my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

தெய்வ பயமும், சரணாகதியும் பற்றி விளக்கும் போது ஓஷோ சொன்ன கதை

ஒரு பிச்சைக்காரன் அனாதை சிறுவன் ஒருவனை வளர்த்து வந்தான். பிச்சைக்காரனின் குடிசை அருகே சுடுகாடு இருந்தது. 
இரவில் சிறுவன் சுடுகாட்டுக்குள் சென்று குறும்புகள் செய்யாமல் தடுக்க அவனிடம், "சுடு காட்டுக்குள் இரவில் நுழைந்தால் அங்கிருக்கும் பேய்கள் உன்னைப் பிடித்து தின்றுவிடும்என்று பயப்படுத்தினான். அந்த சிறுவன் பெரியவனாக வளர்ந்து கல்வியறிவு பெற்ற பின்னும் பேய் பயம் ஓயவில்லை. 

பிச்சைக்காரன் வாலிபன் கையில் தாயத்தைக் கட்டி, " இப்போது தெய்வ சக்தி உள்ளது. கடவுள் உனக்கு பேய்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பார்" என்று கூறினான்.
வாலிபன் தைரியமாக சுடுகாட்டை இரவில் தாண்டி வெளியூர் செல்லும் போது, " பேய்களே அஞ்சும் கடவுள் எவ்வளவு பெரிய பேயாக இருக்க வேண்டும் ?" என்று நினைத்து கடவுள் மீது பயம் கொண்டான். முன்பெல்லாம் பேய்யை நினைத்து இரவில் பயந்தவன், கடவுளை நினைத்து பயப்படத் தொடங்கினான். 

விபரீதத்தை உணர்ந்த பிச்சைக்காரன் கொடுத்த தாயத்தை தூக்கி எறிந்து, சுடுக்காட்டில் சென்று பேய்களை பற்றியும், பிசாசுகளை பற்றியும் விளக்கினான். அதன் பிறகு அந்த வாலிபன் மனதில் இருக்கும் பேய்களும், பிசாசுகளு விடைப்பெற்று மனத்தெளிவு பெற்றான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக