my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

திங்கள், 23 ஜூலை, 2012

பணம்----------2


பணம் ஓரு பிரச்சனை அல்ல! அதனை உபயோகபடுத்தலாம்.
உன்னிடம் அது இருந்தால் உபயோகப்படுத்து ; உன்னிடம் பணம் இல்லாவிட்டால், பணம் இல்லாதபோது உனக்கு இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்து. இதுதான் என்னுடைய வழிமுறை. நீ பணக்காரனாக இருந்தால் ஆனந்தமாக அனுபவி. ஏழை மனிதன் அனுபவிக்கமுடியாத சில இன்பங்களை செல்வம் கொண்டுள்ளது. நான் செல்வத்தோடும் இருந்திருக்கிறேன், ஏழையாகவும் இருந்திருக்கிறேன், நான் உண்மையாக கூறுகிறேன், பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய ஓரு சில விஷயங்கள் இருக்கின்றன. உன்னிடம் செல்வம் இருக்கும்பொழுது ஆனந்தமாக அனுபவி. நான் திரும்பவும் உன்னிடம் கூறுகிறேன், நான் 
செல்வத்தோடும் இருந்திருக்கிறேன், ஏழையாகவும் இருந்திருக்கிறேன், ஏழை மக்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய விஷயங்கள் சில இருக்கின்றன. இரண்டையும் ஓரே சமயத்தில் அனுபவிக்கமுடியாது.
எனவே எப்போதானாலும், நடப்பது என்னவாக இருந்தாலும், ஆனந்தமாக அனுபவி. ஏழை மனிதன் ஓரு வகையான சுதந்திரத்தைக் கொண்டுள்ளான். வறுமை ஓரு வகையான தூய்மையை, ஓரு ஓய்வுதன்மையை, திருப்தியான தன்மையை கொண்டுள்ளது. மனம் மிகவும் 
கவலைபடுவதில்லை. கவலைபட ஏதுமில்லை, நீ நிம்மதியாக உறங்கலாம். ஏழை மனிதனுக்கு தூக்கமின்மை இயலாதது. எனவே குறட்டை விட்டு நன்றாக தூங்கு. ஏழ்மையிலிருந்து வரும் சுதந்திரத்தை ஆனந்தமாக அனுபவி.
சில சமயங்களில் நீ செல்வந்தனாக இருந்தால், செல்வத்தை அனுபவி, ஏனெனில் பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய சில . சிறந்த ஓவியங்களை உனது சுவற்றில் நீ மாட்டலாம். ஏழை அவ்வாறு செய்ய இயலாது. உனது வீட்டில் 

நீ சிறந்த இசையை வைத்திருக்கலாம். ஏழை அவ்வாறு செய்ய இயலாது. உன்னுடைய வீட்டை சுற்றி நீ ஜென் தோட்டம் அமைக்கலாம், ஏழை அவ்வாறு செய்ய இயலாது. நீ கவிதை படிக்கலாம், நீ வரையலாம், நீ கிதார் வாசிக்கலாம், நீ ஆடலாம்பாடலாம், தியானம் செய்யலாம் ஆயிரக்கணக்கான விஷயங்கள் கிடைக்கின்றன.
என்னுடைய வழி: எது எப்படியிருந்தாலும், நீ அதன் மூலம் என்ன செய்யமுடியும் என்று பார். அது வறுமையாக இருக்குமானால் புத்தராக ஆகிவிடு. ஊர் சுற்றத் தொடங்கு, ஓரு பிச்சை பாத்திரத்தை எடுத்து கெரள். 

பிச்சைக்காரருக்கு மட்டுமே இருக்ககூடிய அந்த அழகை அனுபவி. அவர் எந்த இடத்தையும் சேர்ந்தவரல்ல, இன்று இங்கே இருக்கிறார், நாளை அவர் போய்விடுவார். அவர் ஓரு ஓட்டம். அவருக்கு எந்த வீடும் இல்லை. மழை வரபோகிறது கூரையை சரிசெய்யவேண்டும் என்ற கவலை அவருக்கு இல்லை. யாராவது எதையாவது திருடிவிடுவார்களோ என்னும் பயம் அவருக்கு இல்லை. அவரிடம் எதுவும் இல்லை.
வறுமையாக இருக்கும்பொழுது வறுமையை ஆனந்தமாக அனுபவி. செல்வம் இருக்கும்பொழுது ஜனகராக ஆகிவிடு, அரசனாக ஆகிவிடுபணத்தினால் கிடைக்கும் அனைத்து அழகுகளையும் அனுபவி.
என்னுடைய வழி முழுமையானது. நான் உனக்கு தேர்ந்தெடுக்க கற்றுத் தரவில்லை, நான் வெறுமனே ஓரு புத்திசாலியான மனிதன் எது எப்படியிருந்தாலும் அதனை அழகாக்கிவிடுவான் என கூறுகிறேன். புத்தியில்லாத மனிதன் சிரமப்படுகிறான். அவனிடம் பணமிருந்தால் அவன் சிரமப்படுகிறான் ஏனெனில் பணம் கவலைகளை கொண்டுவருகிறது. அவன் பணம் கொண்டுவரக்கூடிய இசையைநடனத்தை, ஓவியத்தை இரசிப்பதில்லை. அவனிடம் பணம் இருந்தால் அவன் ஓய்வெடுக்க, தியானம் செய்ய, பள்ளதாக்குகளில் கத்திப் பாட, மற்றும் நட்சத்திரங்களோடு பேச அவன் செல்வதில்லை, அவன் கவலைபடுகிறான், தனது உறக்கத்தை இழந்துவிடுகிறான், பசியை இழந்துவிடுகிறான். பணம் இருக்கும்பொழுது அவன் தவறானதை தேர்ந்தெடுக்கிறான்.


 இந்த மனிதன் எப்படியோ ஏழையானால், கடவுளின் அருளால் ஏழையானால், பிறகு அவன் ஏழ்மையில் சிரமப்படுகிறான், பிறகு அவன் தொடர்ந்து “அது இல்லை, இது இல்லைஎனக் கவலைப்படுகிறான். உன்னிடம் வறுமை உள்ளது!அதனை ஆனந்தமாக அனுபவி!


நான் பணத்தை எதிர்க்கவில்லை. பணப்பிடிப்புள்ள மனத்தன்மையை தான் எதிர்க்கிறேன்! பொருட்களை வைத்திருப்பதை நான் எதிர்ப்பதில்லை.
நான் பிடித்து வைத்துக் கொள்ளும் தன்மையையே எதிர்க்கிறேன். இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்ட பரிமாணங்கள்ஓன்றுக்கெரன்று எதிரானவை.
பணத்திற்கு எதிராக இருப்பது முட்டாள்தனம். பணம் ஓரு அழகான கருவி- பரிமாற்ற கருவி. பணம் இல்லாமல் முன்னேற்றம் அடைந்த கலாச்சாரமோ, சமுதாயமோ, பண்பாடோ, இருக்கமுடியாது.பணம் உலகில் இருந்து மறைந்துவிட்டது என கற்பனை செய்து பாருங்கள். பிறகு வசதி, வாய்ப்பு அனைத்தும் அதனோடு சேர்ந்து மறைந்துவிடும். மக்கள் மிகவும் வறுமையில் தள்ளப்படுவார்கள். பணம் மிகப்பெரிய பணியை செய்துள்ளது. ஓருவர் அதனை பாராட்ட வேண்டும்.
ஆகவே நான் பணத்திற்கு எதிரியல்ல, ஆனால் நான் பணப்பிடிப்புள்ள மன தன்மைக்கு எதிரானவன்.- மக்கள் வேறுபடுத்துவதில்லை. முழு மனித சமுதாயத்தின் கடந்த காலமும் குழப்பத்திலேயே இருந்து வந்துள்ளது.
பணப்பிடிப்புள்ள மன தன்மையை விட்டுவிடுங்கள். ஆனால் பணத்தை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. பணம் உருவாக்கப்பட வேண்டும், செல்வம் உருவாக்கப்படவேண்டும். செல்வம் இல்லாவிடில் எல்லா அறிவியலும் மறைந்துவிடும், எல்லா தொழில்நுட்பங்களும் மறைந்துவிடும், மனிதனின் சிறந்த சாதனைகள் அனைத்தும் மறைந்துவிடும். மனிதனால் நிலவுக்கு செல்லமுடியாது, மனிதனால் பறக்க இயலாது. பணம் இல்லாவிடில், மொழி இல்லாவிடில் எல்லா கலைகளும், எல்லா இலக்கியங்களும், எல்லா கவிதைகளும், எல்லா இசையும் அழிந்துவிடுவதைப் போல, வாழ்வு உற்சாகம் இழந்துவிடும். மொழி உனக்கு எண்ணங்களை பரிமாறிக்கொள்ள, தெரிவிக்க உதவுவதைப் போல, பணம் உனக்குப் பொருட்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது. அதுவும் ஓருவகை தொடர்புபடுத்திக் கொள்ளுதலேயாகும்.
ஆனால் பண-மனம் படைத்த மக்கள் பணத்தை பிடித்து வைத்து கொள்கிறார்கள். அவர்கள் பணத்தின் முழு பயனையும் அழித்துவிடுகிறார்கள். அதன் பயன் ஓரு கையிலிருந்து இன்னெரரு கைக்கு செல்வதே. அதனால்தான் அது கரன்சி என அழைக்கபடுகிறது, அது மின்சாரத்தைப்(கரண்ட்)போல, இருக்கவேண்டும், நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அது எவ்வளவு நகர்கிறதோ, அவ்வளவு நல்லது. சமுதாயம் அந்த அளவிற்கு செல்வச்செழிப்பு அடைகிறது.
என்னிடம் ஓரே ஓரு ரூபாய் இருந்தாலும் அது நகர்ந்துகொண்டே இருக்கிறது. அது ஐயாயிரம் சந்நியாசிகளிடம் நகரும்பொழுது அந்த ஓரு ரூபாய் ஐயாயிரம் ரூபாய் ஆகிறது. அது அதிகமாக நகர்ந்தால் அதிக பணம் உருவாக்கப்படுகிறது. 

அது ஐயாயிரம் ரூபாய் இருந்ததை போல செயல்பட்டுள்ளது- வெறும் ஓரு ரூபாய் !ஆனால் பண-மனம் படைத்த மனிதன் அதனைப் பிடித்துகொள்கிறான். அவன் அது கரன்சியாக இருப்பதை நிறுத்திவிடுகிறான். அவன் அதனை பிடித்து வைத்து கொள்கிறான். 

அதனிடம் அவன் பிடிப்பு கொள்கிறான், அவன் அதனை உபயோகப்படுத்துவதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக