my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

வெள்ளி, 29 ஜூன், 2012

கடவுளும் சாத்தானும்

ஒரு வயதான் மனிதர் தன் மரணப் படுக்கையில் முதலில் கடவுளைத் தொழ ஆரம்பித்தார். அவர் பெயரை அடிக்கடி சொன்னார்.பிறகு திடீரென்று மாற்றி சாத்தானின் பெயரைச் சொல்ல ஆரம்பித்தார்.

அவ்ருடைய குடும்பத்தினர் இது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

"
என்ன உங்களுக்கு பைத்தியம் ஏதும் பிடித்துவிட்டதா? வாழ்வின் கடைசி நேரத்தில் நீங்கள் சாத்தானின் பெயரை சொல்லுகிறீர்களே ? " என்றார்கள்.

"
நான் எந்தவித அபாயத்தையும் இதற்க்கு பிறகு சந்திக்க விரும்பவில்லை . நான் இறந்த பிறகு எங்கே செல்வேன் , யாரைச் சந்திப்ப்பேன் என்பது யாருக்கு தெரியும் ? சாத்தானின் பெயரை சொல்லுவதால் எனக்கு ஒன்றும் கஷ்டம் ஏற்படப் போவதில்லை. இருவரில் யாரைச் சந்தித்தாலும் அவர்களின் பெயர்களை உச்சரித்ததால், அவர்கள் எனக்கு நன்மை செய்யக்கூடும். அப்படி இருவரையும் சந்திக்க இயலவில்லை என்றாலும் ஒன்றும் கஷ்டமில்லை. அப்படி இருவரையும் ஒன்று சேர சந்திக்க நேர்ந்த்தாலும் கவலை இல்லை .

நான் எல்லா சாத்தியக் கூறுகளையும் எண்ணித்தான் இப்பொழுது செயல்படுகிறேன்!". என்றார்


ஓஷோ கூறுகிறார் : " கடவுள் மற்றும் சாத்தான், நன்மை, தீமை என்ற இரண்டு வேறுபாடுகளால் மனிதன் நசுக்கப்படுகிறான். இப்படி மனிதன் நசுக்கப்படாமலும் அடிமையாக இருக்காமலும் தன் சுதந்திரத் துடன் இருப்பதையே நான் விரும்புகிறேன் .'

ஞாயிறு, 24 ஜூன், 2012

கற்பனை காதலி

ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நன்பன் கிண்டலாக , “ நசுருதீன்உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான்.
முல்லா கம்பீரமானார். “ எப்போது அவள் வ்ருகிறாள் ? “ என்று கேட்டார்.
“ 
இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்கு” என்றான் அவன்
அந்த நாள் நசுருதீனின் பொழுது மன ஆமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பைடவில்லை. இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். “ இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது “ என்று முடிவு செய்திருந்தார்.
நேரம் போய் கொண்டே இருந்தது.
அவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை.
இரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது.
அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. “ தனக்கு திருமணம் ஆகவில்லை “ என்பது
ஓஷோ : மனிதன் கனவிலேயே வாழ்கின்றான் இந்த கனத்தில் வாழ்வதில்லை

சனி, 23 ஜூன், 2012

புத்தரே இருக்கிறார்


ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

புதன், 20 ஜூன், 2012

எல்லாம் அவசரம்


 ஒரு சிறிய நகரத்தில் கார் விபத்து ஏற்பட்டது.அதில் பலியானவரை  சுற்றி ஒரு பெருங்கூட்டம்  கூடி இருந்தது.
அப்போது அங்கு வந்த பத்திரிகை நிருபர்,அந்த விபத்தை நெருக்கமாக பார்க்க முடியாததால் தவித்து கொண்டு இருந்தார்.
அவருக்கு சட்டென ஒரு யோசனை வந்தது."இந்த விபத்தில் இறந்து போனவரின் தந்தை நான்"என்று அவர் வருத்தமுடன் அங்கிருந்தவர்களிடம் கூறினார்.நான் அருகில் செல்ல வேண்டும் ,தயவு செய்து வழிவிடுங்கள்.
உடனே,அந்தக் கூட்டத்தினர் விலகி நின்று,அவருக்காக வழி விட்டனர்.நிருபர் அருகில் சென்றவுடன்,விபத்தில் பலியானவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார், அது ஒரு கழுதை?????????

இப்படிதான் மனிதன் எல்லாவற்றிருக்கும் அவசரபடுகிறான். 
            

திங்கள், 18 ஜூன், 2012

பேராசை பெரும் நஷ்டம்.

ஒர் ஊரில்நடுத்தர வசதிள்ள இளைஞன் ஒருவன் வாழ்ந்து வந்தான். விவசாயம் செய்து தன் பிழைப்பை ஓட்டியவன்தானும் பணக்கரனாக வேண்டும்பெரிய அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரனாக வேண்டுமென்ற ஆசை அவனுக்கு ஏற்பட்டது. பாடுபட்டு சிறுகச் சிறுக பணத்தைச் சேமித்துபல ஏக்கர் நிலம் வாங்க வேண்டுமென என்ணினான்.ஒரு நாள் அவன்பக்கத்தில் உள்ள சிற்றூருக்கு சென்று கொண்டிருந்தான். பெரிய அளவிலான நிலம் பராமரிக்கப் படாமல் கிடந்ததை பார்த்தான். அவ்வூர் தலைவருக்கு சொந்தமான அந்த நிலம் விவசாயத்திற்கு சிறந்ததெனவும்மலிவான விற்பனைக்கு உள்ளதாகவும் ஊர் மக்கள் தகவல் கொடுத்தார்கள்.ஊர் தலைவரை காணச் சென்ற அவன்நிலத்தை வாங்குவதற்கான தன் விருப்பத்தைக் கூறினான். ஊர் தலைவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.நீ ஓடிவிட்டுத் திரும்பும் வரை எவ்வளவு துரம் உன் கால் படுகிறதோ அவ்வளவு தூரத்திற்கான நிலத்தை நீ எடுத்துக் கொள்”, எனக் கூறினார் ஊர்த் தலைவர்.இதைக் கேட்ட இளைஞன் மகிழ்ச்சியடைந்தான். சிறிது காலத்தில் தான் கோடீஸ்வரனாகி விடலாம் என்ற எண்ணத்தில் பல கற்பனைகளை பறக்க விட்டான்.
மறுநாள் காலையில்இளைஞன் தனது லட்ச்சியத்தை அடைய எடுக்கப் போகும் முயற்ச்சியைக் காண ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். ஊர் தலைவர் ஜூட்’ சொல்லியவுடன் தன்னால் முடிந்த அளவிற்கு வேகமாக ஓடினான். பசி மயக்கம் எதையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டே இருந்தான்
உச்சி வெயில் சுல்லென்று அடிப்பதையும் பொருட்படுத்தாமல் ஓடினான். (ஓடினான் ஓடினான்வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான்). சூரியன் மறைவதற்குல் ஓடியவன் வந்துவிடுவானா இல்லையா என்ற சந்தேகமே எற்பட்டு விட்டது ஊர் மக்களுக்கு. மாலையில் திரும்பியவன் ஓட்டத்தை முடிக்க சிறிது தூரம் இருப்பதை உணர்ந்தான். இளைஞனை கண்ட ஊர் மக்கள் ஆரவாரம் செய்து உற்சாக படுத்தினர்.
அவனது உடல் வழுவிழுந்திருந்தது. கால்கள் தள்ளாடியது. மூச்சு திணரியதால் அடுத்த அடி எடுத்து வைக்கச் சிரமப் பட்டவன்திடிரென கீழே விழுந்து உயிர் துறந்தான்.
இவ்வளவு தூரம் ஓடி பல நிலங்களை சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தவனுக்குகடைசியில் மிஞ்சியது அவனை புதைபதற்கான ஒரு பிடி மண் மட்டுமே.
 
ஓஷோ இந்த கதையின் முடிவில் இப்படி கூறுகிறார்,
  மனிதன் பேராசையால் படாதபாடுபடுகிறான்

வியாழன், 14 ஜூன், 2012

செங்கல், கண்ணாடி ஆகுமா ?

ஒரு சீடர் இருபது வருடங்களாக தொடர்ந்து மிக கடுமையாக தியானம் செய்து கொண்டு இருந்தார், அவர் அனைத்து முறைகளையும் முயற்சி செய்தார் ( யோகா முத்திரைகள் மற்றும் அனைத்து வகையான தியான முறைகள் போன்றன ) அதாவது இனி செய்ய ஒன்னுமே இல்லை என்ற அளவுக்கு மிக மிக கடுமையாக தன்னை வருத்தி தியானம் செய்து கொண்டிருந்தார்.

அவ்வாரு ஒரு நாள் அவர் ஒரு மரத்தடியில் அமைதியாக ( வெளிப்புறதோற்றத்திலாவது ) புத்தரை போல் ஆடாமல் அசையாமல் உக்காந்து கொண்டிருந்தார். அதை பார்த்தால் இவர் என்ன சிலையாகி விட்டறோ? என்று என்னுமளவுக்கு அசைவின்றி அமர்ந்திருந்தார் . அப்போது அவருடைய ஜென் குரு ஒரு செங்கல்லை எடுத்துக்கொண்டு அவர்முன் அமர்ந்து அதனை சத்தம் வருமாறு நிலத்தில் தேய்க்க ஆரம்பித்தார்..

அவ்வாறு தேய்த்தது மிகக் கொடிய சத்ததை உருவாக்கியது.. சீடர் பொருத்து பார்த்தார் குரு நிருத்தியபாடாய் தெரியவில்லை . சீடரின் பற்க்கள் எல்லாம் கூச ஆரம்பித்தது கடைசியாக அவர் அந்த குருவை பார்த்து நிருத்துங்கள் ! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? “ எனக் கேட்டார்

உடனே குரு அந்த சீடரை பார்த்து கடந்த 20 வருடங்களாக நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? தியானம் என்ற பெயரில் அதே போல் நானும் இந்த செங்கல்லை முகம் பார்க்கும் கண்ணாடி ஆக்க முயற்ச்சிக்கிறேன் என்றார்

சீடர் என்ன முட்டாள் தனமான பேச்சு இது , நீங்கள் காலங் காலமாக இதை தேய்த்துக்கொண்டு இருந்தாலும் இது கண்ணாடி ஆகாது என்றார்

ஆம்! அதைத்தான் நானும் சொல்ல வந்தேன் ! கடந்த இருபது வருடங்களாக நீ தியானம் என்ற பெயரில் உனது மனதை அலங்காரம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாய் ! மனதை மாற்றியமைப்பது தியானம் அல்ல ! மனம் அற்று இருப்பதே தியானம்- மனதை கடப்பதே தியானம் , இது நல்லது இது கெட்டது என்று பிரித்து பார்க்கும் இந்த மனதை முற்றிலும் விட்டுவிடுவதே தியானம் என்றவாறே தான் தேய்த்துக் கொண்டிருந்த செங்கல்லை தூக்கி எறிந்தார்

அந்த சீடரிடமும் ஒரு ஏதோ ஒன்று தொலைந்து போனது- ஓஷோ

புதன், 13 ஜூன், 2012

பரமாத்மா குரு


ஒரு ஜென் குருவிடம் பல சீடர்கள் இருந்தனர்.அவர்கள் தங்கள் பொருட்கள் அடிக்கடி திருடு போவதை அறிந்து,தங்களுக்குள் யாரோ திருடுகிறார்கள் என்று தெரிந்து,ஒரு நாள் திருடிய சீடனைக் கையும் களவுமாகப் பிடித்து குருவின் முன் நிறுத்தினார்கள்.குரு அமைதியாக இருந்ததைப் பார்த்து அவரிடம் அந்த சீடனை வெளியே அனுப்பக் கோரினர்.குரு சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டுப் பின்னர் அவனை வெளியே அனுப்ப முடியாதெனத் திட்டவட்டமாகக் கூறினார்.கோபமுற்ற சீடர்கள் அவனை வெளியே அனுப்பாவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறி விடுவோம் என்று கூறினர்.குரு அவர்களைப் பார்த்து அமைதியாகச் சொன்னார்,''நீங்கள் அனைவரும் வெளியே போவதாக இருந்தாலும் ,நான் அவனை வெளியே அனுப்ப முடியாது.''சீடர்கள், குரு தவறு செய்தவனுக்கு ஏன் அவ்வளவு பாதுகாப்புக் கொடுக்கிறார் என்று புரியாமல் விழித்தனர்.குரு மீண்டும் அவர்களிடம் பேசினார்,''உங்கள் அனைவருக்கும் உலகில் நல்லது எது,கெட்டது எது என்பது நன்றாகத் தெரிகிறது எனவே நீங்கள் வெளிய சென்றாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.ஆனால் இவனுக்கு சரியான செயல் எது,தவறான செயல் எது என்பது இன்னும் தெரியவில்லை.இவனுக்கு நான் உதவாவிட்டால் வேறு யார் உதவுவார்கள்?அவனுக்கு நல்லது  எது,கெட்டது எது என்று நான் தான்  சொல்லித்தர வேண்டும்.எனவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.''என்றார்.சீடர்கள் கண்களில் கண்ணீர் வழிய குருவிடம் மன்னிப்புக் கேட்டனர்.

செவ்வாய், 12 ஜூன், 2012

மனதின் பயம்

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.
தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரேஉதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.
பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.
பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்

திங்கள், 11 ஜூன், 2012

அதிசய இடம்


அன்பு.........
அது கருவறை சுகம்,
ஒருமையின் ஆனந்தம்,
நிறைவின் வெளிப்பாடு,
இதயத்தின் வாழ்க்கை.
ஆம்..........அது அதிசய இடம்............
அங்கு உன் சோகங்களை கொட்டலாம்,
சுகங்களாக மாறும்,
அங்கு உன் புண்களைக் காட்டலாம்,
தழும்பற்ற நலம் கிடைக்கும்,
அங்கு உன் கோபம் வெளிப்படலாம்,
சாந்தம் பின்தொடரும்,
அங்கு உன் பொறாமை பேராசை வெறுப்பு இப்படி....
எல்லா அழுக்குகளும் அதிசயமாய் அனுமதிக்கபடும்,
ஆச்சரியமாய் தீர்ந்துபோகும்,
அங்கு உன் தவறுகள் தவறுகளல்ல
நடைபழகும் குளறுபடிகள்,
ஆகவே ஆனந்த ரசிப்பாய் இருக்கும்.
அங்கு.......நீ கடலுக்கடியில் இருக்கும் மனிதன்.....
அன்புக் கடலுக்கடியில்................................
இந்த வெளிஉலகம் உன்னை பாதிப்பதில்லை,
வெளிக்காற்று உன்மீது படுவதில்லை,
பார்ப்பதெல்லாம்.......அழகு பரவசம் சத்தியம்.

ஞாயிறு, 10 ஜூன், 2012

வாழ்நாள் முழுவதும் தீமைகளைச் செய்து விட்டு கடைசி நேரத்தில் கடவுளை நினைத்தால் போதுமா ?

யாருக்கும் உதவாத ஒரு பணக்கார கஞ்சன் இறந்து சித்திரகுப்தர் முன் நிற்கிறான். அந்த பணக்காரன் கையில் இருக்கும் பணத்தை கொடுத்து சொர்க்கத்தின் கதவுகளை திறந்து விடும்படி கூறினான். 
சித்திரகுப்தர் சிரித்தபடி, " பூலோக முறைகள் இங்கு பயன் தராது. சொர்க்கத்தில் நுழையும் தகுதி பெறும் அளவிற்கு நீ யாருக்கு என்ன நன்மைகள் செய்தாய் ?" என்று கேட்டார். 
பணக்காரன் நன்கு யோசித்துவிட்டு, " ஒரு கிழவிக்கு பத்து பைசா தானம் கொடுத்தேன்" என்றான். சித்திரகுப்தர், "இது தவிரவேறு ஏதாவது நன்மை செய்து இருக்கிறாயா ? " என்று கேட்டார். 
பணக்காரன் மேலும் யோசித்து, " ஒரு அனாதை சிறுவனுக்கு ஐந்து பைசா கொடுத்தேன்" என்றான். சித்திரகுப்தர் "இன்னும் வேறு உண்டா ?" என்று கேட்டதற்கு இல்லை என்று பதிலளித்தான். 
அப்போது சித்திரகுபதரின் உதவியாளர் சித்திரகுப்தரிடம், " இந்த பணக்காரனிடம் பதினைந்து பைசாவை திருப்பிக் கொடுத்துவிட்டு அவனை நரத்திற்கு அனுப்பிவிட வேண்டும்" என்றான். 
இந்த கதையில் வெறும் பதினைந்து பைசாவில் சொர்க்கத்தை வாங்க முடியாது என்பதற்காக ஓஷோ கூறினார். 

வெள்ளி, 8 ஜூன், 2012

நீங்கள் பெரிய தாடி வளர்த்துக்கொண்டிருக்கிறீர்களே, அது ஏன்? சோம்பேறித்தனமா? அல்லது வேறு தத்துவக் காரணங்கள் இருக்கிறதா?’


ஓஷோ சிரித்தார். எனக்குத் தாடி இருக்கிறதா? யார் சொன்னது?!’
யார் சொல்லவேண்டும்? அதான் பார்த்தாலே தெரிகிறதே!
கண்ணால் பார்ப்பதையெல்லாம் நம்பிவிடாதீர்கள்என்றார் ஓஷோ. எனக்கும் தாடி இல்லை. போதிதர்மாவுக்கும் தாடி இல்லை.
அந்தக் காலத்தில் மாணவர்கள் ஜென் பழகுவதற்காக வரும்போது குருநாதர்கள் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்பார்கள். அவற்றை மையமாக வைத்துப் பலவிதமாகச் சிந்திக்கச் சொல்லித்தருவார்கள். அப்படி ஒரு கேள்வி. போதிதர்மருக்குத் தாடி இல்லையே. ஏன்?’
ஆசிரியர் இப்படிக் கேள்வி கேட்டதும் மாணவர்கள் குழம்பிப்போவார்கள். என்ன வாத்யாரே தப்பாச் சொல்றீங்க? போதிதர்மருக்குதான் முகம்முழுக்க அம்மாம்பெரிய தாடி இருக்குதே?’
அவசரப்படாதீங்க. நல்லா யோசிங்க. போதிதர்மருக்கு உண்மையாவே தாடி இருக்கா? இல்லையா?’
இந்த நாலு வார்த்தைக் கேள்வியை வைத்துக்கொண்டு நாள்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக யோசித்தவர்கள் உண்டு. கடைசியாக ஒரு சுபதினத்தில் அவர்களுக்கு ஞானம் பிறக்கும். போதிதர்மரின் தாடி அவருடைய உடம்புக்குச் சொந்தமானது. அந்த உடம்புமட்டுமே போதிதர்மர் இல்லை.
அநேகமாக எல்லா உலகக் கலாசாரங்களும் உடம்பை ஒரு கோவில் என்று சொல்லித்தருகின்றன. அதைப் பத்திரமாகப் பராமரித்துப் பாதுகாத்துக்கொள்ளவேண்டியது நம் பொறுப்பு என்கின்றன.
ஆனால் ஜென் அந்தச் சிந்தனையிலிருந்து சற்று விலகி வந்து உடல்மட்டுமே நாம் இல்லைஎன்கிறது. அந்தப் புற அடையாளங்களை விட்டு விலகிச் சிந்திக்கச் சொல்கிறது. அதன்படி பார்த்தால், (நிஜமான) போதிதர்மருக்குத் தாடி இல்லை, ஓஷோவுக்கும் தாடி இல்லை!

புதன், 6 ஜூன், 2012

படைப்பு பற்றி ஓஷோ


படைப்பு என்பது எப்பொழுதுமே உணர்ச்சிகரமானது; அக்கறையுடையது - ஏனெனில், படைப்பு என்பது - காதல் - உண்டாக்குதல். காதலுடையவனால் தான் ஆக்குதல் செய்ய முடியும். படைப்பினால் எதையுமே உதாசீனப் படுத்த முடியாது. ஒரு மனிதன் உணர்ச்சியற்றவனாக இருக்கும் பட்சத்தில் அவனிடமுள்ள ஆக்கும் திறமை மறைந்தொழிந்து போய்விடுகிறது. படைப்பாளிக்கு தேவை உயிர்ப்பு (aliveness), சக்தி (energy), பற்றுதல்(passion). உருகியொழுகி ஓடும் - ஒருமுகப்படுத்தப் பட்ட வாழ்வின் மீதான காதலுடன் - பாய்ந்து ஓடும் நதியைப் போல ஆற்றலுடன், ஒடுவது தான் படைப்பு.

உங்களின் பார்வை உதாசீனப் படுத்தும் நோக்கிலிருந்தால், அழகு உங்கள் கண்களுக்குத் தெரியாது. உதாசீனப் போக்கு, வாழ்வில் கிடைக்கும் அனைத்தையுமே சாதாரணமாக்கிவிடும். உ-ம் - உங்கள் வேலை; தொழில். இதென்ன பெரிய வேலை என்ற அலட்சியம் உங்கள் நோக்கில் இருக்கும் பொழுது, அந்த வேலை - தொழில் உங்களுக்கு எந்த ஈர்ப்பையும், ஆர்வத்தையும் தராது. வேலை என்ற இடத்தில், வாழ்க்கை என்ற வார்த்தையை இட்டுப் பாருங்கள். இப்பொழுது, புரியும், மனிதர்கள் எதனால், தங்களுக்குள் வாழ்வின் ஆதர்சனமான வெப்பத்தை இழந்து, குளிர்ந்து குறுகிப் போய்விடுகிறார்கள் என்று.

இந்த விபத்து கிழக்கே நிகழ்ந்தது. மதங்கள் ஆசாரம் என்ற பெயரில் தவறான பாதையில், தவறான வழிகாட்டுதலுடன் நடை போட ஆரம்பித்தது. பற்றுதலுடன் வாழ்வை நோக்குவது தவறு என்ற கருத்தில் மக்களின் மனதில் நிலை நிறுத்தப்பட்டது (conditioned); பயிற்றுவிக்கப் பட்டது (trained). 

ஒருமுறை ஓஷோவைப் பார்க்க ஒரு துறவி வருகை தந்தார். அப்பொழுது ஓஷோ, தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பல மலர்கள் தோட்டத்தில் மலர்ந்திருந்தன. துறவியின் பார்வையில் அசூயை. அவர் ஒஷோவிடம் கேட்டார் - "இந்த மலர்களை நீங்கள் விரும்புகிறீர்களா? தோட்ட வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" அவருடைய தொனியில் கண்டனம். துறவறத்தில் ஈடுபட்டவர்கள், வாழ்வை இரசிக்கும் காரியங்களில் பற்றுதல் செய்யக் கூடாது என்ற தொனி இருந்தது.

நான் புறக்கணிப்பவனில்லை. புறக்கணிப்பு என்பது எதிர்மறை நடை. தற்கொலை செய்து கொள்ளும் மனம் கொண்டவனின் செயல். உதாசீனம் செய்பவனை எதுவும் பாதிக்காது. அவன் தன் வாழ்க்கையை புறக்கணிப்பு என்ற பிரச்னைகளை தவிர்க்கும், தப்பித்து ஓடும் வழியில் நடத்திச் செல்கிறான். எதுவுமே - எந்த ஒரு நிகழ்வுமே - அவனை அதிரச் செய்யாது; கவனத்தைப் பிசகச் செய்யாது. எதற்குமே அசைந்து கொடுக்காத நிலை தேவையில்லை. மனம் இந்நிலையில் எப்பொழுதுமே மகிழ்ச்சியையும், பொங்கி வழியும் ஆற்றலையும் பெறாது.

புறக்கணிப்பை, மக்கள், மதங்கள் பரிந்துரைக்கும் வாழ்வுமுறையாக - பயணம் செல்லும் பாதையாகத் தேர்வு செய்து விட்டனர் - பயணிக்க முடிகிறதோ இல்லையோ! முடிந்தவர்கள் வாழ்வில் வெற்றி பெற்றவர்களாகவும், சாதித்தவர்களாகவும் கொண்டாடப் பட்டார்கள். அவர்கள் எதை சாதித்தார்கள்? வாழ்வின் நேசமான பகுதிகளை, பிற மனிதர்களைப் பற்றுதலோடு நோக்கும் பண்பை இழந்து, விதைத்தது முளைத்தது என்ற கணக்கில் வாழ்ந்து, பிரச்னைகளைச் சந்திக்கும் முயற்சியை விடுத்து ஓடிய வாழ்வா கொண்டாடப் பட வேண்டியது? 

சாதிப்பது, நிகழ்த்திக் காட்டுவது, பரிபூரணமாக உணர்வது இவையே இயற்கையுடன் ஒன்றிய நேர்முறை வழிமுறை (Positive attidue). கடவுள் இதற்கு ஒரு நல்ல முன்மாதிரி. அவன் துறவறம் பூண்டிருந்தால், இந்த பிரபஞ்சத்தையும், கோள்களையும், துணகளையும், விலங்குகளையும், பறவைகளையும், புழுக்களையும், பூச்சிகளையும், இன்னபிறவற்றையும் படைத்திருக்க முடியுமா? பச்சைக்கிளியின் வண்ணம் தான் எத்தனை அழகு? உணர்ச்சியற்ற ஜடமாக இறைவன் இருந்திருந்தால், இத்தனை ரசிப்புடன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்க முடியுமா? ஒவ்வொரு படைப்பிலும் உயிர்ப்புடன், ரசனையுடன், பற்றுதலுடன் செய்த இறைவனை பற்றற்ற வாழ்வுமுறைப் பாதையில் சென்றடைய முடியுமா? காந்தியைப் படைத்த அதே அக்கறையுடன் தான், அவன் ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறகுகளில் வண்ணம் தெளிவித்தான்.

இறைவன் அன்பானவன்.(LOVE). இறைவன் முழுமையானவன். அந்த முழுமையில் ஒன்றாகிப் போக நீங்கள் விரும்புவீர்களேயானால், நீங்களும் காதலில் ஈடுபடுங்கள். அன்பு செய்தலில்). அதை விடுத்து, விரதமிருந்து, பற்றுதலைப் போக்கி, இறைவனை நோக்கி செல்வோமென்பது சுயமாக மெல்லச் சாகும் வழியாகும். 

காதல் செய்யுங்கள்; ஆழ்ந்த காதல் செய்யுங்கள்; முழுமையாக உங்கள் காதலில் மூழ்குங்கள்; அந்தக் காதலிலே உள்ளமும் உடலும் கரைந்து செல்லும் அளவிற்குக் காதல் செய்யுங்கள் - அப்பழுக்கற்ற படைக்கும் சக்தியாக வழிந்தோடும் நிலை எய்துங்கள்; அந்த நிலையில் தான் உங்களால் கடவுளின் உயிர்ப்பு சக்தியில் பங்கேற்றுக் கொள்ளவும், கடவுளுடன் கைகோர்த்துக் கொண்டு நடந்து செல்லவும் இயலும்.

எனக்கு படைப்பு என்பது - பிரார்த்தனை; தியானம்; அதுவே வாழ்க்கை.

அது அதன் போக்கிலே இருக்கு!!!!!!!!


உடலை பாருங்கள் எவ்வளவு அற்புதமாக இயங்குகிறது .அதன் ஒவ்வொரு இயக்கமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது .உலகத்திலே அழகான உடல் உங்களுடையது தான்.ஆனால் நாம் தான் அதை குறைத்து மதிப்பிட்டு கொண்டே இருக்கிறோம், எந்த பன்றியும் தான் அழகில்லை என்று வருந்துவது இல்லை நாம் மட்டும் வருந்த காரணம் அடுத்தவர் உடலை வைத்தே நம்மை மதிப்பிட்டு கொள்வதால் தான் .உடலை மதித்து பழகுங்கள்,உங்கள் உடலை கொண்டாடுங்கள் உங்களை விட சிறந்த அழகு வேறு இங்கு இல்லவே இல்லை .எந்த ஒரு சிறு வேலை செய்தாலும் உடலின் சொல்லை கேளுங்கள் உதாரணமாக உங்களுக்கு பசிக்கும் போது  மட்டுமே சாப்பிடுங்கள் ருசிக்காக சாப்பிடாதீர்கள் .உங்களுக்கு காய்ச்சல் வந்தால் தானே உடல் மீது அக்கறை வருகிறது .காய்ச்சல் என்பதே உங்கள் உடலை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்பதன் வெளிப்பாடே.இந்த உடலை வைத்துக்கொண்டு தான் நீங்கள் செய்ய நினைப்பது எல்லாமே செய்கிறீர்கள் .உங்கள் காதலியை முத்தமிட வேண்டுமென்றாலும்,உங்கள் எதிரியை வாயில் குத்த வேண்டுமென்றாலும் இந்த உடலை தானே பயன்படுத்துகிறீர்கள்.ஆகவே உங்கள் உடலின் எல்லா உறுப்பையும் கொண்டாடுங்கள். குளித்தாலும்,சாப்பிட்டாலும்,ஓடினாலும்,பேசினாலும்,அழுதாலும், சிரித்தாலும்,உடலுறவு கொண்டாலும் அது உங்களின் முழுமையான வெளிப்பாடாக இருக்க வேண்டும் . உடலில் உயிர் ஒட்டிக் கொண்டு இருக்கும் வரை அதை கொண்டாடுவதை விட்டு விட்டு அதை வஞ்சிக்காதீர்கள்.

மனம் ஒரு குரங்குஇப்படி ஏன் சொன்னார்கள்.ஏனென்றால் நம் மனதிடம் எதை செய்யாதே என்று கூறுகிறோமோ அதை தான் திரும்ப திரும்ப செய்யும்.நம்பிக்கை இல்லையா? கண்ணை மூடி பத்து நிமிடம் உங்கள் நண்பனை நினைக்காமல் இருங்கள் .முதல் எண்ணமே உங்கள் நண்பன் தான் தோன்றுவான் .மனம் என்பது எண்ணகளின் கூட்டு சேர்க்கை.அதற்கு இரண்டு விதமாகவே இயங்க தெரியும் ஒன்று கடந்த காலத்தில் இயங்கும் இல்லை எதிர் காலத்தில் இயங்கும், நிகழ் காலத்தை அது எப்போதும் சுவைப்பதே இல்லை .நிகழ் கால மனம் தான் உண்மையாக தியானத்தில் இருக்கும் மனம். மனதையும் நம் மூதாதையர்கள் பலிக்கவே செய்தனர். மனதை அடக்கு ! மனதை அடக்கு! என்றே சொல்லி வருகின்றனர்.காரணம் ரொம்ப எளிது நம் மனம் ஒரு பறவையை போல இயங்கவே ஆசைப்படும் அதை கட்டுபடுத்தவில்லை என்றால் விளைவு மோசமாக இருக்கும் என்று நினைத்தே அப்படி சொன்னார்கள். நான் உங்கள் மனதை கட்டுப்படுத்த சொல்லவே இல்லை நீங்கள் எவ்வளவு முயல்கிறீர்களோ அவ்வளவு தோற்றுப்போவீர்கள் மனதின் சங்கீதத்தை ரசியுங்கள் அதை கவனியுங்கள் தானாக உங்கள் எண்ண அலைகள் கட்டுக்குள் வரும் . நீங்களே உங்கள் எஜமானாக மாற மற்றவர் சொல்லும் குப்பைகளை மனதில் பதிய வைக்காதீர்கள். நீங்கள் சுதந்திரமானவர்கள் ! ஆனால் உங்கள் மனதில் ஆழமாக தினமும் மூட்டை மூட்டையாக  இந்த சமூகம் குப்பை கொட்டி கொண்டே இருக்கிறது .உங்கள் மனதை தியானத்தின் மூலம் அறியுங்கள். ஆத்மாவை நேருக்கு நேர் பாருங்கள் கொண்டுங்கள் 

செவ்வாய், 5 ஜூன், 2012

காதலாவது கத்தரிக்காய் ஆவது!!!!!!!!!!!!!!!


ஒரு அரசன் தன் மகள் ஒரு எழ்மையானவனை காதலிக்கிறாள். என்று தெரிந்து தன் மகளிடம் பேசிபார்த்தார் ஆனால் மகள் பிடிவாதமாக"அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். இல்லையென்றால் நான் செத்துவிடுவேன்" என்று மிரட்டினால்...'காதல் சாகவும் துணியும்' என்று எண்ணிய அரசன் மகளின் காதலின் உண்மை தன்மையை புரியவைக்கவேண்டும். என எண்ணி தன் மகளிடம் ஒரு நிபந்தனை வைத்தார். அதாவது "உங்களை ஒருநாள் 24 மணிநேரம் முழுவதும் ஒருவர் ஒருவரை  பார்க்க முழு நிர்வாணமாக கட்டி வைத்து விடுவோம்...நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து  அந்த 24 மணி நேரத்தை கடந்தால் உங்கள் காதலுக்கு எனக்கு முழுசம்மதம்" என்கிறார். இதற்கு காதலர்கள் சம்மதிக்கிறார்கள். ஏனென்றால் அந்த காதல் பல கவிதைகள் எழுதி, பாடி, பேசி வாழ்ந்த காதல் அல்லவா.."இது என்ன பெரிய நிபந்தனை  நாங்க வெற்றிபெற்று காதலில் ஜெயித்து காட்டுகிறோம்" என்று காதலர்கள் சொல்ல...அரசன் இருவரையும் எதிர் எதிரே கட்டி போடா ஆணையிட்டான். இருவரையும் முழு நிர்வாணமாக ஒரு தூணில் நிற்கவைத்து கட்டி போட்டார்கள். அப்போது இருவருக்கும் கொஞ்சம் வெட்கி தலை குனிந்து ஒருவரை ஒருவர் ஓரக்கண்னால் பார்த்து தம் காதல் வெற்றியடையும் என்று எண்ணி பூரிப்பில் இருந்தார்கள். நேரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டிருந்தது. இப்போது சில நேரம் சென்றுவிட்டது. காதலனுக்கு சிறுநீர் கழிக்கணும் போல ஒரு உணர்வு ஆனால் அதை அடக்கி கொண்டான். இதேபோன்று அந்த பெண்ணுக்கும்...இருவரும் அடக்க முயற்சி செய்து பார்த்தார்கள். முடியவில்லை வெளியேற்றி விட்டார்கள். இப்போது வெளியேறிவிட்டது. அந்த இடமே நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டது. இருந்தும் முக சுளிப்புடன் சமாளித்தார்கள். ஆனால் காதலனின் வயிறு சாமாளிக்க முடியவில்லை அடுத்த மலகடனை வெளிற்ற நேரம் வந்து விட்டது. இந்த முறை அவன் முயற்சி செய்தும் பலன் இல்லை மலத்தை வெளியேற்றிவிட்டான். நாற்றம் முன்னரை விட இப்போது ரொம்ப அதிகமாகிவிட்டது. என்ன செய்வான்பாவம் அவன், முயற்சிக்கு இயற்கை உபாதைகள் கட்டுப்படவில்லை அந்தவேளையில் கட்டுபாட்டை மீறி கொண்டு வந்துவிட்டது. இப்போது காதலியின் முகம் பல கோணல்களை வெளிபடுத்தி விட்டது. "என்னடா நம் காதலன் இப்படி ஒரு நிலையில் இருக்கிறானே..என்ன ஒரு அருவருப்பான நிலை" என்று மனதுக்குள் எண்ணி வெறுப்படைந்தால். இப்போது காதலர்கள் ஒரு முகத்தை ஒருவர் பார்க்கவே அருவருப்பாக இருந்த நிலை முகத்தை திருப்பி கொண்டு தங்களை விடுவித்தால் போதும் என்று எண்ணினார்கள். காதலர்களை விடுவித்தாகிவிட்டது. ஆனால் அவர்களுக்குள் முன்னே இருந்த காதல் இல்லை...

திங்கள், 4 ஜூன், 2012

ஜென் குருவின் அமைதி


ஜென் குரு பொகுஜு தெரு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தார்.அப்போது ஒருவன் வேகமாக வந்து ஒரு மரக் கட்டையால் அவரைத் தாக்கினான்.அதே சமயம் அவன் தடுமாறி கீழே விழுந்தான்.கட்டையும் கீழே விழுந்தது.குரு உடனே கட்டையைத் தன கையில் எடுத்தார்.அதைப் பார்த்த உடன் அவன் பயந்து ஓட ஆரம்பித்தான்.குருவும் கட்டையுடன் அவனைப் பின் தொடர்ந்தார்.அவனைப் பிடித்து,''இதோ உன் கட்டை,''என்று கூறி  அவன் கையில் கட்டையைத் திரும்பக் கொடுத்தார்.அவன் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்.அங்கிருந்த மக்கள் குருவிடம்,''இவன் ஒரு அயோக்கியன்.இவனைப் பதிலுக்கு அடிக்காமல் கட்டையை அவனிடம் திரும்பக் கொடுக்கிறீர்களே!''என்று கேட்டனர்.குரு கேட்டார் ,''நாம் செல்கிற வழியில் மரத்திலிருந்து ஒரு கிளை முறிந்து நம் மீது விழுந்தால் என்ன செய்வோம்?என்ன செய்ய முடியும்?''மக்கள் அவர் கூற்றை ஏற்காமல்,''கிளை காய்ந்து போனது.அதற்கு உயிர் இல்லை.அதற்கு அறிவுரை கூற முடியாது.அதற்கு தண்டனையும் கொடுக்க முடியாது.அதற்கு மனம் என்று ஒன்று இல்லை.எனவே அதனுடன் ஒப்பிடாமல் இவனுக்கு தண்டனை வழங்க வேண்டும்.''என்றனர்.குரு ,''என்னைப் பொறுத்த வரை இவன் ஒரு முறிந்த கிளைதான்.என்னால் ஒரு கிளைக்கு ஆலோசனை வழங்கவோ,தண்டனையோ கொடுக்க முடியாது எனில் இவனுக்கு மட்டும் ஏன் வீணே ஆலோசனை கூறவோ,தண்டனை கொடுக்கவோ வேண்டும்?''என்று கூறிக் கொண்டே தன் வழியில் நடந்து சென்றார்.


சனி, 2 ஜூன், 2012

யாருடைய தொழில் மிகவும் பழமையானது?


ஒரு மத துறவி,ஒரு டாக்ட?ர், ஓர் அரசியல்வாதி மூவரும் ஒருநாள் கூடிப் பேசிக்கொண்டிருந்தபோது, யாருடைய தொழில் மிகவும் பழமையானது என ஒரு கேள்வி வந்தது.
மனிதனின் முதல் செயலே பிரார்த்தனை செய்து கடவுளுக்கு தன் நன்றியைத் தெரிவித்ததாகும். எனவே என் தொழில்தான் பழைமையானது!என்றார்  மத துறவி  

சுத்த அபத்தம்! கடவுள் பெண்ணைப் படைப்பதற்காக ஆணின் உடம்பிலிருந்து ஒரு எலும்பை எடுத்தார். அதுவே முதல் செயல். எனது தொழில்தான் மிகப் பழைமையான தொழில். கடவுள் பெண்ணைப் படைப்பதற்கு முன்புää உலகில் வெறும் கலவரம் மட்டும்தான் இருந்தது!என்றார் டாக்டர்.

சரியாகச் சொன்னீர்கள் டாக்டர்! உங்கள் வாதப்படி எனது தொழில்தான் பழைமையான தொழில்என்றார் அரசியல்வாதி.

எப்படி?’

கடவுளின் அறுவை சிகிச்சைக்கு முன்பு உலகில் வெறும் கலவரம்தான் இருந்தது என்று நீங்கள்தானே சொன்னீர்கள்? அந்தக்கலவரத்தை என்னைப்போன்ற அரசியல்வாதி தவிர, வேறு யார் உருவாக்கியிருக்க முடியும்? எனவே, என் தொழில்தான் மிகப் பழைமையானதுஎன்றார் அரசியல்வாதி.