my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

புதன், 24 ஆகஸ்ட், 2011

ஓஷோவின் ஞான கதைகள்-2



தன்னுடைய இளமை காலம் தொட்டு அறிமுகமான தன் பழைய நண்பனை ஒரு ஞானி சந்தித்தார்.தன் நண்பன் இப்போது ஞானி என்பதை அறியாத அந்த பழைய நண்பன் சாதாரணமாக பேச ஆரம்பித்தான்.என்னப்பா என்ன சமாசாரம் எப்படி இருக்கிறாய் என்று மிகவும் சாதாரணமாக கேட்டான்.


அதற்கு அந்த ஞானி நல்லா இருக்கிறேன்.நீ எப்படி இருக்கிறாய் என்று பதிலுக்கு கேட்டார்.


அதற்கு அவன் பரவாயில்லை.ஆனால் வாழ்க்கையில் ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொண்டுவிட்டேன்.அதாவது நாம் கஷ்டபட்டுதான் ஒன்றை அடைய முடியும்.ஒன்றை அடையவில்லை என்றால் அதற்காக நீ போதுமான அளவு உழைக்கவில்லை என்றுதான் அர்த்தம் என்றான்.


அன்றிலிருந்து அந்த ஞானி யாருக்காவது அறிவுரை கூறினால்,கடைசியில் தன் பழைய நண்பனின் எளிமையான வாசகங்களை அனுபவ ஞானத்தை கூற தவறுவதே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக