my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

புதன், 25 ஏப்ரல், 2012

பெண்ணுக்கு சளி பிடித்து இருக்கிறது!!!!!!!!!!!!!!!!!


டாக்டர் பைபர்க்கு வந்திருக்கும் நோயாளியுடன் என்ன செய்வது

என தெரியவில்லை. அந்த பெண்ணை அவர் எல்லா 
பரிசோதனையும்

செய்துவிட்டார் ஆனால் அவரது பரிசோதனையின்

முடிவுகள் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தன. 
முடிவில் அவர்

பிரச்சனை என்ன என எனக்கு தெளிவாக

தெரியவில்லைஎனஒப்புகொண்டார்.


உனக்கு சளி பிடித்திருக்கிறது அல்லது நீ 
         
       கர்ப்பமாக இருக்கிறாய்

         என அவர் கூறினார்.


அதற்கு அவள்,
நான் கர்ப்பமாகத்தான் இருக்கவேண்டும், எனக்கு சளியை
கொடுத்திருக்ககூடிய அளவு நெருக்கமாக யாரையும் எனக்கு
தெரியாதுஎன கூறினாள்.

திங்கள், 23 ஏப்ரல், 2012

எடுப்பது பிச்சை இதில் போலி கவுரவம் வேறு


முல்லா தனது வீட்டின் கூறை மேல் ஏதோ ரிப்பேர் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது ஒரு சாமியார் அவரை கீழே வருமாறு அழைத்தார் , முல்லா மிகவும் சிரமப்பட்டு கீழே வந்து அவரிடம் என்ன விசயம் எதற்க்காக என்னை கிழே வருமாறு அழைத்தீர்கள் எனக்கேட்டார்.

அந்த சாமியார் நான் உன்னிடம் ஏதாவது தானமாக பெற வந்துள்ளேன்! அதை சத்தமாக கேட்க வெட்கமாக இருந்தது! அதனால்தான் உன்னை கீழே அழைத்தேன் , மன்னிக்கவும் என்றார்

உடனே முல்லா எடுப்பது பிச்சை இதில் போலி கவுரவம் வேறு ! சரி பரவாயில்லை என்னுடன் வாஎன்று சொல்லிவிட்டு மீண்டும் கூறை மேல் ஏறினார். 

அந்த சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலை கஷ்டப்பட்டு தூக்கமுடியாமல் தூக்கிக்கோண்டு முல்லாவை தொடர்ந்தார்

சாமியார் மேலே வந்து சேர்ந்ததும் , முல்லா மீண்டும் தனது வேலையை பார்க்கத்தொடங்கினார்.

சாமியார் எனக்கு என்ன தருகிறீர்கள் ? “ எனக் கேட்டார் சற்று பொறுமை இழந்தவராக

முல்லா என்னிடம் கொடுப்பதற்க்கு ஒன்றும் இல்லை, sorry ! “ என்றார்

சாமியார் முட்டாள் ! இதை கீழேயே சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஸ்டப்பட வைத்து மேலே அழைத்தாய் !

முல்லா என் பக்கத்து வீட்டுக்காரன் இருந்தான் அவன் முன்னே ஒன்றும் இல்லை என சொல்ல வெட்க்கமாக இருந்தது அதான்- மற்றும் நான் கீழே வரப் பட்ட அனுபவத்தையாவது ( கஷ்டத்தையாவது) உனக்கு தானமாக கொடுக்கலாம் என்று உன்னை அழைத்தேன்! ஹீ ஹி… “ என்றார்

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

மனிதன் கனவிலேயே வாழ்கின்றான்


ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நன்பன் கிண்டலாக , “ நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் என்று சொன்னான்.

முல்லா கம்பீரமானார். எப்போது அவள் வ்ருகிறாள் ? “ என்று கேட்டார்.

இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்குஎன்றான் அவன்

அந்த நாள் நசுருதீனின் பொழுது மன ஆமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பைடவில்லை. இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது என்று முடிவு செய்திருந்தார்.

நேரம் போய் கொண்டே இருந்தது.

அவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை.

இரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது.

அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. தனக்கு திருமணம் ஆகவில்லை என்பது

ஓஷோ : மனிதன் கனவிலேயே வாழ்கின்றான் , இந்த கனத்தில் வாழ்வதில்லை


வெள்ளி, 20 ஏப்ரல், 2012

தியானம்

தியானம் என்பது தினமும் காலை ஏதோ ஒரு மணி நேரம் செய்வதோ அல்லது முஸ்ஸிம்கள் செய்வது போன்று ஒரு நாளில் ஐந்து முறை செய்வதோ அல்ல. வெவ்வேறு மதங்கள் வெவ்வேறு நேரங்களை தியானத்திற்கு என்று வைத்துக் கொண்டுள்ளன. ஆனால் தியானத்திற்கு என்று தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குவது மற்ற நேரங்களில் தியானத்தில் இல்லாமல் இருப்பது என்பதாகும்.

ஒருமணி நேரம் தியானம், மற்ற இருபத்திமூன்று மணி நேரம் தியானத்தில் இல்லாமல் இருப்பது என்றால் இறுதியில் தியானம் வெல்லும் என்றா நீ நினைக்கிறாய் இந்த ஒரு மணி நேரத்தில் நீ செய்வது என்னவாக இருந்தாலும் இந்த இருபத்தி மூன்று மணி நேரம் அதை துடைத்து எறிந்துவிடும்.

இரண்டாவதாக இருபத்தி மூன்று மணி நேரம் தியானமற்ற நிலையில் உள்ள ஒரு மனிதன் திடீரென ஒரு மணி நேரம் மட்டும் தியானம் செய்வது எப்படி சாத்தியம் அது இயலாதது. அது இருபத்தி மூன்று மணி நேரம் ஆரோக்கியமற்று இருக்கும் ஒருவன் அவன் நினைத்தவுடன் திடீரென ஒரு மணி நேரம் மட்டும் ஆரோக்கியமாக மாறுவதை போன்றது. ஆரோக்கியமாக இருப்பதும் ஆரோக்கியமற்று போவதும் ஏதோ அவன் கைகளில் இருப்பதை போல அவன் நினைத்தவுடன் ஆரோக்கியமாகவும், நோய்வாய் படும் நேரம் இது என நினைத்தவுடன் நோய்வாய் படுவதைப் போலவும் இருக்கிறது இது.
தியானம் உனது உள் ஆரோக்கியம். ஒரு நாளின் இருபத்தி மூன்று மணி நேரம் ஆன்மீக ரீதியாக ஆரோக்கியமற்று, கோபம், வெறுப்பு, பொறாமை, போட்டி, வன்முறை என நிரம்பி வழிந்து கொண்டு திடீரென ஒரு மணி நேரம் மட்டும் புத்தரைப் போல மாறுவது எங்ஙனம் சாத்தியம் -- இது சாத்தியமற்றது.

எல்லா மதங்களும் மனிதனை திசை திருப்புகின்றன, ஏமாற்றுகின்றன.. ஏனெனில் மக்கள் ஆன்மீகரீதியான ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். அவர்களுக்கு ஒரு பொம்மை ஒரு மணி நேரம் இந்த தியானம் செய்வதை வைத்துக் கொள் கொடுக்கப்படுகிறது. ஆனால் இதன் தன்மையை மக்கள் பார்ப்பதில்லை. இது இயற்கையானது அல்ல. நீ இதை இந்த வழியில் செய்ய முடியாது.

நீ ஒன்று நாள் முழுவதும் தியானம் செய் அல்லது நாள் முழுவதும் தியானம் செய்யாமல் இரு. அது உன் முடிவுதான். ஆனால் நீ உன் வாழ்வை இரண்டு விதமாக பிரிக்கமுடியாது. கோவிலில் தியானிப்பது, கடையில் ஆபீஸில் தியானிக்காமல் இருப்பது என இருக்கமுடியாது.

கௌதமபுத்தர் மற்றும் அவர் வழி வந்த அவரைப் போன்ற மக்கள் கடந்த காலங்களில் நீ என்ன செய்தாலும் உன் ஒவ்வொரு செயலிலும் ஊடுருவும் ஒரு தியானத்தை வலியுறுத்தி வந்தனர். அது உன்னை நிழல் போல தொடரும். அது உன் உள்ளுணர்வில் தன்னுணர்வில் ஒரு ஆழ்நீரோட்டம் போல ஓடிக் கொண்டே இருக்கும். நீ கடைவீதியிலோ, கோவிலிலோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உனது உள்ளார்ந்த மௌனம் பாதிக்கப்படாமல், சிதையாமல் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான தியானத்தின் குணம்.

அதனால் முதலில் முயற்சி எதுவும் செய்யாமல் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கோபம் இருந்தால் கவனி. அதை வெளியே தள்ள எந்த முயற்சியும் செய்யாதே, ஒரு பார்வையாளனாக இரு. அது உன் வேலை அல்ல என்பது போல இரு. வெறுப்பு இருக்குமானால் கவனி. இவை யாவும் மிக மெலிதான மேகங்கள் போன்றவை. நீ கவனிப்பவனாகவே இருந்தால் சில விநாடிகளுக்குள் அவை மறைந்து விடும். அவை தானாகவே போய் விடும்.

அவற்றை தள்ளாதே, ஏனெனில் எந்த அளவு அவற்றை வெளியே தள்ள முயற்சிக்கிறாயோ அந்த அளவு நீ அவற்றை உண்மையென கொள்கிறாய். நீ அவற்றை வெளியே தள்ள தள்ள நீ அவற்றின் தளத்திற்கு இறங்கி விடுகிறாய். நீ அவற்றை வெளியே தள்ளும் அளவு அவை அழுத்தமான பழக்கங்களாக மாறும்.

நீ பூச்சிகளை கவனித்திருக்கிறாயா நீ ஒரு பூச்சியை வெளியே தள்ளினால், உடனே அது திரும்பி உன்னை நோக்கியே ஓடி வரும். அது ஒரு மிக வித்தியாதமான செயல். இந்த முழு உலகமும் அதற்கு இருக்க அது வேறு எங்கும் போகாது. அது சவால் விடுகிறது. யார் நீ ஒரு சிறு பூச்சி, கரப்பான் பூச்சி அதை தள்ளி விட்டு விட்டு என்ன நடக்கிறது என்று பார். அது உடனே மிகுந்த வேகத்துடன் திரும்பி வரும்.

உன்னுடைய மனதும் இதையேதான் செய்யும். உண்மையில் கரப்பான்பூச்சியின் மனமும் உன்னுடைய மனமும் வேறு வேறல்ல. அவற்றின் அடிப்படை கட்டமைப்பு ஒன்றுதான். அவற்றின் மனம் ஒரு சிறிய மாடல் போன்றது, சிறிய அளவிலானது. உன்னுடையது கொஞ்சம் பெரியது. ஆனால் உன்னிடமுள்ள அதே திறமைகள் அவற்றிடமும் உள்ளது.
உன்னுடைய மனதிலுள்ள விஷயத்தை எடுத்து வெளியே வீச முயற்சி செய்யும் போது, அது திரும்பவும் உன்னிடமே வேகமாக ஓடி வரும். நீ முயற்சி செய்து பார். குரங்கைப் பற்றி எதுவும் நினைக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டு ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து என்ன நடக்கிறதென்று பார். உலகிலுள்ள அத்தனை குரங்குகளுக்கும் உன் மேல் ஆர்வம் வரும். நான் குரங்குகளைப் பற்றி நினைக்கப் போவதில்லை என்று நீ அவற்றிடம் சொல்ல வேண்டியதில்லை. உன் அறையில் அந்த எண்ணத்துடன் உட்கார்ந்தாலே போதும். அது எல்லா குரங்குகளுக்கும் பரப்பப் பட்டு விடும். நீ எங்கே என்ன செய்து கொண்டிருந்தாலும் அவை அங்கே இருக்கும். ஐந்து நிமிடங்கள் முடிந்து விட்டது. இனி நீ இங்கே இருக்க விரும்பினாலும் சரி, போக விரும்பினாலும் சரி, அது உன்னை பொறுத்தது என்று நீ கூறும் அந்த கணமே அவை யாவும் போய்விடும். ஆனால் நீ போ என்று சொல்லி அவை போவது அவற்றின் பெருமைக்கு இழுக்கு. ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு உணர்ச்சியும் ஒவ்வொரு உணர்வும் அதற்கான தான் என்ற ஆணவத்தைக் கொண்டுள்ளது போலத் தோன்றுகிறது. அதனால் அதை எதிர்த்து போரிடும் மக்கள் யாரும் வெற்றி பெறுவதில்லை. சண்டையிடாதே, வெறுமனே கவனி. அவை அங்கிருப்பதால் எந்த தீங்கும் இல்லை.

நீ உன்னை கோபத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ளாத வரை தனிபட்ட கோபம் மட்டும் எந்த தீமையையும் செய்து விட முடியாது. நீ அதனுடன் அடையாளப்படுத்திக் கொண்டு விட்டால் பின் நீ மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய எதையாவது செய்யக் கூடும். கோபம் மட்டும் எதையும் செய்துவிட முடியாது. அது சக்தியற்றது, அது வெறுமனே ஒரு எண்ணம்தான். அது அங்கேயே இருக்கட்டும், கவனி, மகிழ்வுடன் கவனி. உன்னுடைய பங்களிப்பு இல்லாமல் அதனால் எத்தனை நேரம் இருக்க முடிகிறது என்று பார். ஒரு சில வினாடிகளுக்கு மேல் அதனால் தாக்கு பிடிக்க முடியாது. அது போய் விடும்.

தியானம் ஒரு கவனமாக மலர வேண்டும், பின் ஒரு நாளின் 24 மணி நேரமும் கவனிப்பது சாத்தியமாகும். தூங்கப் போகும் போது கூட கவனி. தூக்கம் உன்னை ஆட் கொள்ளும் கடைசி விநாடி வரை கவனமாகப் பார். இருள் அடர்ந்து கொண்டே போகும், உடல் தளர்வடையும், நீ விழிப்பிலிருந்து தூக்கத்தினுள் விழும் ஒரு கட்டம் வரும் அந்த கணம் வரை பார். பின் காலையில் முதல் விஷயமாக, தூக்கத்திலிருந்து எழுந்து விட்டோம் என நீ உணர்ந்த கணமே கவனிக்க ஆரம்பித்து விடு. பின் விரைவிலேயே தூக்கத்தில் நீ இருக்கும் போது கூட கவனிக்க ஆரம்பித்து விடுவாய்.

கவனித்துப் பாரத்துக் கொண்டிருப்பது என்பது இரவும் பகலும் உன்னுள் எரிந்து கொண்டிருக்கும் ஒரு தீபமாகட்டும்.

இதுதான் உண்மையான ஆணித்தரமான தியானமாகும். மற்ற எல்லாமே தியானம் என்ற பெயரில், நீ ஏதோ ஆன்மீக சம்பந்தமானது செய்து கொண்டிருக்கிறாய் என உன்னை ஏமாற்றும், நீ விளையாட கொடுக்கப்பட்ட ஒரு பொம்மைதான். இந்த உண்மையான தியானத்தில் நீ தவிர்க்க இயலாததையும் தாண்டி வந்து விடுவாய். பொய்யான யாவும் காணாமல் போய்விடும்.

ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள யாவும் பொய்யானது அல்ல. எது பொய்யானது இல்லையோ அது தவிர்க்க இயலாதது. தவிர்க்க இயலாததை நீ என்ன செய்யப் போகிறாய். நீ அதைப் பற்றி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாய். அந்த தவிர்க்க இயலாதது தான் தியானம்.
தவிர்க்க முடியாததை பார்த்துக் கொண்டே இருந்தாயானால் பொய்யானது தானாகவே கரைந்து போய் விடுவதை தெளிவாக காண்பாய். உனது பொய்யான கனவுகளின், ஆசை மேகத்தின் பின்னால் மறைந்து இருந்த உண்மையான விஷயம் இப்போது தெளிவாக, மேலும் அதிக தெளிவுடன் உன் முன் நிற்பதை காண்பாய்.

Source : The great Zen master Ta Hui

ஆணவம் பற்றி ஓஷோ சொல்லுகிறார்!!!!!!!!

ஆணவம் ஒரு செயலுடன், ஒரு குணநலனுடன், தன்னை அடையாள படுத்திக் கொள்கிறது. ஒருவர் கிளார்க், ஒருவர் கமிஷ்னர், ஒருவர் தோட்டக்காரர், ஒருவர் கவர்னர் என இருந்தால் அவை யாவும் செயல்கள். நீங்கள் செய்பவைஅவை, நீங்கள் அல்ல.   யாராவது ஒருவர் நீங்கள் யார் என உங்களிடம் கேட்டால் நீங்கள் உடனே நான் ஒரு என்ஜினீயர் என்று கூறுகிறீர்கள். உங்களது கூற்று மிக தவறானது. நீங்கள் எப்படி என்ஜினீயராக முடியும். அது நீங்கள் செய்வது, நீங்களல்ல. உங்களது செயல்களுடன் மிகவும் ஆழ்ந்த தொடர்பு கொள்ளாதீர்கள். ஏனெனில் அந்த செயல் உங்களை அடிமைபடுத்திக் கொண்டு விடும். நீங்கள் ஒரு டாக்டரின் வேலையையோ, என்ஜினீயரின் வேலையையோ, கவர்னரின் வேலையையோ செய்யலாம். ஆனால் அதனால் அதுதான் நீங்கள் என்றாகிவிடாது. நீங்கள் என்ஜினீயர் வேலையை விட்டுவிட்டு ஒரு பெயிண்டர் ஆகலாம், பெயிண்டர் வேலையை விட்டுவிட்டு ஒரு தெரு கூட்டுபவராக மாறலாம். நீங்கள் அளவற்ற ஆற்றலுடையவர்.   ஒரு குழந்தை பிறக்கும்போது இருக்கும் அளவற்ற ஆற்றல் மெதுமெதுவாக குறைந்து, அது ஒரு குறிப்பிட்ட திசையில் நின்றுவிடுகிறது. ஒரு குழந்தை பிறக்கும்போது பல்வேறு பட்ட ஆற்றலுடன் இருந்தாலும் விரைவில் அது தேர்ந்தெடுக்க துவங்கி விடுகிறது. நாம் அது அதுபோல தேர்ந்தெடுக்க துணை புரிகிறோம். அப்போதுதான் அது புகழடைய முடியும்.   அளப்பரிய ஆற்றலுடன்தான் எல்லோரும் பிறக்கின்றனர், ஆனால் ஒரு சிலர் மட்டுமே அளப்பரிய ஆற்றலுடன் இறக்கின்றனர் என்ற ஒரு சீனப் பழமொழி உண்டு. மனிதன் அளவற்ற ஆற்றலுடன் பிறந்தாலும் இறக்கும்போது குறுகி விடுகிறான். நீ பிறக்கும்போது பிரபஞ்சமாக இருக்கிறாய், இறக்கும்போது ஒரு டாக்டராக, ஒரு விரிவுரையாளராக, ஒரு என்ஜினீயராக இறக்கிறாய். வாழ்வை நீ இழந்து விடுகிறாய். எல்லா சாத்தியங்களும் உள்ள திறந்துள்ள நிலையில், எல்லா ஆற்றல்களும் கிடைக்கக் கூடிய நிலையில் நீ பிறக்கிறாய். ஒரு விரிவுரையாளராகவும், ஒரு விஞ்ஞானியாகவும், ஒரு கவிஞனாகவும், மாறலாம். கோடிக்கணக்கான வாய்ப்புகள் உள்ளன. எல்லா கதவுகளும் திறந்துள்ளன.   பின் மெதுமெதுவாக, ஒரு விரிவுரையாளராக – கணக்கு பேராசிரியராக, ஒரு தேர்ச்சி பெற்ற பேராசிரியராக, அதில் நிபுணத்துவம் பெற்றவராக மாறி விடுகிறாய். நீ குறுகி கொண்டே சென்று விடுகிறாய். நீ குறுகி கொண்டே செல்லும் ஒரு குகை வாயில் போல மாறி விடுகிறாய். ஆகாயத்தை போல பிறந்து ஒரு குகை போல மாறி, பின் அதிலிருந்து நீ வெளியே வருவதேயில்லை.    அந்த குகைதான் ஆணவம். அது செயலுடன் அடையாளப்படுத்திக் கொண்டு விடுகிறது. மனிதன் தன்னை ஒரு கிளார்க்காக நினைத்துக் கொள்வது மிகவும் அவமானமானது. உன்னை நீ ஒரு கிளார்க்காக நினைத்துக் கொள்வது உன்னை நீயே தாழ்த்திக் கொள்வது, உன்னை நீயே அவமானப்படுத்திக் கொள்வது. நீங்கள் தேவதைகள், தேவர்கள். அதுதான் உண்மை. அதைவிட மேலானவர்களாக இருக்கலாம், ஆனால் அதைவிட தாழ்ந்தவர்கள் அல்ல. நீங்கள் தேவதைகள், தேவர்கள் என நான் கூறும்போது உங்களது ஆற்றல் அளப்பரியது, உங்கள் சாத்தியக்கூறு அளவில்லாதது என்பதைத்தான் கூறுகிறேன்.   உங்களது முழு திறமையையும் உங்களால் வெளிக் கொண்டுவர முடியாமல் இருக்கலாம். – யாராலும் முடியாது. ஏனெனில் அது மிகப் பரந்து விரிந்தது. அதனால் யாராலும் அதை செய்ய முடியாது. நீதான் இந்த முழு பிரபஞ்சமும். இந்த காலவரையற்ற நேரத்தினால்கூட நீ உனது முழு திறமையும் வெளிக் கொணர இயலாது. நீ கடவுள் என நான் கூறும்போது நீ தீராத ஆற்றலுடையவன் என்பதை தான் கூறுகிறேன்.   ஆனால் சில திறமைகள் வெளிப்படலாம். நீ ஒரு மொழியை கற்றுக்கொண்டு அதில் பேச்சாளராக மாறலாம். அதில் புலமை பெறலாம். உனக்கு வார்த்தைகளைப்பற்றிய உணர்வு அதிகமாக இருக்குமானால் நீ கவிஞனாகலாம். உனக்கு இசையை உணரக்கூடிய இயல்பு இருக்குமானால், இசையை பிரித்து கேட்க்கூடிய செவிப்புலன் இருந்தால் நீ இசைக் கலைஞனாகலாம்.   ஆனால் இவையெல்லாம் மிகமிகச் சிறிய சாத்தியக்கூறுகள்தான். அதனுடன் நமது வாழ்வு முடிந்துவிட்டது என நினைக்காதே. யாரும் எதனுடனும் நின்று போய் விடுவதில்லை. நீ செய்தது எதுவாக இருந்தாலும் நீ என்ன செய்ய முடியும் என்பதுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது செய்தது ஒன்றுமில்லாமல் போய்விடும். நீ யார் என்பதை பார்க்கும்போது நீ செய்தது மிகவும் சாதாரணமானதாகி விடுகிறது.   ஆணவம் என்பது செயலுடன் அடையாளப்படுத்திக் கொள்வது. ஒரு கவர்னருக்கு தான் கவர்னர் என்ற ஆணவம் இருக்கும். அவர் உயர் நிலையை அடைந்து விட்டதாக அவர் நினைக்கிறார். ஒரு பிரதம மந்திரிக்கு நான் உள்ளது. அவர் உயர்ந்து விட்டதாக அவர் நினைக்கிறார். இதற்கு மேல் என்ன இருக்கிறது என அவர் நினைக்கிறார். இது மடத்தனம். முட்டாள்தனம். வாழ்க்கை மிகப் பெரியது, அதைக் கடக்க வழியேயில்லை. வழி கிடையாது. நீ அதில் நுழைய நுழைய அதிகமான வாய்ப்புகள் தங்களது கதவுகளை திறக்கும். ஆம் – நீ ஒரு மலை உச்சியை அடையும்போது திடீரென மற்றொரு மலை உச்சியை காண்பாய். – முடிவேயில்லை. மனிதன் தனது இருப்பு ஆற்றலோடு இருக்கும் ஒவ்வொரு கணமும் புதிதாய் பிறக்கிறான்.   தான் என்பதன் அழுத்தம் செயலிலும், தன்னுணர்வின் அழுத்தம் இருப்பிலும் இருக்கும். ஜென் இருப்பை சார்ந்தது. நாம் செயலை சார்ந்து இருக்கிறோம். நமது இருப்பு மிகப் பெரியது. நாம் அதை மிகச்சிறிய குகைக்குள் அடைக்க முயற்சிக்கிறோம். அதனால் நாம் துயரம் அடைகிறோம். இதுதான் துயரத்தை உண்டாக்குகிறது, தடையை உருவாக்குகிறது. சுதந்திரம் பறிபோய் விடுகிறது. எல்லா இடத்திலிருந்தும் நீ தடுக்கப்படுவதாக, நிறுத்தப்படுவதாக, இடிக்கப்படுவதாக, சுருக்கப்படுவதாக உணர்கிறாய். எல்லா இடத்திலிருந்தும் தடுத்து நிறுத்தப்படுவதாக உணர்கிறாய். ஆனால் அதற்கு உன்னைத்தவிர வேறு யாரும் காரணமல்ல.   செயல்களை பற்றிய புரிதல் உள்ள ஒரு மனிதன் ஆயிரத்தோரு செயல்களை செய்வான். ஆனால் எப்போதும் அதிலிருந்து வெளியே வந்து விடுவான். அவன் ஆபிஸில் இருக்கும்போது ஒரு கவர்னராக இருக்கலாம், ஆனால் ஆபிஸிலிருந்து வெளி வந்த உடனேயே அவன் கவர்னராக இருக்க மாட்டான். திரும்பவும் ஒரு கடவுள் போல, முழு ஆகாயமாகி விடுவான். வீடு வந்து சேர்ந்தவுடன் தந்தையாகி விடுவான். ஆனால் அதனுடன் ஒன்றி விட மாட்டான். அவன் தனது மனைவியை நேசிப்பான், அவன் ஒரு கணவனாகி விடுவான். ஆனால் அதனுடன் ஒன்றி விட மாட்டான். ஆயிரத்தோரு வேலைகள் செய்தாலும் அவை அனைத்திலிருந்தும் ஒன்றி விடாமல் சுதந்திரமாகவே இருப்பான்.   அவன் ஒரு தந்தையாகவோ, தாயாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ, குழந்தையாகவோ, ஆசிரியராகவோ,கவர்னராகவோ,பிரதம மந்திரியாகவோ, ஜனாதிபதியாகவோ, கூட்டுபவராகவோ, பாடகராகவோ, இன்னும் ஆயிரத்தோரு விஷயங்களில் இருக்கலாம் – ஆனாலும் அவன் அத்துணை விஷயங்களில் இருந்தும் விடுபட்டே இருப்பான். அவன் கடந்து செல்பவனாகவே இருப்பான், அவன் கடந்து நிற்பான. எதுவும் அவனை கட்டுபடுத்த முடியாது. அவன் அத்தனை இடங்களுக்கும் சென்று வருவான். ஆனால் அவன் எந்த இடத்திலும் சிறை பட வில்லை. உண்மையில் எந்த அளவு அவன் அதிக இடங்களுக்கு சென்று வருகிறானோ அந்த அளவு அவன் விடுதலையடைகிறான்.   நீ ஆபிஸில் இருக்கும்போது ஒரு கிளார்க்காகவோ, ஒரு கமிஷ்னராகவோ, ஒரு கவர்னராகவோ இரு.அது மிகவும் சரியானது. ஆனால் நீ ஆபிஸை விட்டு வெளியே வந்தவுடன் கிளார்க்காகவோ, கமிஷ்னராகவோ, கவர்னராகவோ, இருக்காதே.அந்த வேலை முடிந்தது. எதற்கு அதை சுமக்கிறாய். – ஒரு கவர்னர் போல தெருவில் நடக்காதே. நீ அதல்ல. அந்த கவர்னர்தனம் உன் தலைமேல் ஒரு பாரமாக உட்கார்ந்து இருக்கும் . அது உன்னை சந்தோஷமாக இருக்க விடாது. மரத்தின் மீதுள்ள பறவைகள் பாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு கவர்னரால் எப்படி கூட பாட முடியும் – ஒரு கவர்னரால் எப்படி பறவைகள் பாட்டுக்கு ஆட முடியும் – மழை வருகிறது. மயில் ஆடுகிறது எப்படி ஒரு கவர்னரால் கூட்டத்தில் நின்று அதை ரசிக்க முடியும். முடியவே முடியாது. ஒரு கவர்னர் ஒரு கவர்னராகத்தான் இருக்க முடியும்.அவர் வழியில் போய்கொண்டே இருப்பார்.அங்குமிங்கும் பார்க்கவே மாட்டார். மரங்களின் பசுமையை, நிலாவை ரசிக்க மாட்டார். அவர் ஒரு கவர்னராகவே இருப்பார்.   இந்த அடையாளப்படுத்திக் கொள்ளுதல் உன்னை கொன்று விடுகின்றன. நீ உன்னை அடையாளபடுத்திக் கொள்ளும் அளவு நீ உயிரற்று போய் விடுகிறாய். இது நினைவில் கொள்ள வோண்டிய ஒன்று. நீ செய்வது எதனுடனும் உனக்கு சம்பந்தமில்லை. உனது இருப்பிற்கும் உனது வேலைக்கும் தொடர்பில்லை. நீ செய்யும் வேலை எதுவாக இருப்பினும் அது உனது இருப்பை தொடாது.    உன் மனைவியுடன் இல்லாத போது நீ கணவனல்ல. மனைவி இல்லாதபோது நீ எப்படி கணவனாக இருக்க முடியும். இது மடத்தனம். உன் குழந்தையுடன் நீ இல்லாதபோது எப்படி நீ ஒரு தாயாகவோ தந்தையாகவோ இருக்க முடியும் அது இயலாது. நீ கவிதை எழுதாத போது நீ கவிஞனல்ல. நடனமாடாதபோது நீ டான்ஸர் அல்ல. நீ நடனமாடும்போதுதான் நீ டான்ஸர். அந்த நேரத்தில் உனது உடலின் நிலை, நாடித்துடிப்பு நடனமாடுவதற்கு ஏற்றாற் போல ஒரு குறிப்பிட்ட விதமாக இருக்கும். ஆனால் அது அந்த நேரத்திற்கானது மட்டுமே. நடனத்தை நிறுத்தியவுடன் டான்ஸர் மறைந்து விடுவார். நீ அதிலிருந்து வெளியே வந்து விடுவாய். இது போன்று இருந்தால் நீ சுதந்திரமாக இருக்க முடியும். சுமையின்றி இருக்க முடியும், பொங்கி பெருகி வழிந்தோடலாம்.   கணவனாக இரு, ஆனால் எப்போதும் கணவனாக இருக்காதே. சன்னியாசி ஒரு மிகச் சிறந்த நடிகனாக இருக்க வேண்டும் என நான் கூறும்போது இதைதான் குறிப்பிடுகிறேன். தாயாக இரு, ஆனால் எப்போதும் தாயாகவே இருக்காதே. அந்த குணநலனுடன் உன்னை அடையாளப்படுத்திக் கொண்டு விடாதே. அது ஒரு செயல், அதை எவ்வளவு நிறைவாக செய்ய முடியுமோ, எவ்வளவு ஆணித்தரமாக செய்ய முடியுமோ, எவ்வளவு அன்பாக செய்ய முடியுமோ, எவ்வளவு அனுபவித்து செய்ய முடியுமோ, அப்படி செய். ஆழமாக செய். அது ஒரு கலையாகட்டும். ஒரு அழகான மனைவியாக, அன்பான அம்மாவாக, சிறந்த கணவனாக, அழகான காதலனாக இரு. ஆனால் அதனுடன் ஒன்றாகி விடாதே. ஒன்றி விட்ட கணமே நீ பிரச்னையில் மாட்டிக் கொண்டாய்.   செயல்கள் உன்னுள் நிலைபெற விட்டுவிடாதே. அந்த வேஷமாகவே நீ மாறி விடாதே. ஒரு தேர்ந்த நடிகனாக இரு. நடிகன் பல பாத்திரங்களில் நடிக்கலாம். ஒரு தாயாக, தந்தையாக, கொலைகாரனாகக்கூட, மிக முக்கியமான பாத்திரத்தில், நகைசுவையாக, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவன் எந்த பாத்திரத்தில் நடிக்கிறான் என்பது முக்கியமில்லை. அதில் சிறப்பாக நடிக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற வேண்டும். அவனிடம் உள்ள திறமைகள் அனைத்தையும் அதில் கொண்டு வர வேண்டும். அவனுக்கு கொலைகாரன் வேஷம் கொடுத்தால் உலகிலேயே வல்லமை வாய்ந்த கொலைகாரனாக இருப்பான். அவனுக்கு சாது வேஷம் கொடுத்தால் மிகச் சிறப்பான சாதுவாக அவன் இருப்பான். அவனால் மாற முடியும். ஒரு வேஷத்தில் சாதுவாக இருப்பான், மற்றொரு வேஷத்தில் கொலைகாரனாக இருப்பான். ஆனால் இரண்டிலும் அவனது வேஷப் பொருத்தம் கனகச்சிதமாக இருக்கும்.   இந்த இலகு தன்மை வாழ்விலும் வேண்டும். வாழ்க்கையே ஒரு நாடகம்தான். ஆனால் மேடைதான் மிகப் பெரியது. இந்த முழு உலகமும் மேடையாக இருக்கிறது. உலகத்திலுள்ளவர்கள் அனைவரும் நடிகர்கள்தான். முழுமை எங்கே போகிறது, அதன் முடிவு என்ன என்பது யாருக்கும் தெரியாது. கதை கொடுக்கப்பட வில்லை. அது உருவாக்கப்பட வேண்டும். கணத்துக்கு கணம் அது உண்டாகும்.   ஜென்னில் ஒருவகையான நாடகம் உண்டு. அதன் பெயர் நோ நாடகம். கதை கிடையாது, நடிகர்கள் மட்டுமே உண்டு. திரை உயர்த்தப்பட்ட பின் அவர்களே கதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். மக்கள் இருக்கும்போது ஏதாவது நடந்துதானே தீரும். அவர்கள் வெறுமனே உட்கார்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும்கூட ஏதோ நடக்கும். ஒத்திகை இன்றி, தயாரிப்பு இன்றி ஏதோ ஒன்று நடக்கும்.   வாழ்க்கையும் அதே போலத்தான் – அது கணத்துக்கு கணம் உருவெடுக்கும். கடந்த காலத்திலிருந்து வெளியே வந்துவிடு. எந்த குறுக்கீடும் இல்லாமல், எந்த தடையும் செய்யாமல் நடப்பதை அப்படியே அனுமதித்து விடு. எவ்வளவு முழுமையாக இருக்கமுடியுமோ அவ்வளவு முழுமையாக அதனுள் இரு. உனது சுதந்திரம் அதிகமாகும்.   ZEN: The Path of Paradoxvol.1 Ch. #5

போதிதர்மனின் சூத்திரம்-ஓஷோ விளக்கம்


போதி தர்மனின் சூத்திரங்களிலிருந்து ஒன்று;

Detachment is Enlightenment because it negates appearances.
துறவு என்பது ஞானமடைதலுக்கான வழி. இது தோற்றங்களிலிருந்து விடுபடவைக்கிறது. 

 
இந்த வழியின் சாராம்சம் ஒட்டாதிருப்பது. அதாவது துறவு.

போதி தர்மன் சொன்னான் ; புத்தன் சிரிக்காமலேயே சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று. யாருமே இதுவரை புத்தன் சிரித்துக் கொண்டிருப்பதான சிலையை பார்த்ததில்லை. அவரின் இருப்பே சிரிப்புதான்.

சிரிப்பின் உளவியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் சிரிப்புக்கும் புத்தனின் சிரிப்புக்கும் வேறுபாடு உண்டு. உங்கள் வாழ்வு எந்த நேரத்திலும் ஏதாவது நிகழ்வுகளின் பாதிப்பால் அலைக்கழிக்கப்பட்டு துன்பம் நேரலாம் என்ற மனநிலையில் ஏதாவது அபத்தமாகநடந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிரித்துவிடுகிறீர்கள். அந்த அபத்தம் உங்களுக்கு தப்பிக்க உதவுகிறது துன்பத்தை மறக்க. டென்ஷன் மறைகிறது. சிரிப்பு ஆரோக்கியமானது. நிமிடத்தில் உடலை வேறு நிலைக்கு எடுத்து சென்றுவிடுகிறது. ஆனால் அதுவும் நிமிடத்துக்குத்தான். பின் மறுபடி உன் இருட்டுக் குகைக்குள் போய்விடுகிறாய்.

உண்மைதான் உன் கனவு எதனால் ஆனதோ அதனால் ஆனதே இந்த வாழ்வும். ஆனால் கனவை நீ ஒரு மாயை என்கிறாய்...நனவை 'மிகுந்த சிரமப்பட்டு' தலையில் வைத்துக் கொண்டாடுகிறாய் . கனவுக்கும் நீ நனவு என்று சொல்வதற்கும் வித்தியாசமே இல்லை. இந்த உலகில் வாழ். ஆனால் இந்த உலகம் உன்னுள் இருக்கக் கூடாது. நினைவிருக்கட்டும். இது எல்லாமே அழகான கனவுதான். இந்த வாழ்வு என்பது மாறிக்கொண்டும் மறைந்துகொண்டும் தோன்றிக் கொண்டும் இருக்கிறது. கனவும் அப்படித்தானே!

அதனால் இந்த நனவுடன் ஒட்டிக் கொண்டிராதே! எப்படி தூங்கி எழுந்ததும் கனவுடன் ஒட்டிக் கொள்ளாமல் விடுபட்டுவிடுகிறாயோ அப்படி. ஒட்டிக் கொண்டிருப்பது என்பது விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது. அப்படி ஒட்டுதல் இல்லாமல் இருக்கையில் அபரிமிதமான ஆற்றல்விடுபடுகிறது. இவைகளுடன் ஒட்டிக் கொண்டுள்ளதால் சிறைபட்டுள்ள அந்த ஆற்றல் ஒரு புதிய உதயத்தை, புதிய இருப்பை, ஒளியை, புரிதலை உனக்குள் கொண்டுவரும். பிறகு துன்பம் என்பதே இல்லை.
இது நடக்கையில் நீ மிகவும் அமைதியான, இதுவரை அனுபவித்திராத அமைதியுடன் இருப்பாய். உன் இருப்பிலேயே சிரிப்பு வெடித்துக் கொண்டிருக்கும். அதைத்தான் போதிதர்மன் சொன்னான். புத்தன் சிரிக்கிறான் ஆனால் சிரிக்காமலேயே.

அவனிடம் டென்ஷன் இல்லை அதனால் சிரிப்பதில்லை. ஆனால் முழுவாழ்வின் முழுஅபத்தமும் புரியும் அதானால் சிரிக்கவும் செய்கிறான்.

டென்ஷன் என்றால் ஆற்றல் அடக்கப்படுகிறது என்று அர்த்தம். அது ஒரே இடத்தில் வேறு எங்கும் நகர்ந்து செல்ல முடியாமல் தேங்கி திணற ஆரம்பிக்கிறது என்று பொருள். புத்தன் ஆற்றலை அடக்குவதில்லை. டென்ஷன் இல்லாததால் சிரிப்பதும் இல்லை. அடக்கப்பட்டதே வெடித்துக் கொண்டு கிளம்பும் வெடிச்சிரிப்பாகவும். புத்தனுக்கு ஒவ்வொரு செல்லிலும் சிரிப்பு பொங்குவதால் அவன் ஆற்றலை அடக்கி பின்பு விடுவிப்பது என்பது இல்லை. உதட்டில் வருகிற சிரிப்புமட்டுமல்ல அவனுடையது. அவனின் இருப்பே சிரிப்புதான். இந்த விழிப்புணர்வுதான் நீயும் நானும் காண முடியாததை இந்த உலகில் அவனால் காண முடிகிறது.


ஒரு பெண் திடீரென்று சொன்னாள்தன் பக்கத்தில் படுக்கையில் படுத்திருந்தவனிடம்…’சீக்கிரம் எழுந்திரு! என் புருஷன் வந்திட்டான். இது என் புருஷனோட கார் சத்தம்தான். அது ரொம்ப தூரத்திலேர்ந்து வரும்போதே சத்தம் போடும் என்றாள். இப்பதான் பிரேக் போட்டிருக்கான்.
    கூட இருந்தவன் அலறி எழுந்து இப்ப நான் எங்கே போக?’ என்றான்.

    ‘
ம்ஜன்னல்லேர்ந்து குதி!என்றாள். நல்லவேளையாக அது ஒன்றும் அறுபது மாடி கட்டிடம் இல்லை. கிரௌண்ட் ஃப்ளோர் தான். வெளியே குதித்தான் நிர்வாணமாக! அப்போது மழை வேறு தூறிக் கொண்டிருந்தது.

   
அதிர்ஷ்டவசமாக, அந்த அதிகாலை வேளையில் ஒரு கூட்டம் ஜாகிங்போய்க் கொண்டிருந்தது. அவன் அவர்களோடு சேர்ந்து கொண்டான். நிர்வாணமாக அங்கேயே நின்றால் மாட்டிக் கொண்டுவிடுவோம் என்று அவர்களோடு ஓட ஆரம்பித்தான். அது இருட்டாக இருந்ததால் கிட்டத்தட்ட இரண்டு டஜன் ஆட்கள் ஓடிக்கொண்டிருந்தபடியால் அவன் எப்படியோ சமாளித்துவிட்டான்.

   
பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்தவன் இவன் நிர்வாணமாக வருவதைப் பார்த்துவிட்டுஆவலை அடக்கமுடியாமல்

    ’
பாஸ்! நீங்க எப்போதுமே டிரஸ் இல்லாமதான் ஓடுவீங்களா?’ என்று கேட்டான்

    ‘
ஆமா! ஆமா!அப்படித்தான்

   
கொஞ்சம் கொஞ்சமாக விடிந்துகொண்டிருந்தது. வெளிச்சம் வர வர அந்த ஓட்டக்காரன் கண்டு கொண்டான் இந்த நிர்வாண மனிதன் வேறு யாருமல்லஅந்த ஊர் சர்ச்சின் ஃபாதர்தான் என்று!

   
சிறிது வெளிச்சத்தில் இன்னொரு விஷயத்தையும் கண்டான். ஓடிக்கொண்டிருக்கிற ஃபாதர் ஆணுறை அணிந்திருந்தார் என்பதுதான் அது.

   
ஓடிக்கொண்டே கேட்டான்….'ஃபாதர்! நீங்க எப்போதும் ஓடும்போது காண்டம் போட்டுக்கிட்டுதான் ஓடுவீங்களா?’

   
ஃபாதர் எரிச்சலோடு சொன்னார் ; 'எப்போதும் இல்லமழை பெய்யும் போது மட்டும்' என்றார்.
வாழ்வு அபத்தமானது. இருபத்துநாலு மணிநேரமும் நகைச்சுவையானவை அதன் அபத்தங்கள். கண்டு கொள்ளத்தான் கண்கள் வேண்டும். புத்தன் தனியாக உதடுகளால் சிரிக்க வேண்டிய அவசியமில்லை. தன் அமைதியில் சிரித்துக்கொண்டேதான் இருக்கிறார். அதுதான் புத்தனின் சிரிக்காமல் சிரித்தல்.

நீ விடுதலை அடையும்போது மக்கள் எப்படி சின்ன சின்ன முடிச்சுகளில் சிக்கி தவிக்கிறார்கள் என்ற அபத்தத்தை கண்டு சிரிப்புதான் வரும். நீயும் இதே மாதிரிதான் இருந்தாய் என்றாலும். சின்ன சின்ன முடிச்சுகள்தான் அவைகள். போதி தர்மன் சொல்வது தோற்றங்களிலிருந்து விடுதலை அடைவதே லட்சியம்.காண்கிற தோற்றங்களிலிருந்து விடுதலை.

நீங்கள் காண்கிற உலகம் தோற்றம் மட்டும். ஆழமான இந்த தோற்றத்திற்குப் பின்பு இருப்பது உண்மை. தோற்றங்களிலிருந்து விடுபட்டால் அதை உணரலாம். உன் எல்லா உறவுகளும் பற்றுகளும் அதை தடுக்கின்றன. வெகு அபூர்வமாகவே நாம் வளர்கிறோம். மற்றபடி சிறுவயதில் பொம்மை இப்போது வேறு ஏதோ ஒன்று. பொம்மை இடம் மாறி இருக்கிறது அவ்வளவே!

போதிதர்மனின் வாக்கு ; ஒட்டுதல் இல்லாமல் இருப்பது ஞானமடைதல். ஏனெனில் அது தோற்றங்களிலிருந்து விடுதலைஅடையச் செய்கிறது.

வியாழன், 19 ஏப்ரல், 2012

சில ரகசியங்களை சொல்லிக்கொடு.”


முல்லா நஸ்ருதீன் பெண்கள் மீது விருப்பம் கொண்டவர் என்று நான் கெள்விப்பட்டிருக்கிறேன்,ஆனால் அவருக்கு பெண்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமே கிடையாது. எவரும் அவரை விரும்ப மாட்டார்கள். ஒரு பெண்னை அவர் முதன்முறையாக சந்திக்க சென்றார்.அதற்க்கு முன் அவர் தனது நண்பனிடம் கேட்டார்; “ உன்னுடைய ரகசியம் என்ன ? நீ பெண்களுடன் நன்றாக பழகுகிறாயே ? நீ எளிதில் அவர்களை மயக்கிவிடுகிறாய். ஆனால் நான் தோல்வி காண்கிறேன். எனவே எனக்கு எதாவது வழிவகை சொல்லிக்கொடு. நான் முதன்முறையாக ஒரு பெண்னைப் பார்க்க போகிறேன், எனக்குச் சில ரகசியங்களை சொல்லிக்கொடு.

நண்பன் கூறினான் ; “ மூன்று விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். எப்போது, உணவைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி, தத்துவத்தைப்பற்றிப் பேசு”.

ஏன் உண்வைப்பற்றி பேச வேண்டும்என்று கேட்டார் முல்லா. நண்பன் கூறினான்; “உண்வைப் பற்றி பேசுவதை பெண் விரும்புவதால் நான் அதைப் பற்றிப் பேசுகிறேன் . ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் உணவில் விருப்பம் உண்டு. அவள் குழந்தைக்கு உண்வாகிறாள், மனித சமுதாயம் முழுமைக்கும் அவள் உணவாக இருக்கிறாள். எனவே அடிப்படையில் அவள் உணவில் விருப்பம் கொண்டிருக்கிறாள்”.

சரி குடும்பத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும் ?” என்று முல்லா கேட்டார். அவளுடைய குடும்பத்தைப் பற்றி நீ பேசினால் உன்னுடைய உள்நோக்கங்களை நேர்மையானவையாக காட்டும் என்று நண்பன் பதில் கூறினான்.

தத்துவத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும் ? “ என்று முல்லா அடுத்த கேள்வியை கேட்டான். அதற்க்கு அந்த நண்பன் பதில் தருகையில் , “ தத்துவத்தைப்பற்றி பேசினால் அந்த பெண் தன்னைப் புத்திசாலியாக கருதிக் கொள்கிறாள் என்றான்

உடனே முல்லா விரைந்து சென்றான். அந்த பெண்னைக் கண்டதும் ஹல்லோ , உணக்கு நூடுல்ஸ்” ( ஒரு வகை உணவு என்றும் முட்டாள் என்றும் பொருள் உண்டு) பிடிக்குமா ? என்று கேட்டான். அதை கேட்டு அவள் அதிர்ச்சி அடைந்தாள், “ இல்லை என்று பதில் கூறினாள் . முல்லா இரண்டாவது கேள்வியைக் கேட்டான் , “ உணக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்களா ? “
இல்லைஎன்றாள். முல்லா ஒரு நிமிடம் திகைத்தான் . தத்துவத்தைப்பற்றி எப்படி ஆரம்பிப்பது? “ என்று யோசித்தான். ஒரு வினாடி கழித்து கேட்டான், “ உணக்கு ஒரு சகோதரன் இருந்தால் அவனுக்கு நூடுல்ஸ்பிடிக்குமா ? “

ஓஷோ: தத்துவம் என்பது அநேகமாக முட்டாள்தனமானதுதான்