my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

சனி, 5 ஜனவரி, 2013

ஓஷோவின் கதைகள்

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான், அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான், உட்னே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான் அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “

பிச்சைக்காரன் “ அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.
வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்

அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டான் .

இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.

அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன் , மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “ என்றவாறே நடக்கலானான்.


ஓஷோ : இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய சந்தோசங்களுக்காக விலைமதிப்பற்ற தியானம் என்பதனை இழந்துவிடுகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக