my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

வியாழன், 13 அக்டோபர், 2011

அன்பின் பொறுப்பு என்ன ?

பதில்:பொறுப்புணர்வு - இந்த வார்த்தையின் ஆழ்ந்த பொருள் என்ன என்று பார்த்தால் பொறுப்பாக இருப்பது. அன்பு என்றாலே பொறுப்பெடுத்துக்கொள்வதுதான்.
அன்புக்கும் பொறுப்புணர்வுக்கும் உள்ள சம்பந்தம் என்ன ? சம்பந்தமே கிடையாது, ஏனெனில் அன்பே பொறுப்புதான். ஆனால் இந்த வார்த்தையின் பொருள் என்ன என்று தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இந்த வார்த்தையின் வேர் வார்த்தையைத்தான் நான் வலியுறுத்துகிறேன். பொறுப்புணர்வு என்றால் பதிலளிக்க அல்லது பொறுப்போடு இருக்க முடிவது. அது கடமை என்று அர்த்தமாகாது. பொறுப்புணர்வு என்ற வார்த்தையின் வேர் வரை சென்றால் பொறுப்போடு இருப்பது. அன்பு பொறுப்பெடுத்துக் கொள்வது. அடுத்தவர் அழைக்கும்போது நீ தயாராக இருக்கிறாய். அடுத்தவர் வரவேற்றால் நீ அவர்களுக்குள் நுழைகிறாய். அவர்கள் வரவேற்கவில்லை என்றால் நீ நுழைவதில்லை. நீ அத்துமீறி செல்வதில்லை. அடுத்தவர் பாடும்போது நீயும் சேர்ந்து பாடுகிறாய். மற்றவர் தனது கையை நீட்டும்போது நீ அதை ஆழ்ந்த பொறுப்புடன் பற்றிக்கொள்கிறாய்.

பொறுப்புணர்ச்சி என்றால் திறந்திருத்தல், பதிலளிக்க தயாராய் இருப்பது. யாராவது உன்னை அழைக்கும்போது நீ பதிலளிக்கவில்லை என்றால் நீ மூடி இருக்கிறாய். யாராவது உன்னை நேசிக்க விரும்பும்போது நீ உதவுவதில்லை, அதற்கு ஆதரவளிப்பதில்லை, பதிலாக நீ தடைகளை உருவாக்குகிறாய். அடுத்தவர் அழைக்கும்போது அதற்கு பதிலளிக்காமல் இருப்பது அகங்காரத்திற்கு நல்லதொரு தீனியாக தெரிகிறது. அப்போது நானேதான் எனக்கு எஜமானன், யாரும் என்னை தள்ளிவிடமுடியாது, நான் விரும்பாத, நான் நினைக்காத எதற்க்குள்ளும் யாரும் என்னை இழுத்துவிட முடியாது என தோன்றுகிறது. பறவைகள் ஒன்றையொன்று அழைப்பதை கவனித்திருக்கிறாயா ? அதுதான் பதிலளிப்பது. ஒரு குயில் கூவுகிறது பின் அங்கே ஒரு மெளனம். பின் வேறொரு குயில் கூவுகிறது. அவைகளின் ஓசையின் மூலம், பாடலின் மூலம் அவை பதிலளிக்கின்றன. அவை எங்கோ தூரத்தில் வேறு வேறு மரத்தில் இருக்கலாம். பின் பறந்து அருகே வருகின்றன. அவை பதிலளிக்கின்றன. மெதுமெதுவாக ஒரே மரத்தில் வந்து சேர்ந்து அருகருகே அமர்ந்து பரிவை பரிமாறிக் கொள்கின்றன.

அடுத்தவரது இருப்பு ரெடியா என்று அழைக்கும்போது தயாராகு. முழுமையாக பதிலளி. கஞ்சத்தனமாக இருக்காதே. பொறுப்புணர்ச்சி என்பதன் அர்த்தம் இதுதான். இந்த வார்த்தை கெடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, விஷமாக்கப்பட்டுவிட்டது. ஒரு தாய் தனது குழந்தையிடம், நான் உனது தாய், நீ எனக்கு கடமைப்பட்டவன் என்று கூறுகிறாள். ஒரு கணவன், நான் உனது கணவன், நான் உனக்காக கடுமையாக உழைக்கிறேன். நீ எனக்கு கடமைப்பட்டிருக்கவேண்டும் என்கிறான் ஒரு தந்தை தனது மகனிடம், பொறுப்பின்றி இருக்காதே. நீ எதைச் செய்தாலும் என்னை நினைத்துக் கொள் என்கிறார். அதுவல்ல பொறுப்புணர்வு. நீ அந்த அழகான வார்த்தையை கெடுத்துவிட்டாய். அது அசிங்கமாகிவிட்டது பொறுப்புணர்ச்சி என்பதுகிட்டதட்ட கடமை போலாகிவிட்டது மேலும் கடமை என்பது ஒரு அசிங்கமான வார்த்தை. அன்பு அழகானது. நீ ஒருவரை நேசிக்கும்போது அவரது குற்றம் குறைகளையும் சேர்த்து முழுமையாக ஏற்றுக்கொள்கிறாய். ஏனெனில் இந்த குற்றம் குறைகளும் அவரின் பாகங்கள்தான். அன்பு மற்றவரை மாற்ற ஒருபோதும் முயற்சிப்பதில்லை. ஆனால் அது மிகப்பெரிய அளவில் மாற்றுகிறது. நீ நேசித்தால், அது ஒரு புரட்சியை கொண்டுவருகிறது. அந்தபுரட்சி மிக அமைதியாக வருகிறது. அதன் காலடி ஓசைக்கூட கேட்பதில்லை. என்ன நிகழ்கிறது என தெரிந்து யாரும் தயாராக இருக்க முடிந்ததில்லை.-எல்லாமும் மிகவும் அமைதியாக, எப்படி சத்தமில்லாமல் மொட்டு மலர்ந்து பூவாக விரிகிறதோ அதுபோல. . . . .
நீ நேசிக்கும் மனிதரை மாற்ற முயற்சிக்காதே, ஏனெனில் மாற்றும் அந்த முயற்சியே உனது நேசம் முழுமையாக இல்லை, அவரை நீ முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைச் சொல்லும். நான் உன்னைக் காதலிக்கிறேன், ஆனால் எனக்கு உனது மூக்கை பிடிக்கவில்லை, நான் உன்னை நேசிக்கிறேன், ஆனால் நான் உனது முகத்தை நேசிக்கவில்லை என்று கூறுவதுபோல உள்ளது உன்னுடைய மாற்றும் முயற்சி. எல்லா காதலர்களும் இதுபோல விஷயங்களைக் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். உன்னை நேசிக்கிறேன், ஆனால் நீ புகைப்பிடிப்பதை வெறுக்கிறேன். எனக்கு அது பிடிக்கவில்லை. ஆனால் இது எதிர்ப்பை காட்டுகிறது. ஒரு நேசிப்பவருக்கு புகைபிடித்தலும் அவருடன் இணைந்ததுதான். அவர் அப்படித்தான். அவரால் அதை ஒன்றும் செய்ய முடியாது. திடீரென அவர் சுருங்க ஆரம்பிக்கிறார், அவர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. புகைபிடித்தல் போன்ற அற்ப விஷயங்களுக்காக நீ நேசித்தல் போன்ற ஒரு அழகான விஷயத்தை கெடுத்துவிட்டாய். அன்பு செய்தால் வெறுமனே அன்பு செய். அன்பு மாறுதலைக் கொண்டுவந்தால் சரி, அப்படி அது மாறுதலை கொண்டுவரவில்லையென்றாலும் சரிதான்.

Source: TAO: THE THREE TREASURES.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக