my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

வெள்ளி, 23 மார்ச், 2012

ஓஷோ முத்துக்கள்

1.       எழுச்சி
 
நான் புரட்சியை போதிக்கவில்லை, நான் எழுச்சியை போதிக்கிறேன். இந்த வேறுபாடு மிகவும் பெரியது. புரட்சி அரசியல்ரீதியானது, எழுச்சி ஆன்மீகரீதியானது. புரட்சிக்கு நீ உன்னை ஒரு ராணுவம் போல ஒருங்கிணைத்துக் கொண்டு எதிரிகளுடன் போராட வேண்டும். எழுச்சி எனில் நீ ஒரு தனிப்பட்டவனாக எதிர்க்க வேண்டும். இந்த பழமை முழுவதிலும் இருந்து நீ வெளி வர வேண்டும்.
 
எழுச்சியின் மூலம் உனது இதயம் ஒரு அன்பு மலராக விரிவடையும்.
 
ஒரு துறவியின் இருப்பில் எழுச்சியின் சுவை இருக்கும்.
 
புத்திசாலித்தனம் சிறந்தது, அதனினும் சிறந்தது எழுச்சி
 
வேரூன்றியுள்ள அனைத்து மதங்களுக்கும் எதிராக மிகப் பெரிய எழுச்சி எழ இதுதான் நேரம்.
 
எழுச்சி எல்லா அடிமைத்தனங்களுக்கும் எதிரானது, வாழ்வை முழுமையான சுதந்திரத்தில்வாழ்வது.
 
உன்னுடைய எழுச்சியில் அன்பின் மணம் இருக்க வேண்டும்.
 
 
2.       உருகுதல்
 
அறியாமல் இருப்பதுதான் மிகவும் அணுக்கமானது. உனக்கும் நிதர்சனத்துக்கும் இடையே ஒரு சிறந்த நட்பு, ஒரு அன்யோன்யம் எழும். சூரியன் வரும்போது பனித்துளி கரைவதைப் போல நீ உருகிப் போவாய். அது நேசஉறவு. நீ நிதர்சனத்துடன் ஒன்றி விடுகிறாய். நிதர்சனம் உன்னுள் ஊடுருவுகிறது. காதலர்கள் ஒருவருக்குள் ஒருவர் ஊடுருவுவதைப் போல.
 
அகம்பாவத்தை விட்டுவிடு. அப்போது நீ மலர ஆரம்பிப்பாய், உருக ஆரம்பிப்பாய் – நீ உயிர்ப்புடன் இருப்பாய்.
 
ஒரு மலரை முழுமையாக கவனி, ஒன்றிவிடுதலையும் உருகுவதையும் நீ அனுபவப்படுவாய்.
 
நீ உண்மையிலேயே ஒருவரை நேசித்தால் உனது ஆணவம் நழுவதையும் கரைவதையும் நீ உணர்வாய்.
 
சிறந்த நடனமாடுபவர்கள் மெதுமெதுவாக அதனுள் கரைந்து உருகி போவார்கள்.
 
நீ அன்பு சக்தியினுள் செல்லும்போது நீ கரைவாய், ஆனந்ததில் மலர்வாய்
 
 
3.       தெளிவு
 
 உனது அமைதியில் வார்த்தைகளின்றி இருக்கும்போது மொழியின்றி இருக்கும்போது யாரும் அங்கு இல்லாத போது நீ பிரபஞ்சத்துடன் லயப்பட்டு விடுகிறாய். இந்த தெளிவு இந்த ஒருமை உனக்கு அளவற்ற பரிசுகளை கொண்டு வரும். அது உனது முழு திறனுடன் நீ மலர உதவும். முதல் முறையாக நீ தனிப்பட்டவனாக உணர்வாய், உனக்கு சுதந்திரத்தின் சுவை தெரியும்.
 
இரவுக்கு அதற்கென ஒரு அழகு உண்டு, அதில் ஆழமும், அமைதியும், தெளிவும் இருக்கும்.
 
உறுதியான தெளிவுடனும் அமைதியுடனும் இருக்கும்போது நீ முழுமையான சுமை குறைந்தவனாக உணர்வாய்.
 
ஞானமடையும்போது முழுமையான மோனத்தில், தெளிவு பிறக்கும்.
 
அமைதியாக அமர்ந்திருக்கும்போது தெளிவால் நீ நிறைவாய்.
 
தியானம் செய் – தெளிவு, உணர்வு, அமைதி ஆகியவை உன்னுள் வளரும்.
 
சலிப்பை மிகவும் சரியான விதத்தில் உபயோகித்தால் அது தெளிவை உருவாக்கும்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக