my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

சனி, 16 ஜூலை, 2011

உங்களுக்கு உங்களைப் பற்றி என்ன தெரியும் ?

முதன் முதலாக வியன்னா நகருக்கு மின்சாரம் அறிமுகமான புதிதில் சிக்மன் பிரோயேட் கிராமிய நண்பர் ஒருவர் அவரைக்காண வந்து இருந்தார் . பிரோயேட் இரவு அவரை ஒரு அறையில் தங்க வைத்தார் .மின்சாரம் புதிது .அவருக்கு அது பற்றி பயம் .ஆகவே அவர் அறையில் உள்ள மின் விளக்கை உடனடியாக அணைக்க விரும்பினார். படுக்கையில் ஏறி நின்று வாயால் ஊதி பார்த்தார் .விளக்கு அணையவில்லை .விளக்கை அணைப்பதற்கு பிரோயேட் எழுப்பி கேட்கலாம் .ஆனால் அவர் மிகவும் மட்டமாக கருதிவிடலாம் .ஆகவே மின்விளக்கு பளிச்சென்று எரிய பயந்துக்கொண்டே தூங்கினார் . காலையில் பிரோயேட் வந்ததும் “என்ன இரவு நல்ல உறக்கமா? ” என்று கேட்டார் .
“எல்லாம் சரிதான் ஆனால் எவ்வாறு இந்த விளக்கை அணைப்பது ?” என்று கேட்டார் .பிரோயேடிக்கு அப்போதுதான் புரிந்தது இவருக்கு மின்சாரபயன்பாடு பற்றி ஏதும் தெரியாது என்பது .”இங்கே வா சுவரில் உள்ளது சுவிட்ச் ,இதை இப்படி அழுத்தினால் போதும் விளக்கு அணைந்துவிடும் .என்றார் . “பட்டனை தட்டினால் போதுமா ,இப்போது புரியுது கரண்ட் என்றால் என்னவென்று ” என்றாராம் .
மின்சாரம் என்பதைப்பற்றி உண்மையில் உங்களுக்கு என்ன தெரியும் ? பட்டனை தட்டுவது தன் தெரியும் .அன்பை ,காதலை பற்றி என்ன தெரியும் ?உள்நோக்கிசென்று அதன் உணர்வுத்தளத்தில் இவற்றை எல்லாம் சந்தித்து அதன் இயக்கப்போக்கை அறிந்து கொண்டீர்களா ?யோசித்து பாருங்கள் .எதுவும் தெரியாது .உங்களுக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியாது .உங்களின் மனதைப் பற்றி எதுவும் தெரியாது .வாழ்வின் உள்ளடக்கம் பற்றி எதுவும் தெரியாது .அனாதிகாலமாக இந்த இருப்புலகத்தில் தான் நீங்கள் மையம் கொண்டு உள்ளீர்கள் ..தொடர்ந்து பல ஜென்மங்களாக நீங்கள் வாழ்ந்தபோதும் உங்களை நீங்களே உணர்ந்து கொள்ளாத நிலையில் ,மிக சொற்ப காலத்தில் உங்கள் மனைவியாகட்டும் ,மக்களாகட்டும் அவர்களை எவ்வாறு உங்களால் புரிந்துக்கொள்ள முடியும் . மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது ?கோபம் எங்கிருந்துவருகிறது ? அதன் உற்பத்தி களம் எங்கே ? எதுவும் தெரியாது .ஒரு முறை மகிழ்ச்சியாக இருக்கின்றவர் அடுத்த கணத்தில் சோகமாக மாறிவிடுகின்றார் .ஏன்?என்னதான் நடைபெறுகிறது ?அதன் ஆரம்ப புள்ளி எங்கே ?அதன் ஆதாரசுரிதி எங்கே ? உங்களுக்கு தெரியாது .
உங்களிடம் எழும் இது போன்ற உணர்வுகளின் இயக்கபோக்கை உணர்த்து கொள்ளாத நிலையில் நீங்கள் எவ்வாறு மற்றவர்களின் கோபதாபங்களை அறிந்துகொள்ள முடியும் ?உங்களின் மனதை உங்களின் இருப்புணர்வை சரியாக அறிந்துகொண்டுவிட்டால் மற்றவர்களின் மனதை இருப்புணர்வை நீங்கள் புரிந்துகொள்ள முடியும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக