my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

திங்கள், 7 மே, 2012

ஓஷோவின் ஜோசியம்


ஒரு அரசன் தன் அரண்மனை ஜோஸியரிடம் கூறினான்:- 

ஒருவரின் நடத்தை,எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி கணித்துக் கூறுவது என்பது இயலாத காரியம்.ஏனெனில் வாழ்வின் பாதையில் பல குறுக்கு வழிகள் அமைந்து உள்ளன.ஒருவன் எந்த சமயத்தில் என்ன மாதிரி சிந்திப்பான்,நடப்பான்,எப்படிக் குட்டிக்கரணம் அடித்து மாறுவான் என்பதை யாரும் அறிய முடியாது. வாழ்க்கை என்பது ஒரு புரிந்துக்கொள்ள முடியாத ஒரு புதிர் ஆகும்.

ஜோஸியன் இதை மறுத்தான். 

அரசன் ஒரு செயல் நடத்திக் காட்டி அதை நான் நிருப்பிக்கிறேன்என்றார்.

அரண்மனைக்கு எதிரே ஒரு ஏரி உள்ளது. அரண்மனையிலிருந்து அதைக் கடந்து அந்தப் பக்கம் போக ஒரு பாலம் உள்ளது.அந்தப் பாலத்தைக் கடந்து வந்து அரண்மனைக்கு அருகில் தினமும் முதல் மனிதனாக உட்கார்ந்து ஒரு பிச்சைக்காரன்  பிச்சை எடுப்பான்.

நாளைக் காலையில் அவன் நடந்து வருகிற பாலத்தின் நடுவில் ஒரு துணிப் பையில் தங்க காசுகள் போட்டு வைங்கள்.அவன் முதலில் கடப்பதால் அவன் அதிர்ஷ்டக் காரனா என்று பார்ப்போம்.

அவ்வாறே ஜோசியன் வைத்து விட்டு அவன் அதிர்ஷ்டக்காரன்தான் என்று ஜோஸ்யம் சொன்னார்.

மறுநாள் பிச்சைக்காரன் வந்தான். பாலத்தின் ஆரம்பத்தில், வழக்கத்திற்க்கு மாறாக கண்களை மூடிக்கொண்டு பாலத்தைக் கடந்து அரண்ம்னை வாசலில் வந்து அமர்ந்துக் கொண்டான். சற்று நேரம் கழித்து அதே வழியில் வந்த ஒரு உண்மை குருட்டுப் பிச்சைக்காரி  காலில் தட்டுப் பட்டதை எடுத்துணர்ந்து அதிர்ந்து தன் பையில் ஒளித்துக் கொண்டு நடையைக் கட்டினாள்.

பார்த்துக் கொண்டிருந்த அரசனும் ஜோஸ்யனும் அதிர்ந்துப் போனார்கள்.

ஜோஸ்யன் அந்த பிச்சைக்காரனிடம் , “உனக்குதான் கண் தெரியுமே ஏன் கண்ணை மூடிக் கொண்டு பாலத்தைக்கடந்தாய்?”

காலையில் மனசுல ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. ஒரு வேளை எனக்குக் கண் பார்வை போய்ட்டா ,எப்படி தின்மும் இங்கு வந்து பிச்சை எடுப்பது.எனக்குத் துணை யாரும் கிடையாது. யோசித்தேன். இன்றையிலிருந்து கண் இல்லாமல் நடந்து ஒத்திகை பார்த்து பழகி விட்டால் எதிர்காலத்தில் பிரச்சனை இருக்காது. யாரையும் நம்பி இருக்க வேண்டாம்... அதான் கண் முடி நடந்தேன்.

அரசன்நாம் இந்தச் செயலை நடத்தியதும் அவனுடைய குருட்டு நடை ஒத்திகை எண்ணமும் ஒரே நாளில் நிகழ்ந்து விட்டது. இதை எப்படி எடுத்துக் கொள்வது?”

ஜோஸியன் நான் ஒன்று நினைத்தேன் தெய்வம் ஒன்று நினைத்து விட்டது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக