my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

உங்கள் வாழ்க்கை யாத்திரையை காலையில் இருந்து தொடங்குவதாக மாற்றுங்கள்


வாழ்க்கை ஒரு விளையாட்டு அதில் நீங்கள் விளையாட்டாக ஈடுபடுங்கள்.வாழ்கையை விளையாட்டு கண்கொண்டு பாருங்கள் .இறுக்கமற்ற நிலையில் விளையாட்டுத் தனத்திற்கும் ,இறுக்கமான நிலைக்கும் உள்ள வேறுபாடு மிகபெரியது .நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு செல்ல வீதியில் நடக்கும் போது உங்கள் மனம் முற்றிலும் வேறுபட்டு இருக்கும் .இறுக்கமாக பேராசையோடு ,கவலையோடு முரண்பட்டு இருக்கும் .அதே பாதையில் நீங்கள் காலையில் கடந்து செல்லும் போது அதே வீதிதான் ,அதே மரம் தான் ,பறவைகளும் அதே தான் ஆகாயமும் அதே தான் ,அதில் செல்லும் மக்களும் அதே தான் .
உங்களிடம் எந்த இறுக்கமும் கிடையாது .எந்த முரண்பாடும் கிடையாது .ஏன் என்றால் நீங்கள் எந்த குறிபிட்ட இடத்திற்கும் செல்லவில்லை .வெறுமனே சாலையில் மகிழ்ச்சியாக நடக்கிறீர்கள் அவ்வளவுதான் .
அமைதியாக இருங்கள் :
இறுக்கமற்று விளையாட்டாக எதிலும் இடுபடுங்கள் பிறகு நீங்கள் செய்வது எல்லாம் தியானம் தான் விளையாட்டாக செய்யும் எதுவும் தியானதன்மை உடையதுதான் .நீங்கள் இறுக்கமற்று ,மகிழ்ச்சியோடு இருக்கும் பொழுது உங்களிடம் இயற்கையாக எழும் ஒரு ஆனந்தம்தான் தியானம் .எதையும் நீங்கள் தியானமாக்கலாம் .நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இறுக்கமற்ற விளையாட்டு தனம்தான் .அப்பொழுது அது உங்களிடம் எந்த விதமான இறுக்கநிலையையும் உண்டு பண்ணாது. ஆகவே எப்படி பரபரப்பு இல்லாமல் இருப்பது என்று கற்றுக்கொள்ளுங்கள் .காலையில் நடக்கும் வீதி இமயமலையில் உள்ள அமைதியான குகைக்கு சமம் .
வெளியே தள்ளுங்கள் :
பயம் ,பரபரப்பு ,இறுக்கம் போன்ற உணர்ச்சிகள் ஆரம்பிக்கும் பொழுதே நீங்கள் ஆழமான மூச்சை வெளியே விட்டு அவைகளை வெளியே தள்ளுங்கள் .காற்றில் அந்த பயத்தை ,இறுக்கத்தை வெளியே முழுமையாகத் தள்ளிவிட்டதாக வெறுமனே உணருங்கள் .பிறகு மூச்சை உள்ளே நன்றாக இழுங்கள் .சுத்த காற்றை உள்ளே இழுத்து உங்கள் மார்பும்,உள் காற்று குழாய்களும் நன்றாக விரிவடைவதை உணருங்கள் .இதை போல ஏழுதடவை செய்தால் ,திடீர் என்று எந்தப் பிரச்சனையும் உங்களிடம் இல்லை என்பதை உணர்வீர்கள் .
இதை போல சுமார் 2 வாரம் செய்யுங்கள் ,இதில் முக்கியமான செய்தி நீங்கள் மூச்சை வெளியே விடும் போது நீங்கள் உங்களின் இறுக்கத்தன்மையைவெளியே விடுவதாக உணர்தல் தான் .மூச்சை ,எதையும் உங்களுக்குள் செலுத்தவும் வெளியே தள்ளவும் உபயோகிக்கலாம் .
    ஓய்விற்கு இது நேரம் இல்லை
சில சமயம் உங்களுக்கு இரவில் தூக்கம் வரவில்லை என்றால் அதற்காக கவலை படத் தேவைஇல்லை .அந்த நேரத்தை வேலை செய்ய உபயோகயுங்கள் , சக்தியை அதில் உபயோகயுங்கள். மனம் மற்றும் உடல் களைக்கும்அளவுக்கு மேலும் கீழும் நடக்கலாம் ,சற்று ஓடலாம் ,நீண்ட தூரம் நடக்கலாம் . படுக்கைகள் படுத்த படி துக்கத்திற்க்காக முயற்சிப்பதை விட இப்படி ஆககபுர்வமான வகையில் உங்கள் சக்தியை செலவுசெய்வது பயன் தரும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக