my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

சனி, 16 ஜூலை, 2011

ஒரு ஞானம் அடைந்த மனிதன் மாயைக்குள் மீண்டும் இழுக்கப்பட்டால் என்ன நிகழும்?

தரையில் விழுந்த மலர்கள் மீண்டும் கிளைகளுக்கு எம்பி செல்வதில்லை. அது சாத்தியமற்றது. ஒரு ஞானம் அடைந்த மனிதன் மீண்டும் மாயைக்குள் செல்ல முடியாது. அதற்கு எந்த வழியும் இல்லை. எந்த வழியும் இல்லை என்பதற்கு பல காரணங்கள் உண்டு.
முதல் காரணம் ஒரு மனிதன் ஞானம் அடைந்த பிறகு அவன் இருப்பதில்லை. பிறகு திருப்புவது யார்?அங்கே ஞானம் இருக்கிறது. ஆனால், ஞானம் அடைந்த மனிதன் என்று எதுவும் இல்லை. ஞானம் என்பது அங்கே மிக தெளிவாக இருக்கிறது. அது வெறுமனே அடைந்தவன் என்று அங்கே எவனும் இருப்பதில்லை. அது வெறுமனே ஒரு வாய்மொழி பிரயோகம்தான், ஒரு ஏமாற்று பேச்சுதான். திரும்புவது யார்? திரும்ப கூடியவர் மறைந்து விட்டார். அதன் பிறகு, மாயைக்கு மீண்டும் திரும்புவதற்கு யார் இருக்கிறார்கள். அது மாயை என்பதை எப்போது நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்களோ, அதற்கு பிறகு அது அங்கே இருப்பதில்லை. அது இல்லை என்பதை எப்போது நீங்கள் தெரிந்து கொள்கிறீர்களோ, அப்போதே அது முடிந்து விடுகிறது. உங்களால் மீண்டும் எங்கே போக முடியும்? அதற்கு வாய்ப்பே இல்லை.
இந்த எண்னம் நம் மனதில் எழுவதற்கு காரணம் என்னவென்றால், அது போன்ற விஷயத்தை நம் வாழ்க்கையில் எப்போதும் பார்த்ததில்லை. ஒரு விஷயத்தை நாம் அடைந்தவுடன் கீழே விழுந்து விடுகிறோம். நாம் காதல் வசப்படுகிறோம். பிறகு அதிலிருந்து கீழே விழுந்து விடுகிறோம். நாம் காதலில் விழுகிறோம், பிறகு அதிலிருந்து வெளியே விழுந்து விடுகிறோம். நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதற்கு பிறகு கவலைப்படுகிறோம், நல்ல விதமாக நாம் உணர்கிறோம். பிறகு கெட்ட விதமாக உணர தொடங்குகிறோம். இரட்டை தன்மையை நாம் அறிகிறோம். அந்த இரட்டை தன்மை எப்போதும் மறைவதில்லை. அதைப் போன்று தான் ஞானம் அடைந்தவரும் மீண்டும் மாயைக்கு திரும்பி விடுவார்கள் என்கிற எண்ணம் நமக்கு யதார்த்தமாக ஏற்பட்டுவிடுகிறது.
இரட்டை தன்மை இல்லாத நிலையை உணர்வதுதான் ஞானம் என்பது. அதனால் தான், ஜென் குருமார்கள் சம்சாரத்தை நிர்வாணம் என்று சொல்கிறார்கள். இந்த உலகமே நிர்வாணம், மாயை என்பதும் உண்மை. அங்கே எந்த விதமான வித்தியாசமும் இல்லை. இது உண்மை என்பதோ, அது மாயை என்பதோ எதுவுமில்லை. எல்லாமே உண்மைதான். உண்மை மட்டும்தான். அங்கே நீங்கள் மீண்டும் திரும்ப முடியும்.
திரும்ப முடியாத மையத்திற்கு அப்பால் நீங்கள் சென்று விட்டீர்கள். எவருமே, எப்போதுமே திரும்ப விழுந்ததில்லை. இந்த மக்களை பற்றி நீங்கள் கவலை படாதீர்கள். உங்களை பற்றி மட்டுமே கவலைப்படுங்கள். முதலில் ஞானம் அடையுங்கள். அதன் பிறகு சறுக்கி விழ முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். ஞானம் அடைவது எளிதானது. சறுக்கி விழுவது மிக கடினமானது. நான் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் எப்போதுமே எனக்கு வெற்றி கிட்டியதில்லை.
post signature

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக