my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

வெள்ளி, 16 டிசம்பர், 2011

3. காமத்தைப் பொறுத்தவரை நெறிமுறையின் எதிர்காலம் என்ன?

காமத்தைப் பொறுத்தவரை எந்த நெறிமுறைக்கும் எதிர்காலம் இல்லை. உண்மையில் நெறிமுறையும் காமத்தையும் இணைத்த காரணத்தால் நெறிமுறையின் கடந்த காலம் முழுவதும் விஷமாகிவிட்டது. நெறிமுறை அளவுக்கு அதிகமாக காமத்தை சார்ந்ததாகிவிட்டது. அதனால் அது காமத்தைத்தவிர முக்கியமான மற்ற தனது பரிமாணங்களை எல்லாம் இழந்துவிட்டது. நெறிமுறை சிந்தனைக்கு காமம் பெரிய பொருட்டாக இருக்கக்கூடாது.

உண்மை, நேர்மை, சுயப்பொறுப்புணர்வு, முழுமை, இவைகளைத்தான் நெறிமுறை பொருட்படுத்தவேண்டும்.விழிப்புணர்வு, தியானம், தன்னுணர்வு, அன்பு இவைகளைத்தான் நெறிமுறை பொருட்படுத்தவேண்டும்.

ஆனால் கடந்த காலத்தில் காமமும் நெறிமுறைம் கிட்டதட்ட ஒரே பொருள் தருவதாக மாறிவிட்டன. காமம் அதிக சக்தியுள்ளதாகவும், அடக்கமுடியாததாகவும் மாறிவிட்டது. எனவே யாரையாவது நெறிமுறையற்றவன் என நீ கூறினால் அவனுடைய காம வாழ்க்கையில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்றே நீ குறிப்பிடுகிறாய். நீ மிக நெறிமுறையானவன் என யாரைப் பற்றியாவது கூறினால், அவன் வாழும் சமூகத்தில் காமத்தைக் குறித்துப் போடப்பட்டுள்ள சட்டதிட்டங்களின்படி நடந்துகொள்கிறான் என்பதையே நீ குறிப்பிடுகிறாய். நெறிமுறை ஒற்றைப் பரிமாணம் கொண்டதாகிவிட்டது. அது நல்லதல்ல, அந்த நெறிமுறைக்கு எதிர்காலம் இல்லை, அது இறந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அது இறந்துவிட்டது. நீ ஒரு பிணத்தை சுமந்துகொண்டிருக்கிறாய்.

கடந்த காலத்தில் இருந்ததைப்போல இறுக்கமான விஷயமாக இல்லாமல் காமம் மேலும் விளையாட்டுத்தன்மை கொண்ட விஷயமாக மாறவேண்டும். அது ஒரு விளையாட்டை விளையாடுவதைப் போல விளையாட்டாக இருக்கவேண்டும். இரண்டு மனிதர்கள் ஒருவர் இன்னொருவரின் உடல் சக்தியோடு விளையாடுகிறார்கள். அவர்கள் இருவரும் மகிழ்வாக இருந்தால், யாரும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. அவர்கள் ஒருவர் மற்றொருவரின் சக்தியில் ஆனந்தம் கொள்கிறார்கள். இரு சக்திகள் இணைந்து ஆடும் ஓரு நடனம் அது. சமூகத்தைப் பொறுத்தவரை அது ஓரு பொருட்டாகவே இருக்கக்கூடாது. ஒருவர் மற்றொருவரின் வாழ்வில் குறுக்கிட்டால், ஒருவன் தன்னை மற்றவர் வாழ்வில் கட்டாயப்படுத்தி திணித்தால், மற்றவரின் வாழ்வை கெடுத்தால், அப்போது மட்டுமே சமுதாயம் உள்ளே வரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனையே இல்லை. அது ஒரு பொருட்டாக இருக்ககூடாது.

எதிர்காலம் காமத்தை குறித்து ஓரு முற்றிலும் வேறுபட்ட பார்வையை கொண்டிருக்கும். அது அதிக விளையாட்டாகவும், அதிக மகிழ்ச்சியுடனும், அதிக நட்போடும் கடந்த காலத்தைப் போல் இறுக்கமான விஷயமாக இல்லாமல் விளையாட்டாகவும் இருக்கும். அது மக்களின் வாழ்வை அழித்துள்ளது. தேவையில்லாமல் அவர்களை அதிக சுமை கொண்டவர்களாக ஆக்கியுள்ளது. அது காரணமேயில்லாமல் அளவுக்கதிகமான பொறாமையையும், பிடிப்பையும், ஆளுமையையும், நச்சரித்தலையும், சண்டையிடுதலையும், குறை கூறுதலையும், உருவாக்கியுள்ளது.

காமம் உடலைச் சார்ந்த ஓரு சாதாரண விஷயம், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்ககூடாது. அதன் ஒரே முக்கியத்துவம் அந்த சக்தியினை உயர்ந்த தளங்களுக்கு மாற்றமுடியும் என்பதே. அது மேலும் மேலும் ஆன்மீகமாக மாறமுடியும். அதை மேலும் மேலும் ஆன்மீகமாக மாற்றும் வழி அதன் இறுக்கத்தை குறைத்து தளர்த்துவதே.

டாக்டர் பைபர்க்கு வந்திருக்கும் நோயாளியுடன் என்ன செய்வது என தெரியவில்லை. அந்த பெண்ணை அவர் எல்லா பரிசோதனையும் செய்துவிட்டார் ஆனால் அவரது பரிசோதனையின்
முடிவுகள் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தன. முடிவில் அவர்
பிரச்சனை என்ன என எனக்கு தெளிவாக தெரியவில்லைஎன
ஒப்புகொண்டார்.

உனக்கு சளி பிடித்திருக்கிறது அல்லது நீ கர்ப்பமாக இருக்கிறாய்
என அவர் கூறினார்.

அதற்கு அவள்,
நான் கர்ப்பமாகத்தான் இருக்கவேண்டும், எனக்கு சளியை
கொடுத்திருக்ககூடிய அளவு நெருக்கமாக யாரையும் எனக்கு
தெரியாதுஎன கூறினாள்.

இதுதான் எதிர்காலம்.
மூலம் : : AH THIS! – CHAPTER # 8
 

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

நெறிமுறை என்பது சமுதாய பயன்பாடு என நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி என்றால் தனிமனிதனுக்கு அது பயனற்றதா?


நெறிமுறை அல்லது நெறிமுறையான பழக்கவழக்கம் என்பது சமுதாயத்தைப் பொறுத்தவரை வெறும் பயன்பாடு மட்டுமே. ஆனால் தனிமனிதனுக்கு அது பயன்பாடல்ல, அது ஓரு ஆனந்தம். ஆதலினால், சமுதாயத்தின் தேவைகளை போலித்தனமான நெறிமுறையால் கூட திருப்திப்படுத்திவிடமுடியும்.
ஆனால் தனிமனிதனைப் பொறுத்தவரை அது போதாது. சமுதாயத்தைப் பொறுத்தவரை நீ மற்றவர்களிடம் நல்லவிதமாக நடந்துகொண்டால் போதும் ஆனால் உன்னைப் பொறுத்தவரை அது போதாது. நீ கண்டிப்பாக இதைப் பார்க்க இயலும் நீ உனக்குள்ளே நன்றாக இருக்கிறாயோ இல்லையோ,  சமுதாயம் உனது சமூக முகத்தை குறித்தே கவலை கொள்கிறது, உன்னுடைய உள்ளிருப்பை பற்றி அது கவலைப்படுவதில்லை. ஆனால் உனக்கு சமூக முகம் ஆடையை போன்றதே. அது எங்கு முடிகிறதோ அங்கிருந்துதான் நீ தொடங்குகிறாய். சமூக முகம் என்ற இந்த முகமூடியிலிருந்து தனித்தும் அதற்கு பின்னும் உள்ளதே உனது உண்மையான இருப்பு.  அங்குதான் நெறிமுறை பிறக்கிறது.

பொய்யான நெறிமுறையின் மூலம் உருவான சமுதாயம் நாகரீகம் என அழைக்கப்படுகிறது. வாழ்வின் உண்மையை அடைந்த மனிதர்களை கொண்ட சமுதாயம் பண்பாடானது என அழைக்கப்படுகிறது. இதுதான் நாகரீகத்திற்கும் பண்பாட்டிற்கும் உள்ள வேறுபாடு. நாகரீகம் என்பது ஒரு பயன்பாடு, பண்பாடு என்பது உள் ஒத்திசைவு மற்றும் ஆனந்தம்.

இன்று நம்மிடம் நாகரீகம் உள்ளது ஆனால் பண்பாடு இல்லை. இருந்தாலும் நாம் எல்லோரும் இணைந்து முயற்சி செய்தால் இந்த பண்பாட்டை உருவாக்க முடியும். நாம் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் முறையை தூய்மைபடுத்துவதால் நாகரீகம் வருகிறது. பண்பாடு நம்மை தூய்மைபடுத்திகொள்வதன் மூலம் நம்மை புரிந்துகெரள்வதால் வருகிறது. நாகரீகம் என்பது உடல், பண்பாடு என்பது இருப்பு. தன் இருப்பில் ஆழமாக வேரூன்றி இருப்பவர்கள் மட்டுமே ஓரு பண்பாட்டை உருவாக்கமுடியும்.
மூலம் : THE PERFECT WAY – CHAPTER # 5

செவ்வாய், 29 நவம்பர், 2011

அடையாளப்படுத்திக்கொள்ளாமலிருத்தல்

ஆணவம் ஒரு செயலுடன், ஒரு குணநலனுடன், தன்னை அடையாள படுத்திக் கொள்கிறது. ஒருவர் கிளார்க், ஒருவர் கமிஷ்னர், ஒருவர் தோட்டக்காரர், ஒருவர் கவர்னர் என இருந்தால் அவை யாவும் செயல்கள். நீங்கள் செய்பவைஅவை, நீங்கள் அல்ல.   யாராவது ஒருவர் நீங்கள் யார் என உங்களிடம் கேட்டால் நீங்கள் உடனே நான் ஒரு என்ஜினீயர் என்று கூறுகிறீர்கள். உங்களது கூற்று மிக தவறானது. நீங்கள் எப்படி என்ஜினீயராக முடியும். அது நீங்கள் செய்வது, நீங்களல்ல. உங்களது செயல்களுடன் மிகவும் ஆழ்ந்த தொடர்பு கொள்ளாதீர்கள். ஏனெனில் அந்த செயல் உங்களை அடிமைபடுத்திக் கொண்டு விடும். நீங்கள் ஒரு டாக்டரின் வேலையையோ, என்ஜினீயரின் வேலையையோ, கவர்னரின் வேலையையோ செய்யலாம். ஆனால் அதனால் அதுதான் நீங்கள் என்றாகிவிடாது. நீங்கள் என்ஜினீயர் வேலையை விட்டுவிட்டு ஒரு பெயிண்டர் ஆகலாம், பெயிண்டர் வேலையை விட்டுவிட்டு ஒரு தெரு கூட்டுபவராக மாறலாம். நீங்கள் அளவற்ற ஆற்றலுடையவர்.   ஒரு குழந்தை பிறக்கும்போது இருக்கும் அளவற்ற ஆற்றல் மெதுமெதுவாக குறைந்து, அது ஒரு குறிப்பிட்ட திசையில் நின்றுவிடுகிறது. ஒரு குழந்தை பிறக்கும்போது பல்வேறு பட்ட ஆற்றலுடன் இருந்தாலும் விரைவில் அது தேர்ந்தெடுக்க துவங்கி விடுகிறது. நாம் அது அதுபோல தேர்ந்தெடுக்க துணை புரிகிறோம். அப்போதுதான் அது புகழடைய முடியும்.   அளப்பரிய ஆற்றலுடன்தான் எல்லோரும் பிறக்கின்றனர், ஆனால் ஒரு சிலர் மட்டுமே அளப்பரிய ஆற்றலுடன் இறக்கின்றனர் என்ற ஒரு சீனப் பழமொழி உண்டு. மனிதன் அளவற்ற ஆற்றலுடன் பிறந்தாலும் இறக்கும்போது குறுகி விடுகிறான். நீ பிறக்கும்போது பிரபஞ்சமாக இருக்கிறாய், இறக்கும்போது ஒரு டாக்டராக, ஒரு விரிவுரையாளராக, ஒரு என்ஜினீயராக இறக்கிறாய். வாழ்வை நீ இழந்து விடுகிறாய். எல்லா சாத்தியங்களும் உள்ள திறந்துள்ள நிலையில், எல்லா ஆற்றல்களும் கிடைக்கக் கூடிய நிலையில் நீ பிறக்கிறாய். ஒரு விரிவுரையாளராகவும், ஒரு விஞ்ஞானியாகவும், ஒரு கவிஞனாகவும், மாறலாம். கோடிக்கணக்கான வாய்ப்புகள் உள்ளன. எல்லா கதவுகளும் திறந்துள்ளன.   பின் மெதுமெதுவாக, ஒரு விரிவுரையாளராக – கணக்கு பேராசிரியராக, ஒரு தேர்ச்சி பெற்ற பேராசிரியராக, அதில் நிபுணத்துவம் பெற்றவராக மாறி விடுகிறாய். நீ குறுகி கொண்டே சென்று விடுகிறாய். நீ குறுகி கொண்டே செல்லும் ஒரு குகை வாயில் போல மாறி விடுகிறாய். ஆகாயத்தை போல பிறந்து ஒரு குகை போல மாறி, பின் அதிலிருந்து நீ வெளியே வருவதேயில்லை.    அந்த குகைதான் ஆணவம். அது செயலுடன் அடையாளப்படுத்திக் கொண்டு விடுகிறது. மனிதன் தன்னை ஒரு கிளார்க்காக நினைத்துக் கொள்வது மிகவும் அவமானமானது. உன்னை நீ ஒரு கிளார்க்காக நினைத்துக் கொள்வது உன்னை நீயே தாழ்த்திக் கொள்வது, உன்னை நீயே அவமானப்படுத்திக் கொள்வது. நீங்கள் தேவதைகள், தேவர்கள். அதுதான் உண்மை. அதைவிட மேலானவர்களாக இருக்கலாம், ஆனால் அதைவிட தாழ்ந்தவர்கள் அல்ல. நீங்கள் தேவதைகள், தேவர்கள் என நான் கூறும்போது உங்களது ஆற்றல் அளப்பரியது, உங்கள் சாத்தியக்கூறு அளவில்லாதது என்பதைத்தான் கூறுகிறேன்.   உங்களது முழு திறமையையும் உங்களால் வெளிக் கொண்டுவர முடியாமல் இருக்கலாம். – யாராலும் முடியாது. ஏனெனில் அது மிகப் பரந்து விரிந்தது. அதனால் யாராலும் அதை செய்ய முடியாது. நீதான் இந்த முழு பிரபஞ்சமும். இந்த காலவரையற்ற நேரத்தினால்கூட நீ உனது முழு திறமையும் வெளிக் கொணர இயலாது. நீ கடவுள் என நான் கூறும்போது நீ தீராத ஆற்றலுடையவன் என்பதை தான் கூறுகிறேன்.   ஆனால் சில திறமைகள் வெளிப்படலாம். நீ ஒரு மொழியை கற்றுக்கொண்டு அதில் பேச்சாளராக மாறலாம். அதில் புலமை பெறலாம். உனக்கு வார்த்தைகளைப்பற்றிய உணர்வு அதிகமாக இருக்குமானால் நீ கவிஞனாகலாம். உனக்கு இசையை உணரக்கூடிய இயல்பு இருக்குமானால், இசையை பிரித்து கேட்க்கூடிய செவிப்புலன் இருந்தால் நீ இசைக் கலைஞனாகலாம்.   ஆனால் இவையெல்லாம் மிகமிகச் சிறிய சாத்தியக்கூறுகள்தான். அதனுடன் நமது வாழ்வு முடிந்துவிட்டது என நினைக்காதே. யாரும் எதனுடனும் நின்று போய் விடுவதில்லை. நீ செய்தது எதுவாக இருந்தாலும் நீ என்ன செய்ய முடியும் என்பதுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது செய்தது ஒன்றுமில்லாமல் போய்விடும். நீ யார் என்பதை பார்க்கும்போது நீ செய்தது மிகவும் சாதாரணமானதாகி விடுகிறது.   ஆணவம் என்பது செயலுடன் அடையாளப்படுத்திக் கொள்வது. ஒரு கவர்னருக்கு தான் கவர்னர் என்ற ஆணவம் இருக்கும். அவர் உயர் நிலையை அடைந்து விட்டதாக அவர் நினைக்கிறார். ஒரு பிரதம மந்திரிக்கு நான் உள்ளது. அவர் உயர்ந்து விட்டதாக அவர் நினைக்கிறார். இதற்கு மேல் என்ன இருக்கிறது என அவர் நினைக்கிறார். இது மடத்தனம். முட்டாள்தனம். வாழ்க்கை மிகப் பெரியது, அதைக் கடக்க வழியேயில்லை. வழி கிடையாது. நீ அதில் நுழைய நுழைய அதிகமான வாய்ப்புகள் தங்களது கதவுகளை திறக்கும். ஆம் – நீ ஒரு மலை உச்சியை அடையும்போது திடீரென மற்றொரு மலை உச்சியை காண்பாய். – முடிவேயில்லை. மனிதன் தனது இருப்பு ஆற்றலோடு இருக்கும் ஒவ்வொரு கணமும் புதிதாய் பிறக்கிறான்.   தான் என்பதன் அழுத்தம் செயலிலும், தன்னுணர்வின் அழுத்தம் இருப்பிலும் இருக்கும். ஜென் இருப்பை சார்ந்தது. நாம் செயலை சார்ந்து இருக்கிறோம். நமது இருப்பு மிகப் பெரியது. நாம் அதை மிகச்சிறிய குகைக்குள் அடைக்க முயற்சிக்கிறோம். அதனால் நாம் துயரம் அடைகிறோம். இதுதான் துயரத்தை உண்டாக்குகிறது, தடையை உருவாக்குகிறது. சுதந்திரம் பறிபோய் விடுகிறது. எல்லா இடத்திலிருந்தும் நீ தடுக்கப்படுவதாக, நிறுத்தப்படுவதாக, இடிக்கப்படுவதாக, சுருக்கப்படுவதாக உணர்கிறாய். எல்லா இடத்திலிருந்தும் தடுத்து நிறுத்தப்படுவதாக உணர்கிறாய். ஆனால் அதற்கு உன்னைத்தவிர வேறு யாரும் காரணமல்ல.   செயல்களை பற்றிய புரிதல் உள்ள ஒரு மனிதன் ஆயிரத்தோரு செயல்களை செய்வான். ஆனால் எப்போதும் அதிலிருந்து வெளியே வந்து விடுவான். அவன் ஆபிஸில் இருக்கும்போது ஒரு கவர்னராக இருக்கலாம், ஆனால் ஆபிஸிலிருந்து வெளி வந்த உடனேயே அவன் கவர்னராக இருக்க மாட்டான். திரும்பவும் ஒரு கடவுள் போல, முழு ஆகாயமாகி விடுவான். வீடு வந்து சேர்ந்தவுடன் தந்தையாகி விடுவான். ஆனால் அதனுடன் ஒன்றி விட மாட்டான். அவன் தனது மனைவியை நேசிப்பான், அவன் ஒரு கணவனாகி விடுவான். ஆனால் அதனுடன் ஒன்றி விட மாட்டான். ஆயிரத்தோரு வேலைகள் செய்தாலும் அவை அனைத்திலிருந்தும் ஒன்றி விடாமல் சுதந்திரமாகவே இருப்பான்.   அவன் ஒரு தந்தையாகவோ, தாயாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ, குழந்தையாகவோ, ஆசிரியராகவோ,கவர்னராகவோ,பிரதம மந்திரியாகவோ, ஜனாதிபதியாகவோ, கூட்டுபவராகவோ, பாடகராகவோ, இன்னும் ஆயிரத்தோரு விஷயங்களில் இருக்கலாம் – ஆனாலும் அவன் அத்துணை விஷயங்களில் இருந்தும் விடுபட்டே இருப்பான். அவன் கடந்து செல்பவனாகவே இருப்பான், அவன் கடந்து நிற்பான. எதுவும் அவனை கட்டுபடுத்த முடியாது. அவன் அத்தனை இடங்களுக்கும் சென்று வருவான். ஆனால் அவன் எந்த இடத்திலும் சிறை பட வில்லை. உண்மையில் எந்த அளவு அவன் அதிக இடங்களுக்கு சென்று வருகிறானோ அந்த அளவு அவன் விடுதலையடைகிறான்.   நீ ஆபிஸில் இருக்கும்போது ஒரு கிளார்க்காகவோ, ஒரு கமிஷ்னராகவோ, ஒரு கவர்னராகவோ இரு.அது மிகவும் சரியானது. ஆனால் நீ ஆபிஸை விட்டு வெளியே வந்தவுடன் கிளார்க்காகவோ, கமிஷ்னராகவோ, கவர்னராகவோ, இருக்காதே.அந்த வேலை முடிந்தது. எதற்கு அதை சுமக்கிறாய். – ஒரு கவர்னர் போல தெருவில் நடக்காதே. நீ அதல்ல. அந்த கவர்னர்தனம் உன் தலைமேல் ஒரு பாரமாக உட்கார்ந்து இருக்கும் . அது உன்னை சந்தோஷமாக இருக்க விடாது. மரத்தின் மீதுள்ள பறவைகள் பாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு கவர்னரால் எப்படி கூட பாட முடியும் – ஒரு கவர்னரால் எப்படி பறவைகள் பாட்டுக்கு ஆட முடியும் – மழை வருகிறது. மயில் ஆடுகிறது எப்படி ஒரு கவர்னரால் கூட்டத்தில் நின்று அதை ரசிக்க முடியும். முடியவே முடியாது. ஒரு கவர்னர் ஒரு கவர்னராகத்தான் இருக்க முடியும்.அவர் வழியில் போய்கொண்டே இருப்பார்.அங்குமிங்கும் பார்க்கவே மாட்டார். மரங்களின் பசுமையை, நிலாவை ரசிக்க மாட்டார். அவர் ஒரு கவர்னராகவே இருப்பார்.   இந்த அடையாளப்படுத்திக் கொள்ளுதல் உன்னை கொன்று விடுகின்றன. நீ உன்னை அடையாளபடுத்திக் கொள்ளும் அளவு நீ உயிரற்று போய் விடுகிறாய். இது நினைவில் கொள்ள வோண்டிய ஒன்று. நீ செய்வது எதனுடனும் உனக்கு சம்பந்தமில்லை. உனது இருப்பிற்கும் உனது வேலைக்கும் தொடர்பில்லை. நீ செய்யும் வேலை எதுவாக இருப்பினும் அது உனது இருப்பை தொடாது.    உன் மனைவியுடன் இல்லாத போது நீ கணவனல்ல. மனைவி இல்லாதபோது நீ எப்படி கணவனாக இருக்க முடியும். இது மடத்தனம். உன் குழந்தையுடன் நீ இல்லாதபோது எப்படி நீ ஒரு தாயாகவோ தந்தையாகவோ இருக்க முடியும் அது இயலாது. நீ கவிதை எழுதாத போது நீ கவிஞனல்ல. நடனமாடாதபோது நீ டான்ஸர் அல்ல. நீ நடனமாடும்போதுதான் நீ டான்ஸர். அந்த நேரத்தில் உனது உடலின் நிலை, நாடித்துடிப்பு நடனமாடுவதற்கு ஏற்றாற் போல ஒரு குறிப்பிட்ட விதமாக இருக்கும். ஆனால் அது அந்த நேரத்திற்கானது மட்டுமே. நடனத்தை நிறுத்தியவுடன் டான்ஸர் மறைந்து விடுவார். நீ அதிலிருந்து வெளியே வந்து விடுவாய். இது போன்று இருந்தால் நீ சுதந்திரமாக இருக்க முடியும். சுமையின்றி இருக்க முடியும், பொங்கி பெருகி வழிந்தோடலாம்.   கணவனாக இரு, ஆனால் எப்போதும் கணவனாக இருக்காதே. சன்னியாசி ஒரு மிகச் சிறந்த நடிகனாக இருக்க வேண்டும் என நான் கூறும்போது இதைதான் குறிப்பிடுகிறேன். தாயாக இரு, ஆனால் எப்போதும் தாயாகவே இருக்காதே. அந்த குணநலனுடன் உன்னை அடையாளப்படுத்திக் கொண்டு விடாதே. அது ஒரு செயல், அதை எவ்வளவு நிறைவாக செய்ய முடியுமோ, எவ்வளவு ஆணித்தரமாக செய்ய முடியுமோ, எவ்வளவு அன்பாக செய்ய முடியுமோ, எவ்வளவு அனுபவித்து செய்ய முடியுமோ, அப்படி செய். ஆழமாக செய். அது ஒரு கலையாகட்டும். ஒரு அழகான மனைவியாக, அன்பான அம்மாவாக, சிறந்த கணவனாக, அழகான காதலனாக இரு. ஆனால் அதனுடன் ஒன்றாகி விடாதே. ஒன்றி விட்ட கணமே நீ பிரச்னையில் மாட்டிக் கொண்டாய்.   செயல்கள் உன்னுள் நிலைபெற விட்டுவிடாதே. அந்த வேஷமாகவே நீ மாறி விடாதே. ஒரு தேர்ந்த நடிகனாக இரு. நடிகன் பல பாத்திரங்களில் நடிக்கலாம். ஒரு தாயாக, தந்தையாக, கொலைகாரனாகக்கூட, மிக முக்கியமான பாத்திரத்தில், நகைசுவையாக, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவன் எந்த பாத்திரத்தில் நடிக்கிறான் என்பது முக்கியமில்லை. அதில் சிறப்பாக நடிக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற வேண்டும். அவனிடம் உள்ள திறமைகள் அனைத்தையும் அதில் கொண்டு வர வேண்டும். அவனுக்கு கொலைகாரன் வேஷம் கொடுத்தால் உலகிலேயே வல்லமை வாய்ந்த கொலைகாரனாக இருப்பான். அவனுக்கு சாது வேஷம் கொடுத்தால் மிகச் சிறப்பான சாதுவாக அவன் இருப்பான். அவனால் மாற முடியும். ஒரு வேஷத்தில் சாதுவாக இருப்பான், மற்றொரு வேஷத்தில் கொலைகாரனாக இருப்பான். ஆனால் இரண்டிலும் அவனது வேஷப் பொருத்தம் கனகச்சிதமாக இருக்கும்.   இந்த இலகு தன்மை வாழ்விலும் வேண்டும். வாழ்க்கையே ஒரு நாடகம்தான். ஆனால் மேடைதான் மிகப் பெரியது. இந்த முழு உலகமும் மேடையாக இருக்கிறது. உலகத்திலுள்ளவர்கள் அனைவரும் நடிகர்கள்தான். முழுமை எங்கே போகிறது, அதன் முடிவு என்ன என்பது யாருக்கும் தெரியாது. கதை கொடுக்கப்பட வில்லை. அது உருவாக்கப்பட வேண்டும். கணத்துக்கு கணம் அது உண்டாகும்.   ஜென்னில் ஒருவகையான நாடகம் உண்டு. அதன் பெயர் நோ நாடகம். கதை கிடையாது, நடிகர்கள் மட்டுமே உண்டு. திரை உயர்த்தப்பட்ட பின் அவர்களே கதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். மக்கள் இருக்கும்போது ஏதாவது நடந்துதானே தீரும். அவர்கள் வெறுமனே உட்கார்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும்கூட ஏதோ நடக்கும். ஒத்திகை இன்றி, தயாரிப்பு இன்றி ஏதோ ஒன்று நடக்கும்.   வாழ்க்கையும் அதே போலத்தான் – அது கணத்துக்கு கணம் உருவெடுக்கும். கடந்த காலத்திலிருந்து வெளியே வந்துவிடு. எந்த குறுக்கீடும் இல்லாமல், எந்த தடையும் செய்யாமல் நடப்பதை அப்படியே அனுமதித்து விடு. எவ்வளவு முழுமையாக இருக்கமுடியுமோ அவ்வளவு முழுமையாக அதனுள் இரு. உனது சுதந்திரம் அதிகமாகும்.   ZEN: The Path of Paradoxvol.1 Ch. #5

செவ்வாய், 8 நவம்பர், 2011

கடவுள்தன்மையின் கதை


எனக்கு ஒரு அழகான கதை நினைவுக்கு வருகிறது. ஒருவன் பக்கத்து வீட்டுகாரர்கள் அனைவருக்கும் ஒரே தொந்தரவாக இருந்தான் ஏனெனில் அவன் தொடர்ந்து கடவுளை எதிர்த்து, சொர்க்கத்தை எதிர்த்து, நரகத்தை எதிர்த்து வாதித்துகொண்டேயிருந்தான். அவன் ஒரு நாத்திகன் முழு நாத்திகன். அந்த எல்லைக்கு உட்பட்ட அரசன் கூட அவனைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் அரசவைக்கு அழைக்கப்பட்டான். அரசவையில் இருந்த அறிஞர்களால் கூட அவனை ஒப்புக்கொள்ள வைக்க முடியவில்லை.

உண்மையில் ஒரு நாத்திகனை ஒப்புக்கொள்ள வைப்பது என்பது கிட்டதட்ட முடியாத காரியம். நீ என்னைப்போல ஒரு மனிதனைக் கண்டுப்பிடிக்காவிட்டால், நாத்திகன் உன்னுடைய வாதங்கள் அனைத்தையும் அழித்துவிடுவான். ஏனெனில் நீ நம்பும் கடவுளைப் பற்றி வாதம் புரிகிறாய். நீ எந்த ஆதாரத்தையும் காட்டமுடியாது. நீ கண்ணால் பார்த்த சாட்சியை காட்டமுடியாது, நீ ஆதாரபூர்வமான வாதம் எதையும் கூறமுடியாது. கடவுளைக் குறித்த எல்லா வாதங்களும் நூற்றாண்டுகளாக நாத்திகர்களால் உடைத்து தூக்கி எறியபட்டே வருகிறது.

அந்த அரசன் மேலும் ஒரே ஒரு வாய்ப்பு கொடு. எனக்கு ஒரு மனிதரை தெரியும்.......அவர் மட்டுமே இந்த விஷயத்தைக் குறித்து ஏதாவது செய்யமுடியும் என்று அந்த நாத்திகனிடம் கேட்டான். அவர் இருக்கும் முகவரியை கொடுத்து நாத்திகனை அரசன் அந்த அடுத்த கிராமத்திற்கு போக சொன்னார். ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள கோவிலில் அவரை நீ காண்பாய். அவருடைய பெயர் ஏக்நாத். அவர் ஒருவர்தான்........... அவர் உன்னை மாற்றினால்தான் உண்டு இல்லையெனில் உன்னை மாற்றுவது முடியாத காரியம் என அரசர் கூறினார்.

அதற்கு அந்த நாத்திகன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். இது ஒரு மிகப்பெரிய சவால். எனவே அவன் அந்த கிராமத்திற்கு சென்றான். நேரம் கிட்டதட்ட காலை ஓன்பது மணி இருக்கும். இந்த நேரத்தில் அவர் பூஜை மற்றும் குளியல் இவைகளை முடித்திருக்கவேண்டும் எனவே இதுதான் அங்கு செல்வதற்கு சரியான நேரம் என கூறிக்கொண்டு அவன் கோவிலுக்கு சென்றான். அங்கு அவனால் அவன் கண்களையே நம்பமுடியவில்லை, ஏக்நாத் தூங்கிகொண்டிருந்தார் தூங்கிகொண்டிருப்பது மட்டுமில்லாமல் அவர் தனது கால்களை கடவுளின் சிலைமீது வைத்திருந்தார். அவர் கடவுளின் சிலையை கால்களை வைப்பதற்கு நல்ல இடமாக பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

நாத்திகன் அவன் வாழ்விலேயே முதல்முறையாக, கடவுளே நான் கூட கடவுளின் சிலைமீது கால் வைக்கமுடியாது நான் நாத்திகன் கடவுளை நம்புவதில்லை என்றாலும் கூட ஆனால் யாருக்கு தெரியும் முடிவில் கடவுள் இருந்துவிட்டால், எனவே என்னால்கூட இதை செய்ய இயலாது. இந்த மனிதர் ஒரு சந்நியாசி, அதிகாலையில் சூரியன் எழுவதற்கு முன் எழுந்திருக்க வேண்டியவர். இப்போது மணி ஒன்பது, அவர் தூங்கிகொண்டிருக்கிறார். இவர் கடவுளை குறித்து என்னை ஒப்புக்கொள்ள வைக்கப் போகிறாரா அவர் இன்னும் குளிக்கவில்லை, அவர் இன்னும் வழிபடவில்லை. அவர் வழிபடுவார் என எனக்கு தோன்றவில்லைஅவர் தனது கால்களை கடவுளின் சிலைமீது வைத்துள்ளார். இந்த மனிதர் ஆபத்தானவர் போல தெரிகிறதுஎன எண்ணியபடி பயத்துடன் நாத்திகன் கோவிலில் அமர்ந்து அவர் கண்விழிப்பதற்காக காத்திருந்தான்.

அரை மணிநேரம் கழித்து ஏக்நாத் எழுந்தார் மன்னித்துகொள், தூக்கத்தில் கால்களால் உன்னை தொட்டுவிட்டேன் என்று கூட கடவுளிடம் அவர் வேண்டவில்லை, அவர் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

நாத்திகன், “நீங்கள் ஓரு சந்நியாசியாவேதங்களில் சந்நியாசி என்பவன் சூரிய உதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது அல்லவா?” என கேட்டான்.


ஏக்நாத், ஆமாம் கூறப்பட்டுள்ளது ஆனால் அதற்கான என்னுடைய புரிதல் என்னவென்றால்ஓரு சந்நியாசி எழுந்திருக்கும் பொழுதெல்லாம் சூரியன் உதிக்க வேண்டும். யார் இந்த சூரியன்அவன் என்னைப் பற்றி கவலைப்படவில்லை என்றால் நான் எதற்காக அவனைப் பற்றி கவலைப்படவேண்டும் எனக் கூறினார்.

ஆச்சரியமாக உள்ளது, ஆனால் நீங்கள் உங்களுடைய காலை கடவுளின் மீது, கடவுளின் தலையில் - என நாத்திகன் கேட்டான். நான் வேறு எங்கு என் காலை வைத்துக்கொள்ளமுடியும் -ஏனெனில் வேதங்கள் கூறுகின்றன கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் நீ நான் காலை எந்த இடத்திலும் வைக்ககூடாது என கூற வருகிறாயா என ஏக்நாத் கேட்டார்.

