்று எல்லோரும் இருந்தனர். 

கொஞ்ச நேரத்தில் கண் விழித்த கிழவன், " என் மனைவி ங்கு இருக்கிறாளா ?" என்று கேட்டான். மனைவி, " இதோ இங்கு இருக்கிறேன்" என்றாள். மகள்களைப் பற்றி கேட்டதும் அவர்களும் இருப்பதாக மனைவி கூறினாள். "மகன் எங்கே ?" என்று வியாபாரி கேட்க, அதற்கு அவன் மனைவி " எல்லோரும் இங்கு தான் இருக்கிறார்கள். கவலையை விடுத்து ஓய்வு எடுங்கள்" என்றாள். 


"அப்படியானால் கடையை யார் கவனித்துக் கொள்வது ?" என்று கேட்டான். 

இந்த கதையில் உள்ள வியாபாரியைப் போல கடைசி நேரத்தில் மனிதன் மனதில் அதுவரை இருந்த எண்ணங்களின் சாரம் தான் தோன்றும். 


*** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக