my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

புதன், 6 ஜூன், 2012

அது அதன் போக்கிலே இருக்கு!!!!!!!!


உடலை பாருங்கள் எவ்வளவு அற்புதமாக இயங்குகிறது .அதன் ஒவ்வொரு இயக்கமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது .உலகத்திலே அழகான உடல் உங்களுடையது தான்.ஆனால் நாம் தான் அதை குறைத்து மதிப்பிட்டு கொண்டே இருக்கிறோம், எந்த பன்றியும் தான் அழகில்லை என்று வருந்துவது இல்லை நாம் மட்டும் வருந்த காரணம் அடுத்தவர் உடலை வைத்தே நம்மை மதிப்பிட்டு கொள்வதால் தான் .உடலை மதித்து பழகுங்கள்,உங்கள் உடலை கொண்டாடுங்கள் உங்களை விட சிறந்த அழகு வேறு இங்கு இல்லவே இல்லை .எந்த ஒரு சிறு வேலை செய்தாலும் உடலின் சொல்லை கேளுங்கள் உதாரணமாக உங்களுக்கு பசிக்கும் போது  மட்டுமே சாப்பிடுங்கள் ருசிக்காக சாப்பிடாதீர்கள் .உங்களுக்கு காய்ச்சல் வந்தால் தானே உடல் மீது அக்கறை வருகிறது .காய்ச்சல் என்பதே உங்கள் உடலை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்பதன் வெளிப்பாடே.இந்த உடலை வைத்துக்கொண்டு தான் நீங்கள் செய்ய நினைப்பது எல்லாமே செய்கிறீர்கள் .உங்கள் காதலியை முத்தமிட வேண்டுமென்றாலும்,உங்கள் எதிரியை வாயில் குத்த வேண்டுமென்றாலும் இந்த உடலை தானே பயன்படுத்துகிறீர்கள்.ஆகவே உங்கள் உடலின் எல்லா உறுப்பையும் கொண்டாடுங்கள். குளித்தாலும்,சாப்பிட்டாலும்,ஓடினாலும்,பேசினாலும்,அழுதாலும், சிரித்தாலும்,உடலுறவு கொண்டாலும் அது உங்களின் முழுமையான வெளிப்பாடாக இருக்க வேண்டும் . உடலில் உயிர் ஒட்டிக் கொண்டு இருக்கும் வரை அதை கொண்டாடுவதை விட்டு விட்டு அதை வஞ்சிக்காதீர்கள்.

மனம் ஒரு குரங்குஇப்படி ஏன் சொன்னார்கள்.ஏனென்றால் நம் மனதிடம் எதை செய்யாதே என்று கூறுகிறோமோ அதை தான் திரும்ப திரும்ப செய்யும்.நம்பிக்கை இல்லையா? கண்ணை மூடி பத்து நிமிடம் உங்கள் நண்பனை நினைக்காமல் இருங்கள் .முதல் எண்ணமே உங்கள் நண்பன் தான் தோன்றுவான் .மனம் என்பது எண்ணகளின் கூட்டு சேர்க்கை.அதற்கு இரண்டு விதமாகவே இயங்க தெரியும் ஒன்று கடந்த காலத்தில் இயங்கும் இல்லை எதிர் காலத்தில் இயங்கும், நிகழ் காலத்தை அது எப்போதும் சுவைப்பதே இல்லை .நிகழ் கால மனம் தான் உண்மையாக தியானத்தில் இருக்கும் மனம். மனதையும் நம் மூதாதையர்கள் பலிக்கவே செய்தனர். மனதை அடக்கு ! மனதை அடக்கு! என்றே சொல்லி வருகின்றனர்.காரணம் ரொம்ப எளிது நம் மனம் ஒரு பறவையை போல இயங்கவே ஆசைப்படும் அதை கட்டுபடுத்தவில்லை என்றால் விளைவு மோசமாக இருக்கும் என்று நினைத்தே அப்படி சொன்னார்கள். நான் உங்கள் மனதை கட்டுப்படுத்த சொல்லவே இல்லை நீங்கள் எவ்வளவு முயல்கிறீர்களோ அவ்வளவு தோற்றுப்போவீர்கள் மனதின் சங்கீதத்தை ரசியுங்கள் அதை கவனியுங்கள் தானாக உங்கள் எண்ண அலைகள் கட்டுக்குள் வரும் . நீங்களே உங்கள் எஜமானாக மாற மற்றவர் சொல்லும் குப்பைகளை மனதில் பதிய வைக்காதீர்கள். நீங்கள் சுதந்திரமானவர்கள் ! ஆனால் உங்கள் மனதில் ஆழமாக தினமும் மூட்டை மூட்டையாக  இந்த சமூகம் குப்பை கொட்டி கொண்டே இருக்கிறது .உங்கள் மனதை தியானத்தின் மூலம் அறியுங்கள். ஆத்மாவை நேருக்கு நேர் பாருங்கள் கொண்டுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக