my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

செவ்வாய், 19 ஜூலை, 2011

மோஜுத்தின் கதை - ஓஷோ கதைகள்


முன்னொரு காலத்தில் மோஜுத் என்ற பெயர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான். அவன் தான் சிறு அதிகாரியாக பதவி வகிக்கும் ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தான், மற்றும் அவன் எடைக்கற்களை பரிசோதிக்கும் அதிகாரியாகவே கடைசி வரை தன் நாட்களை கழித்துவிடுவான் என்பது போல தோன்றியது.

ஒருநாள் அவன் அவனுடைய வீட்டிற்கு அருகில் உள்ள பழைய கட்டிடத்தின் தோட்டம் வழியாக நடந்துகொண்டிருந்தபோது, இதர், சூபிகளின் மர்ம வழிகாட்டி பளிச்சென்ற பச்சை நிறத்தில் உடை உடுத்திக்கொண்டு அவன் முன் தோன்றிபிரகாசமான எதிர்காலம் உடைய மனிதனே! உன்னுடைய வேலையை விட்டுவிட்டு மூன்று நாளில் ஆற்றோரத்தில் என்னை சந்தி.என கூறிவிட்டு பிறகு மறைந்துவிட்டார்.

மோஜுத் அவனுடைய அலுவலக மேலதிகாரியிடம் சென்று அவன் சென்றாக வேண்டும் என கூறினான். விரைவில் நகரத்தில் உள்ள அனைவரும் இதைப் பற்றி கேள்விப்பட்டு, பாவம் மோஜுத்! அவன் பைத்தியமாகிவிட்டான்! என கூறினர். ஆனால், அவனுடைய வேலைக்கு நிறைய ஆட்கள் காத்திருந்த காரணத்தால், அவர்கள் விரைவில் அவனை மறந்துவிட்டனர்.

சொல்லப்பட்ட தினத்தில், மோஜுத் இதரை சந்தித்தான்,
அவர், “ உன்னுடைய உடைகளை கிழித்துக்கொண்டு ஆற்றுக்குள் குதி. யாராவது உன்னை காப்பாற்றக்கூடும்என கூறினார். மோஜுத் தான் பைத்தியமாகிவிட்டோமோ என ஆச்சர்யபட்டாலும் கூட அவன் அவர் சொன்னதை செய்தான்.

அவனால் நீந்த முடியும் என்பதால், அவன் மூழ்கவில்லை. ஆனால் வெகு தூரம் அடித்துச் செல்லப்பட்டான். ஒரு மீனவன் அவனைப் பிடித்துமுட்டாளே, ஆற்றோட்டம் வேகமாக உள்ளது. நீ என்ன செய்ய முயற்சி செய்தாய்என கேட்டுக் கொண்டே அவனைப் படகிற்குள் தூக்கிப் போட்டான். மோஜுத்எனக்கு உண்மையிலேயே தெரியாதுஎன கூறினான்.
மீனவன்நீ ஒரு பைத்தியம், ஆனால் நான் ஆற்றோரத்தில் இருக்கும் என்னுடைய குடிசைக்கு உன்னை அழைத்து செல்கிறேன் மற்றும் பிறகு நாம் உனக்காக என்ன செய்யமுடியும் என்பதை பார்க்கலாம்என கூறினான்.

மோஜுத் நன்றாக படித்தவன் என கண்டுகொண்ட பிறகு எழுதவும் படிக்கவும் மோஜுத்திடம் இருந்து மீனவன் கற்றுக்கொண்டான். மாற்றாக மோஜுத்திற்கு உணவு தரப்பட்டது மற்றும் மீனவனுக்கு மோஜுத் அவனுடைய வேலையிலும் உதவி செய்தான்.

ஒரு சில மாதங்களுக்கு பிறகு, இதர் இந்த முறை திரும்பவும் மோஜுத்தின் படுக்கையின் கால்மாட்டில் தோன்றி, “ இப்போது எழுந்து இந்த மீனவனை விட்டு கிளம்பு, உனக்கு தேவையானது அளிக்கப்படும்என கூறினார்.
மோஜுத் உடனடியாக குடிசையை விட்டு வெளியே வந்தான், அவன் ஒரு மீனவனைப் போல உடை அணிந்திருந்தான், மற்றும் ஒரு நெடுஞ்சாலையை அடையும் வரை அவன் அலைந்துகொண்டிருந்தான்.

அதிகாலை விடிந்துகொண்டிருந்தபோது அவன் ஒரு விவசாயி அவனது கழுதையின் மீது சந்தைக்கு சென்றுகொண்டிருப்பதை பார்த்தான். விவசாயி, “ நீ வேலை தேடுகிறாயா?  ஏனெனில் எனக்கு சந்தையில் வாங்கும் பொருட்களை கொண்டு வர உதவிக்கு ஒரு ஆள் வேண்டும்என கேட்டான்.

மோஜுத் அவனைப் பின்தொடர்ந்தான். அவன் விவசாயியிடம் கிட்டதட்ட இரண்டு வருடங்கள் வேலை செய்தான், அந்த காலகட்டத்தில் அவன் மற்றவை பற்றி தெரிந்துகொண்டது சிறிதளவே, விவசாயத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டான்.

ஒருநாள் மதியம் அவன் ஆட்டுரோமத்தை அறுத்துகொண்டிருந்தபோது இதர் அவன்முன் தோன்றிஅந்த வேலையை விட்டுவிடு, மோசுல் நகரத்திற்கு நட, மற்றும் உன்னுடைய சேமிப்பை உபயோகப்படுத்தி தோல் வியாபாரியாக மாறுஎன கூறினார். மோஜுத் அவர் சொன்னபடி செய்தான்.

மோசூலில் அவன் ஒரு தோல் வியாபாரியாக அறியப்பட்டான் அவன் அவனுடைய தோல் வியாபாரத்தை மூன்று வருடங்கள் செய்தான், அப்போது அவன் இதரை பார்க்கவேயில்லை.

அவன் ஒரு பெரும் தொகையை சேமித்துவிட்டான், மற்றும் ஒரு வீடு வாங்குவதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தான். இதர் அவன் முன் தோன்றிஉன்னுடைய பணத்தை என்னிடம் தா, இந்த நகரத்தை விட்டு வெகுதூரத்தில் உள்ள சமர்கண்ட் வரை செல், மற்றும் அங்கு உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்எனக் கூறினார். மோஜுத் அதைச் செய்தான்.

இப்போது அவன் சந்தேகமில்லாமல் பிரகாசத்தின் குறியீடுகளை காட்ட தொடங்கினான். அவன் நோயுற்றவர்களை குணப்படுத்தினான், அவனுடைய ஓய்வு நேரத்தில் அவன் அருகில் இருந்தவர்களுக்கு உதவி செய்தான், மற்றும் சூட்சமத்தை பற்றிய அவனுடைய அறிதல் மேலும் மேலும் ஆழமாகியது.

சமய குருமார்களும், தத்துவவாதிகளும் அவனை சந்தித்தனர் மற்றும் அவர்கள் நீங்கள் யாரிடம் கற்றீர்கள்? என கேட்டனர்.
அதைச் சொல்வது கடினம்என மோஜுத் கூறினான். அவனுடைய சீடர்கள் நீங்கள் எப்படி உங்கள் வாழ்வை தொடங்கினீர்கள்? என கேட்டனர்.சிறு அதிகாரியாக தொடங்கினேன்என அவன் கூறினான். மற்றும்உங்களுடைய தேடுதலுக்கு வாழ்க்கையை அர்பணிப்பதற்காக அதனை விட்டுவிட்டீர்களா? என அவர்கள் கேட்டனர்.

இல்லை நான் வெறுமனே அதனை விட்டுவிட்டேன்என அவன் கூறியபோது யாருக்கும் அவன் சொல்வது புரியவில்லை. அவனுடைய வாழ்க்கை சரிதையை எழுதுவதற்காக மக்கள் அவனிடம் வந்தனர். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள்? என அவர்கள் கேட்டனர்.

நான் ஆற்றுக்குள் குதித்தேன், ஒரு மீனவனாக மாறினேன், பின் நடு இரவில் அவனுடைய குடிசையை விட்டு வெளியேறினேன். அதற்கு பிறகு, நான் ஒரு விவசாய கூலியாக மாறினேன். நான் ஆட்டுரோமத்தை வெட்டிக்கொண்டிருக்கும்போது, நான் மாறிவிட்டேன் மற்றும் மோசுலுக்கு சென்றேன், அங்கு தோல் வியாபாரியாக மாறினேன், அங்கு சிறிது பணத்தை சேமித்தேன். ஆனால் அதை கொடுத்துவிட்டேன். பிறகு சமர்கண்டிற்கு நடந்தேன் அங்கு ஒரு மளிகை கடையில் வேலை செய்தேன். மற்றும் நான் இப்போது இங்கு இருக்கிறேன்.

ஆனால் இந்த விவரிக்கமுடியாத நடத்தை உங்களுடைய வித்தியாசமான உயர்ந்த ஞான வாழ்க்கையின் மேல் எந்த வெளிச்சத்தையும் ஏற்படுத்தவில்லையே என வாழ்க்கை சரிதம் எழுதுபவர்கள் கேட்டனர்.அது அப்படித்தான்என மோஜுத் கூறினான்.

எனவே வாழ்க்கை சரிதம் எழுதுபவர்கள் மோஜுத்திற்காக ஒரு அருமையான மற்றும் விறுவிறுப்பான கதையை உண்டாக்கினர். ஏனெனில் எல்லா துறவிகளும் அவர்களுடைய கதையை கொண்டிருக்கவேண்டும், மற்றும் அந்த கதை கண்டிப்பாக கேட்பவரின் ஆசைக்கு தகுந்தபடி இருக்கவேண்டும், வாழ்க்கையின் உண்மைகளின்படி அல்ல,

மற்றும் இதரைப்பற்றி நேரடியாக பேச யாருக்கும் அனுமதியில்லை. அதனால்தான் இந்த கதை உண்மையாக இல்லை. இது ஒரு வாழ்வின் பிரதிபலிப்பு. இது சிறந்த சுபிகளில் ஒருவரது உண்மை வாழ்க்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக