my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

செவ்வாய், 29 ஜனவரி, 2013

ஓஷோவின் நகைச்சுவை




ஒரு நாள் ஒரு இந்தியன், ஒரு ஆப்பிரிக்கன், ஒரு அமெரிக்கன் மூன்று பேரும் ஒரு பேருந்தில் ஏறினார்கள்.

பேருந்து புறப்பட்டதும் ஒரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..

அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது....அவனும் அதைத் தட்டி விட 

அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது...

அதை அவன் அப்படியே பிடித்து சாப்பிட்டு விட்டான்....சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ உள்ளே 

வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..

அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது..

அவனும் தட்டி விட அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது..

இந்த முறையும் அவன் அதை பிடித்து அப்படியே சாப்பிட்டு விட்டான்.

சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..

அதை அவன் தட்டி விட ,அது இந்தியன் மேல் வந்து அமர்ந்தது...

இந்த முறை அந்த ஈயை அவன் கையில் பிடித்து வைத்துக் கொண்டு ஆப்பிரிக்கனிடம் சென்று

"சார், சுவையான ஈ இருக்கு,,,வாங்கறீங்களா? பத்து ரூபாய் தான்" என்றான்.. 


ஓஷோ: இந்தியா எப்போதோ தன் ஆன்மீக வாழ்கையை இழந்து பணத்தின் மேல் குறியாகி விட்டது....



வெள்ளி, 25 ஜனவரி, 2013

பைத்தியக்காரன்(கலீல் ஜிப்ரான்)


நான் எப்படி பைத்தியமானேன் என்று கேட்கிறீர்களா?

பல கடவுள்கள் பிறப்பதற்கு, நீண்ட நாட்களுக்கு முன், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து ஒருநாள் எழுந்தபோது, என்னுடைய முகமூடிகள் திருட்டுப் போயிருந்ததைக் கண்டேன். என்னுடைய ஏழு பிறப்புகளில் என்னை அலங்கரித்த ஏழு முகமூடிகள் அவை.

‘திருடர்கள், சபிக்கப்பட்ட திருடர்கள்’ என்று கத்திக்கொண்டே தெருவில் இறங்கி ஓடினேன்.

ஆண்களும், பெண்களும் என்னைக் கண்டு சிரித்தனர். சிலர் என்னைக் கண்டு பயந்து வீட்டுக்குள் ஓடினர்.

நான் கடைவீதியை அடைந்தபோது, கூரையில் நின்று கொண்டிருந்த இளைஞன் ஒருவன், ‘இதோ ஒரு பைத்தியக்காரன்’ என்று என்னைப் பார்த்துக் கத்தினான். அவன் முகத்தைப் பார்க்க நிமிர்ந்தபோது, முகமூடியற்ற என் முகத்தை சூரியன், முதல் முறையாக முத்தமிட்டது. என் ஆன்மா ஆழமான காதலில் விழுந்தது. அதுமுதல் எனக்கு முகமூடிகள் தேவைப்படவில்லை. ஆழ்ந்த அமைதியிலிருந்தபடி, ‘திருடர்கள், ஆசிர்வதிக்கப்பட்ட திருடர்கள்’ என்று அழுதேன்.

இப்படித்தான் நான் பைத்தியமானேன்.

என்னுடைய பைத்தியக்காரத்தனத்தில், சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் கண்டுகொண்டேன்; தனிமையின் சுதந்திரம் மற்றும் புரிந்துகொள்ளப் படுவதிலிருந்து பாதுகாப்பு; நம்மைப் புரிந்து கொள்வதன்மூலம், நம்மில் எதையோ அடிமையாக்குபவர்களிடம் இருந்து.

என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் கர்வப்படாமல் இருக்கட்டும். சிறையிலிருக்கும் திருடன்கூட, இன்னொரு திருடனிடமிருந்து பாதுகாப்பாகவே இருக்கிறான்.
*
சூரிய உதயத்தின்போது ஒரு நரி தன் நிழலைப் பார்த்தபின் சொல்லிக் கொண்டது, ‘இன்று உணவாக ஒரு ஒட்டகத்தை சாப்பிடுவேன்’.

பிறகு, பகல் முழுவதும் ஒட்டகத்தைத் தேடி அலைந்தது.

மதியத்தில் தன் நிழலைப் பார்த்தபின் சொல்லிக்கொண்டது, ‘ஒரு எலியே போதும்’.
*

நேற்று இரவு ஒரு புதிய சந்தோஷத்தைக் கண்டுபிடித்தேன். அதை முயன்றுகொண்டிருந்தபோது, ஒரு தேவனும், அசுரனும் வேகமாக வந்தார்கள். என் வீட்டுக் கதவருகே சந்தித்துக் கொண்ட அவர்கள், என்னுடைய சந்தோஷத்தைக் கண்டு, சண்டையிடத் தொடங்கினார்கள்; ‘அது மிகவும் புனிதமானது’, ‘இல்லை அது பாவச் செயல்’ என்று.

சனி, 5 ஜனவரி, 2013

ஓஷோவின் கதைகள்

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான், அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான், உட்னே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான் அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “

பிச்சைக்காரன் “ அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.
வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்

அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டான் .

இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.

அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன் , மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “ என்றவாறே நடக்கலானான்.


ஓஷோ : இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய சந்தோசங்களுக்காக விலைமதிப்பற்ற தியானம் என்பதனை இழந்துவிடுகிறோம்