கோபபடாதீர்கள் ஆனால் உங்கள் வாதம் நியாயமானதாக உள்ளது கடவுள் எல்லா இடத்திலும் இருப்பாரானால், நீங்கள் எப்போது எந்த இடத்தில் காலை வைத்தாலும் அது கடவுளின் தலை மீதே உள்ளது என நாத்திகன் கூறினான்.

எனவே என்ன பிரச்சனை? இது என் கால்களுக்கு நன்கு ஓய்வளிக்கிறது. சில முட்டாள்கள் இதுதான் கடவுள் என நினைக்கிறார்கள். கடவுள் எல்லா இடங்களிலும் உள்ளார்எனவே அவர் எவ்வாறு இந்த கல்லில் மனிதனால் உருவாக்கபட்ட இந்த கல்லில் மட்டும் இருக்கமுடியும் நீ என்னை முட்டாளாக்கமுடியாது, என ஏக்நாத் கூறினார்.

அதிகாலையில் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடுவதற்க்கு என்னை மன்னிக்க வேண்டும். ஆனால் நான் வேறொரு கிராமத்திலிருந்து வருகிறேன். என்னை மன்னர் அனுப்பினார் உங்களிடம் என்ன சொல்வது என்று எனக்கு குழப்பமாக உள்ளது. ஏனெனில் நான் ஓரு நாத்திகனாக இருந்தேன்.
ஆனால் இந்த மனிதனோ இதுவரை அவன் பார்த்த மனிதர்களிலேயே பெரிய நாத்திகராக இருக்கிறார்.

மிகவும் நல்லது. நீ நாத்திகனாக இருக்கலாம். அதில் தவறேதும் இல்லை. அதைப் பற்றி கடவுள் பொருட்படுத்துவதில்லை. என்னை நம்பு. இப்போது போய்விடு என ஏக்நாத் கூறினார்.

ஆனால் மன்னர் எனக்கு சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார். நான் கடவுளை ஒப்புகொள்ள வைக்கப் படுவதற்காக வந்துள்ளேன்   என நாத்திகன் கூறினான்.

கடவுளை ஒப்பு கொள்ள வைக்கப்படுவதற்காகவா? கடவுளிடம் உனக்கு என்ன வேலை? என ஏக்நாத் கேட்டார்.

இல்லை, எந்த வேலையுமில்லை, என அவன் கூறினான்.

பிறகு உபயோகமில்லாத விஷயங்களை பற்றி ஏன் கவலைப்படுகிறாய். உபயோகமாய் ஏதாவது செய். நான் இப்போது போகிறேன். ஏனெனில் இது எனது சாப்பாட்டு நேரம்
என ஏக்நாத் கூறினார்.

நீங்கள் ஆற்றில் குளிக்க போவதில்லையா என நாத்திகன் கேட்டான்.

ஆற்றைப் பற்றி யார் கவலைபடுவார்கள். அது எப்போதும் அங்கேயே உள்ளது.. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குளிககலாம். நடு ராத்திரியில்மத்தியானத்தில்என்ன அவசரம்   அது எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு இன்று சாப்பாடு போடுகிறேன் என்று சொன்ன வீட்டிற்க்கு நான் சரியான நேரத்திற்க்கு செல்லா விடில் அது கஷ்டமாகி விடும். எனவே நான் என் உணவை சாப்பிட்ட பிறகு குளிப்பேன் - என ஏக்நாத் கூறினார்.

ஆனால் குளிக்காமல் வழிபடாமல் உணவை உண்ணும் சந்நியாசிகள் பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை என நாத்திகன் கூறினான்.

நீ பழைய சந்நியாசிகளை பற்றி பேசிக்கொண்டிருக்கிறாய். நான் இந்த காலத்து மனிதன். என்னுடைய நேரத்தை வீணடிக்காதே. நீ குளித்து விட்டு வழிபாடு செய். நான் எனது உணவுடன் வருகிறேன் என ஏக்நாத் கூறினார்.

உணவு தருவதாக வாக்களித்திருந்த அந்த யாரோ ஒருவர் உணவை இங்கேயே கொண்டு வந்துவிட்டார். உடனே ஏக்நாத் கோவிலின் முன் சாப்பிட அமர்ந்தார். அப்போது ஒரு நாய் ஓடிவந்து அவருடைய சப்பாத்திகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு ஓடியது. நாத்திகன் இதை கவனித்துக்கொண்டிருந்தான். உடனே ஏக்நாத்முட்டாளே நில்!” என கத்திக் கொண்டே நாயின் பின் ஓடத் தொடங்கினார்.

கடவுளே அந்த சப்பாத்தியை இவர் திரும்ப வாங்கப் போகிறாரா என எண்ணிய படியே நாத்திகனும் பின் தொடர்ந்தான்.

ஏக்நாத் நாயை பிடித்து விட்டார். அவர் நாயிடம்உனக்கு ஓரு சப்பாத்தி வேண்டுமென்றால் அங்கேயே காத்திரு என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். நான் உன்னை வெண்ணெய் இல்லாமல் சப்பாத்தி சாப்பிட அனுமதிக்க மாட்டேன்என கூறிக்கொண்டே சப்பாத்தியை அதன் வாயிலிருந்து பிடுங்கி வெண்ணெயை அதில் தடவி சப்பாத்தியை திரும்ப கொடுத்தார். அவர் நாயை பார்த்து  ராம் ராம் இப்போது நீ இதை சாப்பிடலாம் ஆனால் எப்போதும் இங்கிதமாக நடந்து கொள்எனக் கூறினார்.

நாத்திகன் இந்த முழு நிகழ்ச்சியையும் கவனித்தான். நாயை அவர் கடவுள் என அழைக்கிறார். அது மட்டுமின்றி வெண்ணெய் இல்லாமல் சப்பாத்தி சாப்பிட நாயை அனுமதிக்கவில்லை.......
ஓரு ஆச்சரியமான தனித்தன்மையுள்ள மனிதன். அரசர் சரியாகதான் கூறியுள்ளார் போலும். இந்த மனிதர் என்னை கடவுள் இருக்கிறார் என ஒப்புக்கொள்ள வைக்க முடிய வில்லை எனில் பிறகு வேறு யாராலும் முடியாது.

அவன் ஏக்நாத்தின் காலைத் தொட்டு வணங்கினான். என்னை மன்னித்துவிடுங்கள்.....நான் உங்களை மிகவும் தவறாக புரிந்து கொண்டிருந்தேன். இது கடவுளின் சிலை மீது காலை வைப்பதை நியாயபடுத்துதல் அல்ல. ஓரு நாயிடமும் நீங்கள் கடவுளை காண்கிறீர்கள்.வெண்ணெய் இல்லாமல் சப்பாத்தி சாப்பிட நீங்கள் நாயை அனுமதிக்க மாட்டீர்கள். அதன் சப்பாத்தியில் வெண்ணெய் தடவுவதற்க்காக நீங்கள் அரை மைல் ஓடியிருக்கிறீர்கள். நானும் ஓடியிருக்கிறேன்.   என்றான்.

நான் வெண்ணெயோடு சப்பாத்தி சாப்பிடும் போது கடவுள் வெண்ணெய் இல்லாமல் சப்பாத்தி சாப்பிடுவது சரியென்று எனக்கு படவில்லை. நான் அவனிடம் சொல்லியிருக்கிறேன் ஆனால் அவன் மிகவும் மடத்தனமான கடவுள். கிட்டதட்ட எல்லா நாட்களிலும் இது நடக்கிறது. நான் எனது உணவை திறக்கும்பொழுது அவன் எங்கேயோ மறைந்துள்ளான். நீ வேதங்களில் கண்டிப்பாக படித்திருப்பாய். கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். இந்த கடவுள் எல்லா இடங்களிலும் எப்போதும் இருப்பார்.

ஆனால் நானும் பிடிவாதமான மனிதன். இன்று அரைமைல் மட்டுமே. ஒரு நாள் பத்து மைலாகிவிட்டது. ஆனால் வெண்ணெயை போட்டுத் தரும் வரை நான் அவனை சப்பாத்தி சாப்பிட அனுமதிக்க மாட்டேன். அது சரியானதாக எனக்கு பட வில்லை. ஒருவர் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் - என ஏக்நாத் கூறினார்.

அந்த மனிதன், “உண்மைதான், அதிகாலையில் இருந்தே உங்களுடைய மென்மையான நடத்தையை காண்கிறேன். மேலும் உங்களிடம் எனக்கு வாதம் செய்ய ஏதும் இல்லைநான் வீட்டிற்க்கு ஒரு ஆத்திகனாக போகிறேன். ஏனெனில் என்னுடைய வாழ்வில் முதல் முறையாக ஒரு ஆத்திகரை காண்கிறேன். மற்ற எல்லா ஆத்திகர்களும் வெறும் வார்த்தைகளை உபயோகப்படுத்தினார்கள். கடவுளைப் பற்றி எதையும் அறிந்து கொள்ள வில்லை. உங்களுக்கு நிச்சயமாக ஏதோ ஒன்று தெரியும். ஒவ்வோர் அசைவும் அதை உணர்த்துகிறது. அது தவறாக புரிந்து கொள்ளப்படக் கூடும். நானும் முதலில் தவறாகத்தான் புரிந்து கொண்டேன். ஆனால் நான் இப்போது பார்க்கிறேன்என கூறினான்.

இது எல்லாவற்றையும் மறந்து விடு. வந்து என்னோடு சாப்பிடு. நம் இருவருக்கும் போதுமான அளவு உணவு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏனெனில் நீ இங்கு காத்துக் கொண்டிருப்பாய் என நான் அறிவேன் - என ஏக்நாத் கூறினார்.

அவன்ஆனால் நான் குளிக்க வேண்டும்” என கூறினான்.

குளிப்பதை பற்றி மறந்து விடு. நான் உனக்கு கூறியதைப்போல ஆறு நாள் முழுவதும் ஓடி கொண்டேயிருக்கிறது. நீ எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம். எந்த தடையும் இல்லை - என ஏக்நாத் கூறினார்.

ஆனால் நான்........ நாத்திகனாக இருந்திருந்தாலும் கூட நான்
கோவிலின் உள்ளே சென்று காலை தொட்டு .............
என அவன் கூறினான்.

நீ கோவிலுக்குள் சென்றால் என்னை விட மோசமான மனிதனை நீ பார்க்க மாட்டாய். முதலில் சாப்பிடு. பிறகு நீ என்ன முட்டாள்தனம் செய்ய நினைக்கிறாயோ அதை செய். எனக்கு பசியாக உள்ளது. என்னால் காத்திருக்க முடியாது. ஆனால் நீ என் விருந்தாளிஇந்த கோவில் என்னுடைய வீடு. நான் இங்கு வாழ தொடங்கியதிலிருந்து எல்லோரும் உள்ளே வருவதை நிறுத்தி விட்டார்கள். இது என் முழு வாழ்க்கையின் அனுபவம். எங்கு நான் சென்றாலும் எந்தக் கோவிலில் நான் நுழைந்தாலும்........ விரைவில் வழிபடுபவர்கள் மறைந்து விடுவர். ஏனெனில் கோவிலில் நான் எல்லாவிதமான காரியங்களையும் செய்வேன்....நீ அதிகம் பார்க்கவில்லை. நீ வந்து உன் உணவை எடுத்துகொள் - என ஏக்நாத் கூறினார்.

From “The Rebellious Spirit - Chapter 9”