my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

சனி, 16 ஜூலை, 2011

என் முழு முயற்சியும் ஒரு புதிய ஆரம்பத்திற்கே?

நான் எந்தவிதமான ஓழுங்கங்களையும்
கட்டுப்பாடுகளையும் கற்பிப்பதில்லை.
பிரக்ஞை மட்டுமே நான் கற்பிக்கும் விடயம்.
பிரக்ஞையுடன் நீங்கள் ஏது செய்தாலும்
அது சரியாக இருக்க வேண்டும்.
ஏனனில் பிரக்ஞையில்
நீங்கள் ஏதுவும் தவறாக செய்ய முடியாது.

இக் கணத்தை எவ்வாறு அழகுபடுத்துவது என்பது தான்
எனது முழு முயற்சியும்.
மனிதர்கள் மேலும் ஆனந்தமாகவும்
கொண்டாட்டமாகவும் வாழ்வதற்கு என்ன செய்வது?
எவ்வாறு அவர்களை தயார் படுத்துவது?
இதன் சிறு அளவையாவது சுவைக்க எவ்வாறு வழங்குவது?
உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு சிரிப்பை வரவழைப்பது?
என்பதே என் முழு முயற்சியும்.
நான் ஒரு இறுக்கமான மனிதனல்ல
விளையாட்டுத்தனத்திலிருந்தே
உங்களுக்கு சொல்லவேண்டியதை சொல்கின்றேன்.
என்னுடைய செய்தி மிகவும் சாதாரணமானது.
கடவுள் எனக்குள் இருக்கின்றார் என்பதைக் கண்டுபிடித்தேன்.
என்னுடைய முழு முயற்சியும்
உங்களையும் உங்கள் உள்ளே பார்க்கச் செய்வதே.
இது சாத்தியமானது.
இதற்காக உங்களுக்கு உதவி செய்வதற்கோ
அல்லது பாதுகாப்பளிப்பதற்கோ
நான் இங்கு இருக்கவில்லை.
உங்களுக்கு உதவி செய்தால்
பழையதே தொடரும்.
எல்லாவகையான உதவிகளும்
பழையனவற்றுக்கு உதவுவதற்கே.
பழைய வாழ்விற்கே.
நான் எந்தவகையிலும் இதற்கு உதவப் போவதில்லை.
மாறாக உங்களை அழிப்பதற்கே வந்திருக்கின்றேன்.
ஏனனில் அதிலிருந்துதான் புதியது பிறக்கும்.
புதிய மனிதர். புதிய பிரக்ஞை.
எனக்கு என்னுடைய கருத்தியலுக்கு
மற்றவர்களை மாற்றவேண்டும் என்பதில்
எந்தவிதமான ஆர்வமும் இல்லை.
அப்படி ஒரு கருத்தியலும் என்னிடம் இல்லை.
ஒருவரை இன்னுமொரு கருத்தியலுக்கு         
மாற்ற முயற்சிப்பது அடிப்படையில்
ஒரு வன்முறையான செய்பாடு என்பதே என் நம்பிக்கை.
இது ஒருவரின் தனித்துவத்தில் தலையீடுவதாகும்.
தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவதாகும்.
நீங்கள் நினைப்பது போல்
நான் ஒரு ஆன்மிகவாதியல்ல.
நான் எந்தக் கோயில்களுக்கும் சென்றதில்லை.
எந்த சமய புத்தகங்களும் கற்றதில்லை.
எதையும் பின்பற்றியதுமில்;லை.
கடவுளை வணங்கியதுமில்லை பிராத்தித்ததுமில்லை.
அது என் வழியல்ல.
நீங்கள் நினைக்கும் ஆன்மிக செயற்பாடுகள் ஒன்றும்
நான் செய்ததில்லை.
எனது ஆன்மீகம் வேறுவகையானது.
இதற்கு நேர்மையான மனிதர் தேவை.
இது யாரிலும் தங்கியிருப்பதற்கு விடாது.
எந்த விலை கொடுத்தும் சுதந்திரமாக இருக்கும்.
கூட்டத்தலிருந்து தனித்து இருக்கும்.
ஏனனில் கூட்டம் உண்மையை கண்டுபிடிப்பதற்கல்ல.
உண்மையை ஒவ்வொருவரும் தனித்தனியாகவே அறியலாம்.
என் முழு முயற்சியும் ஒரு புதிய ஆரம்பத்திற்கே.
இதனால் உலகம் முழுவதிலிருந்தும்
எனக்கு எதிரான கருத்துக்கள்
கண்டனங்கள் வருவதும் தவிர்க்கமுடியாதது.
அதைப்பற்றி பரவாயில்லை.
அதை யார் கணக்கில் எடுப்பது.
நீங்கள் என்னைப் புரிந்துகொள்வதற்காக
நான் இங்கு இல்லை.
உங்களை நீங்கள் புரிந்து கொள்வதற்காகவே
நான் இங்கு இருக்கின்றேன்.
நீங்கள் ஒரு திறக்கப்படாத புத்தகம்.
அது திறக்கப்படவேண்டும்.
அதை எவ்வாறு திறப்பது என்பதையும்
அதற்கான சாவியையும்
உங்களுக்கு அறிமுகப்படுத்தவே
இங்கு நான் இருக்கின்றேன்.
சாவியைக் கொண்டு புத்தகத்தை திறந்து விட்டீர்கள் என்றால்
உங்கள் பயணம் தொடரும்…
உங்களுக்கான பாதையில்…
என் வேலை அதனுடன் முடிந்துவிடும்.
இதன் பின் நான் தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக