my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

புதன், 31 ஆகஸ்ட், 2011

நீங்கள் கிறித்துவ மதத்தை மட்டும் குறிப்பாக தாக்குகிறீர்கள் ஏன் ? -Osho


ஒரு கேள்வி ஓராயிரம் கேள்விகளை உண்டுபண்ணும் .அது உண்மைதான் .இப்போது நம்மால் கிறிஸ்துவையும் ,கிறிஸ்துவ மதத்தையும் தாண்டி இன்னும் செல்ல முடியவில்லை .
ஆமாம் ,”நீங்கள் சொல்லுவது உண்மைதான் .இந்து மதத்தை தோண்ட தோண்ட ……!எதுவோ சொல்லுவார்கள் . அதற்க்கு இந்த புத்தகம் போதாது.இப்படி பல மதங்களில்
பல மூட நம்பிக்கைகள் ஊடுரிவி தான் இருக்கும் .நம்மவர்கள் கடவுளை நம்புங்கள் என்றுதான் அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள் தவிர கடவுளை அடையுங்கள்” “கடவுளை அறிந்துக் கொள்ளுங்கள் ” “கடவுளை உணர்ந்துக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை .நீங்கள் ஒன்றை அறிந்திக் கொள்ளாத பொழுது ,உணர்த்துக் கொள்ளாத பொழுது தான் நம்புதல் என்று வருகிறது .நம்புதலுக்கு அடித்தளம் மூடக்கொள்கை ,மற்றும் பொய் ,பயம் ,ஆசை இவை தான் .
அதை போலத்தான் ஜீசஸ் யை நம்புங்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்களேத் தவிர ஜீசஸ்யை உண்மையாக புரிந்துக் கொண்டு ,உணர்ந்துக் கொண்டு நம்புங்கள் என்று எந்த பாதிரிமாரும் பிரச்சாரம் செய்வது இல்லை .ஏன் என்றால் அவர்களே ஜீசஸ் யை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை .இதனால் , ” என்னை சாப்பிடுங்கள் ,என்னை குடியுங்கள் என்று ஜீசஸ் சொன்னதற்க்காக இன்றைக்கு ஆப்பத்தையும் ,ஓய்ன் என்ற மதுபானத்தையும் சாப்பிட்டுக் கொண்டு ஆனந்தமாக ஆடுகிறார்கள் .ஆகவே நம்புதல் என்பது ஒருவர் புரிந்துக் கொண்டதால் தானே வரவேண்டும் .தவிர வெறும் நம்பிக்கை மூடநம்பிக்கைகளை மட்டும் வளர்க்கும் .
கிறித்தவ மதத்தை மட்டும் ஏன் குறிப்பாக தாக்குகிறீர்கள் என்று கேட்கிறீர்கள் ,அதற்க்கு முக்கிய காரணம் ,நான் அவர்கள் மேல் வைத்திருக்கும் உண்மையான அன்புதான் .அவர் அன்பே கடவுள் என்றார் . அந்த அன்பு வடிவத்தையே நான் கடவுளாக காணுகிறேன் .அந்த யதார்த்தமான ,உண்மையான தைரியமான தன்னை யார் என்று உணர்த்துக் கொண்ட ஒரு குருவை .சிலுவையில் அறைந்து ,சிலையாக வடித்து அவர்பெயரில் ஒரு மதத்தை உண்டாக்கிக் கொண்டு பணத்தை வாரி இறைத்து ,கிறித்துவத்தையும் ,கிறித்துவ மதத்தையும் சரியாக புரிந்துக் கொள்ளாமலேயே ,இந்த உலகத்தில் பரப்புவது எந்த விதத்தில் நியாயம் ?
ஒன்று மட்டும் கூறிக் கொள்ளுகிறேன் .நான் எந்த மதத்தையும் சேராதவன் . எனக்கு என்று எந்த மதமும் கிடையாது , மதம் என்ற குறுகிய எல்லைக்குள் ,என்னை அடைத்துக் கொள்ள நான் ஒரு நாளும் விரும்ப மாடேன் .என்னுடைய மதம் மதமற்ற மதம்( Religion without any religion ) நான் எல்லா மதத்துக்கும் உடையவன் .நான் ஒரு உண்மையான கிருத்துவனை விட ,இந்துவை விட ,முகமதியரை விட ,ஜைனரை விட எந்தவிதத்திலும் குறைத்தவன் இல்லை .இதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள் .ஆகவே எந்த ஒரு உண்மையான ,கிருஸ்துவை உண்மையாக புரிந்துக்கொண்ட யாருடைய மனத்தையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல .குறிக்கோளும் இல்லை .தேவையும் இல்லை .அப்படி அவர்களுடைய மனதை புண்படுத்தினால் ,என்னுடைய மனதையே ,நானே புண்படுத்தி கொள்வதற்கு சமம் .என்னை சரியாக புரிந்துக்கொள்ளுங்கள் .

தியானம் என்றால் என்ன ? , Meditation For Beginners


தியானம் ஒரு கிளர்சியுட்டும் அனுபவம் .அதுவரை அறிந்திராத ஒன்று குறித்த அனுபவம் .மனித மனம் மேற் கொள்ளும் மகத்தான அனுபவம் .தியானத்தில் அப்படியே இருக்கிறிர்கள் எதையும் செய்யாமல் செயலில்லை ,சிந்தனை இல்லை ,உணர்ச்சி இல்லை ,அது ஒரு முழுமையான உவகை நிலை .நீங்கள் எதையும் செய்யாமல் இருக்கும் போது இந்த உவகை எங்கே இருந்து வந்தது ?அது எங்கும் இன்றி வரலாம் ,எங்கு இருந்தும் வரலாம் .அது வினை முதலற்றது .மகிழ்ச்சியால் நிரம்பி இருப்பது .
தியானத்தின் எந்த நிலையிலும் நீங்கள் உடல்சார்ந்த விதத்தில்லோ மனம் சார்ந்த விதத்தில்லோ எதையும் செய்வது இல்லை .எவ்வித நிகழ்வும் இன்றி அனைத்து செய்கையும் நின்றுவிட நீங்கள் சும்மா இருக்கிறீர்கள்.அது நீங்கள் செய்யக் கூடியதும் அல்ல .பயிற்சி பெறக் கூடியதும் அல்ல .அதன் இயல்பை அறிந்துக் கொள்ளுகிறிர்கள்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் எல்லா வேலைகளையும் விட்டு விட்டு இருக்கிற படியே  இருங்கள் ஆழ்ந்து சிந்திப்பதும் ,ஒரு முனைப் படுத்துவதும் ,எண்ணமிடுவதும் ஒரு வேலையே ! நீங்கள் எதையும் செய்யாமல் முற்றிலும் ஓய்வாக ஒரே ஒரு கணம் உங்கள் மையத்தில் இருக்க முடிந்தால் அது  தியானம் .அந்தத் திறமையை நீங்கள் பெற்ற பிறகு ,உங்களுக்கு விருப்பம் உள்ள வரை அதே நிலையில் தங்கி இருக்க முடியும் .நிறைவாக இருபத்தி நான்கு மணி நேரமமும் அதே நிலையில் உங்களால் இருக்க முடியும்.
உங்களுடைய அமைதி குலையாமல் இருக்க முடிகிற போது, நீங்கள் நிதானமாய் செயல்படத் தொடங்கலாம் .உங்கள் இருப்பு நிலைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத வகைகள் கவனமாக இருங்கள் ,அதுவே தியானத்தின் இரண்டாவது பகுதி .முதலில் ஓய்வாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் ,அடுத்து தரையை சுத்தம் செய்வது ,நிரில் குளிப்பது போன்ற சின்ன சின்ன செயல்களை உணர்வுடன் கவனமாக செய்யுங்கள். 
பிறகு சிக்கலான செயல்களை உங்களால் எளிதாக செய்ய இயலும் . உதரணமாக நான் உங்களுடன் பேசிக்கொண்டு இருந்தாலும் என்னுடைய தியான நிலைக்கு இடையுறு ஏற்பட்டு விடவில்லை .நான் பேசிக்கொண்டே இருந்தாலும் என்னுடைய மையத்தில்(center) எந்தஒரு அலையும் எழும்பாது அது முழுவதும் நிசப்தமாய் இருக்கும் .
ஆகவே தியானம் செயலுக்கு மாறானது அல்ல .அது வாழ்வில் இருந்து விலகி செல்வதும் ஆகாது. ஒரு புதிய வாழ்க்கைமுறையை அது உங்களுக்குப் போதிக்கிறது. நீங்கள் சுழல்காற்றின் மையமாக இருக்கிறிகள் .
தியானத்தின் முழுமையான ரகசியமே நீங்கள் எல்லாவற்றையும் சாட்சியாக பார்பதுதான் .செய்கை தன்னுடைய தளத்தில் தொடர்கிறது ,எவ்வித பிரச்னையும் இல்லாமல் மரத்தை வெட்டுவது ,கிணற்றில் நீர் இறைப்பது என்று தொடர்கிறது ,நீங்கள் சிறியதும் பெரியதுமாய் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் .ஆனால் மையத்தில் இருந்து மட்டும் வழி தவறிவிட வேண்டாம் . உங்கள் விழிப்புணர்வும் ,கவனித்தலும் (விருப்பு ,வெறுபற்ற) சிதைந்து விடாமல் அப்படியே இருக்க வேண்டும் .
        osho,Meditation: The first and last freedom, தமிழில் -தியானம் , 60 தியானமுறைகள் ,விளக்கங்கள்