my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

நாத்திகவாதிகள் பற்றி ஓஷோவின் கருத்து





பார்வையற்ற ஒருவன் தத்துவவாதியாகவும்,வாதிடுபவனாகவும் இருந்தான்.

அவன் எல்லோரிடமும் ‘வெளிச்சம் என்பதே கிடையாது;என்னைப் போலவே நீங்கள் எல்லோரும் குருடர்கள்தான்.நான் அதை அறிந்துகொண்டேன்.நீங்கள் அறிந்துகொள்ளவில்லை.அதுதான் வித்தியாசம்!வெளிச்சம் என்ற ஒன்று இருந்தால்,வெளிச்சத்தைக் கொண்டுவாருங்கள்.நான் அதை ருசித்துப்பார்க்கிறேன்.இல்லை நுகர்ந்து பார்க்கிறேன்.இல்லை தொட்டாவது பார்க்கிறேன்.அதன்பின் தான் நம்ப முடியும்!’ என்று கூறினான்.



அவனோடு வாதிட முடியாமல்,கிராமத்து மக்கள் புத்தரிடம் அவனை அழைத்து வந்தார்கள்.



புத்தர் எதுவும் சொல்லாமல், “இவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்”என்றார்.மருத்துவர் அவனை விரைவில் குணப்படுத்தி பார்வை வரச் செய்தார்.



அவன் புத்தருக்கு நன்றி சொல்ல வந்தான்.அப்போது புத்தார், “இப்போது நீ வெளிச்சத்தை நுகர வேண்டும்.தொட்டு ருசிக்க வேண்டும்;அதைத் தொட வேண்டும்;” என்றார்.



அவன் புத்தரின் கால்களில் விழுந்தான். “தங்களால்தான் எனக்குப் பார்வை கிடைத்தது.இவ்வளவு நாள் நான் எனது அறியாமையில் வாதிட்டுக்கொண்டே இருந்துவிட்டேன்.என்னை மன்னித்துவிடுங்கள்” என்றான்.



கருத்து:எதிர்மறையானவற்றை(நாத்திகம்,கம்யூனிசம்,போலி மதச்சார்பின்மை) மிக எளிதில் நிருபித்துவிடலாம்.ஆனால்,நேர்மறையானவற்றை நிருபித்தல் சாத்தியமில்லை.எனவேதான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும்,ஆத்திகன் எப்போதும் தோல்வியுறுபவனாகவும் இருக்கிறான்.அவனால் கடவுள் இருப்பதை நிரூபிக்க முடிவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக