my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

சனி, 16 ஜூலை, 2011

சுவர்க்கம்- நரகம்-முக்தி

சுவர்க்கம் இரு பொருள் கொண்ட ஒரு சொல் .ஒன்று துக்கங்கள் அனைத்தும் விலகி சுகத்தை மட்டுமே பெறக்கூடிய ஒரு இடத்தை ஏற்படுத்தி கொண்டுவிட்ட நிலை .சுகத்தை அனைத்தயும் மட்டுமே திரட்டிக் காப்பாற்றி வைத்துக் கொண்டு விட்ட நிலை . பின்புறம் ,துக்கங்கள் மறைந்திருக்கும் .சென்றுவிட முடியாது .ஏன் எனில் அவை துக்கங்களின் மறு பகுதியே ,வெளிப்புறத்தை நம் கண் எதிரே படும்படி வைத்துவிட்டு மறுபுறம் தெரியாதபடி நம்மை உள்ளே மறைத்துக்கொண்டு இருந்துவிடுவது !அப்போது ,”எனது எல்லா நாணயத்திற்கும் ஒரு புறமே உள்ளது “என்று கூறிவிடலாம்.மறுபுறம் நம் கண்ணில் படாது .ஆனால் அது இருக்கிறது .வெகுவிரைவில் ,அந்த மறுபுறம் நம் அனுபவத்திற்கு எட்டிவிடும் .இதுவே திரும்பி வருவது என்பது.துக்கத்தை மறைத்து சுகத்தை முழுமையாகக் காப்பற்றி வைத்துக்கொள்ளும் நிலை .சுவர்க்கத்தின் ஒரு நிலை .இது மானசீக நிலையும் ,பௌதீக நிலையும் ,இரு நிலைகளும் கொண்டது .உலகில் இத்தகைய நிலைக்கொண்ட இடங்கள் உள்ளன .சுகம் அதிகமாக நிறைந்துள்ள இடங்களும் உலகில் உள்ளன ,இதற்கு நேர் எதிராக துக்கமே நிறைந்துள்ள இடங்களும் உலகில் உள்ளன .ஆனால் இந்த இடங்களை அடையும் மனிதன் தன்னிடம் சேகரிக்கப்பட்டுள்ள ஐஸ்வரியங்களை செலவழிக்கும் வரை அங்கிருந்து பிறகு திரும்பி வந்து விடுகிறான் .நரகத்தில் மனிதன் பாவத்தின் பொக்கிசமாக தன்னிடமுள்ளவற்றை செலவழித்து திரும்பி வருகிறான் .இங்கே ஒரு விஷயத்தை நினைவில் இருத்தவேண்டும் .
எப்பொழுது நீங்கள் பாவம் செய்தாலும் திட சிந்தனை குறைவினாலேயே ,திடம் இல்லாத காரணத்தினாலேயே செய்கிறிர்கள் .திருடமாட்டேன் என்று முடிவு செய்து இருந்தாலும் வைரம் எதிரே கிடைக்கிறது என்றால் சங்கற்பம் திருடாதே என்கிறது .ஆனால் வாசனை ,”வாய்ப்பை இழந்து விடாதே, விரதம் பிற்பாடு எடுத்துக்கொள்ளலாம் ,இந்த வைரம் பிறகு கிடைக்காது .விரதத்தை விட்டாலும் பிறகு பச்சாதாபம் கொள்ளலாம் ,பிராயசித்தம் செய்து கொள்ளலாம் ,இப்போது இதை விட்டுவிடாதே என்கிறது .
பாவங்கள் எப்போதும் திட சங்கற்பங்கள் குறைவினாலேயே ஏற்படுகிறது .மன உறுதி அற்றதால் ஏற்படுகிறது என்பதை நினைவில் வையுங்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக