my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

வியாழன், 19 ஜூலை, 2012

கடவுளிடம் பேச எந்த மொழி வேண்டும் ?


ஆசிரமத்து     குருநாதரிடம்  புதிதாய்   வந்த  ஒருவன் 
"நான் கடவுளைப்  பார்க்கணும்" என்றான். 
"அதுக்கு ஏன்  என்னைத்தேடி வந்தாய்?" 
"கடவுளை எப்படிப்பாக்கறது எந்த மொழில பேசறது என்கிற  விவரம் 
தெரிஞ்சிட்டுப்போகவந்தேன் " 
"சரி   என் சீடர்கள்  சிலபேர் ஆசிரம தோட்டத்துல இருக்காங்க பாத்துவரலாம் 
என்கூட புறப்படு" 
தோட்டத்தில் ஒருமரத்தடியில் அவர் சிஷ்யர்கள் இருவர்  பேசிக்கொண்டு இருந்தனர் 
குருநாதர்  வந்தவனிடம்"அவங்க என்ன செய்யறாங்க?" என்றார். 
"ஒருத்தர் இன்னொருத்தர்கூட பேசிட்டு இருக்கார்" 
"சரி அதோபார்!  அந்த மரத்தடில  ஒருத்தன் உக்காந்துட்டு என்ன செய்றான்?' என்று 
இன்னொரு மரத்தின்கீழ் தனியே உட்கார்ந்திருந்தவனைச்சுட்டிக்காட்டி 
கேட்டார். 
:"அவர் சும்மா உக்காந்திருக்கார்" 
 குருநாதர் சிரித்தார். 
பிறகு."முதல்லபார்த்த ரெண்டுபேரும் தங்கள் இருவருக்குள் 
பேசிக்கொண்டார்கள்.இந்தமனிதன்  கடவுளோடு பேசிக்கொண்டு இருக்கிறான் " என்றார். 
"என்ன சொல்றீங்க?"  என குழம்பினான் வந்தவன். 
"ஆமாம்  ஒருமனிதன் இன்னொரு  மனிதனோட  பேச மொழி வேணும் அதுதான் 
தொடர்புச்சாதனம். ஒருமனிதன் கடவுளோட பேசணும்னா மௌனம் தொடர்புசாதனம்.  கடவுளோட 
நீ தொடர்புகொள்ளணும்னா   மௌனமாஇரு" 

 வந்தவன் சற்று நேரம் யோசித்தவன் கடவுளோடு எந்த  மொழில பேசணும்னு 
புரிந்துகொண்டான். 
அந்தக்கடவுள் தனக்குள்ளே இருக்கிற  ஓர் உண்மை என்பதையும் புரிந்துகொண்டான் 

ஓஷோ சொல்கிறார்... 
"நீ  பிறந்தபோது மௌனத்தை    தான் உலகத்துக்கு  கொண்டுவந்தாய்.. மொழி 
உனக்குதரப்பட்டது....சமூகத்துடன் பழக அது ஒர் அன்பளிப்பு ...அது ஒருகருவி 
...
சாதனம், 
ஆனால் மௌனம் இந்த உலகத்துக்கு நீ கொண்டுவந்தது. அந்த மௌனத்தை அடையமீண்டும் 
முயற்சி செய் ...அதாவது சின்னக்குழந்தையாகிவிடு" 
உண்மைதானே? 
  குழந்தை மனம் வந்துவிட்டால்  தெய்வம் அங்கு ஓடிவந்து குடிகொள்ளாமலா போகும்? 

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக